வேகவைத்த வேர்க்கடலை/Boiled peanuts

   

   வெண்மையாகவும்,லேசான பிங்க் நிறமும் கலந்த பச்சை வேர்க்கடலை.

இந்த வாரமும் கொஞ்சம் வேர்க்கடலை வாங்கி பச்சையாக சாப்பிட்டதுபோக மீதியைத் தண்ணீரில் வேகவைத்தும் சாப்பிட்டாச்சு.இதன் செய்முறை புதியவர்களுக்கு(சமையலில்) உபயோகமாகும் என நினைத்தே பதிவிடுகிறேன்.

பச்சை வேர்க்கடலையை சுத்தம்செய்து,கழுவிவிட்டு (அந்த வேலை இங்கில்லை.வாங்கும்போதே அவ்வளவு சுத்தமாக இருக்கும்)உரிப்பதற்கு செய்வதுபோல் லேசாக அழுத்தினால் மேல் பகுதியில் சிறு கீறல் விழும்.கீறல் விழுவதால் உப்புத் தண்ணீர் உள்ளே போகவும்,சூடான நீர் உள்ளே செல்வதால் கடலையும் சீக்கிரமே வெந்துவிடும். இதேபோல் எல்லா கடலையையும் செய்துகொண்டு ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு மூடி வேக வைக்கவும்.

ஒரு 15 நிமி கழித்து ஒன்றை எடுத்து உரித்து,சாப்பிட்டுப்பார்த்து வெந்திருந்தால் எடுத்துவிடலாம்.இன்னும் வேக வேண்டுமானால் சிறிது நேரம் வேக வைத்து எடுக்கவும்.

வெந்த கடலை உப்புத்தண்ணீர் கோர்த்துக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.இதுவுமே அடுத்த நாள் சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்.

இதுபோல் நிறைய வேகவைத்து தோலுட‌னே நன்றாக வெயிலில் காயவைத்து எடுத்து வைத்துகொண்டால் வருடம் முழுவதுமே சாப்பிடலாம். செய்ய ஆசைதான்.அதற்கு வேர்க்கடலை வேண்டும்,அதற்கும் மேலாக வெயிலும் வேண்டும்.

Advertisements

4 பதில்கள் to “வேகவைத்த வேர்க்கடலை/Boiled peanuts”

  1. திண்டுக்கல் தனபாலன் Says:

    பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி… வாழ்த்துக்கள்…

  2. chollukireen Says:

    lதேய்த்துக் குளிக்க வைத்ததுபோல மல்லாக்கொட்டை. வாங்கிவா.வேகவை என்று சொல்கிறார்ப் போல உள்ளது. செய்துவிட்டால்ப் போகிறது.

    • chitrasundar5 Says:

      காமாட்சிமா,

      ஆமாம் அம்மா,அப்படித்தான் கிடைக்கிறது.நம் விருப்பம்போல் பொறுக்கியும் எடுத்துக்கொள்ளலாம்.வேலைகளுக்கிடையே வந்து போவது மகிழ்ச்சியாக உள்ளது.அன்புடன் சித்ரா.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: