அவியல்

பிடித்தமான எல்லா காய்களையும் அவியலுக்குப் பயன்படுத்தலாம்.அவியல் என்றாலே காய்களை நீளவாக்கில் நறுக்கிப்போட வேண்டும் என்பார்கள்.நானும் அவ்வாறே போட்டுவிடுவது.

வாழைக்காய்,உருளை, அவரை, காராமணி,மாங்காய், கத்தரிக்காய், முருங்கை,வெள்ளைப்பூசனி போன்றவற்றிலிருந்து கொஞ்சம்கொஞ்சமாக நறுக்கிச் சேர்த்துள்ளேன்.

காய்களை ரொம்பவே குழைய விடாமல் சரியான பதத்தில் வேகவிடவும். விருப்பமானால் மஞ்சள் தூள் சேர்க்கலாம். மாங்காய்,தயிர் சேர்ப்பதால் லேசான புளிப்புச்சுவையுடன் இருக்கும்.இவை இல்லாவிட்டால் சிறிது புளித்தண்ணீர் விடலாம்.

அவியலுக்கு தேங்காயெண்ணெய் விடுவாங்க.எனக்கு தேங்காயெண்ணெய் பழக்கமில்லையாதலால் (சமையலில்) நல்லெண்ணெய் சேர்த்திருக்கிறேன்.

தேவையானவை:

காய்கறிகள் நறுக்கியது_2 கப் அளவிற்கு
புளித்த‌ தயிர்_1/2 டம்ளர்
கறிவேப்பிலை_ஒரு கொத்து
எண்ணெய்_ஒரு டீஸ்பூன்
உப்பு_தேவைக்கு

அரைக்க:

தேங்காய்த்துண்டு_3
சீரகம்_1/2 டீஸ்பூன் அளவிற்கு
பச்சை மிளகாய்_2 (ஒன்று காரமானது,மற்றொன்று காரமில்லாதது)

செய்முறை:

காய்களை நன்றாகக் கழுவிவிட்டு விருப்பமான வடிவத்தில் நறுக்கவும். பொதுவாக‌ நீளவாக்கில்தான் நறுக்குவாங்க.

ஒரு கனமான பாத்திரத்தில் காய் வேகுமளவு மட்டும் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் காய்களைப்போட்டு சிறிது உப்பு போட்டு மூடி வேக வைக்கவும்.தீ மிதமாகவே இருக்கட்டும்.தண்ணீர் குறைவாக இருப்பதால் காய் தீய்ந்துபோக வாய்ப்புண்டு.வேகும்போதே இரண்டொருதரம் கிளறி விடவும்.

இதற்கிடையில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றைத் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துத் தயிருடன் கலந்து வைக்கவும்.

காய்கள் வெந்தபிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய்தயிர் விழுதைச் சேர்த்துக் கிளறி சிறிது கொதிக்கவிட்டு இறக்கவும். நீண்ட நேரம் கொதிக்க விட வேண்டாம்.

இறுதியாக எண்ணெயைக் காய்ச்சி விட்டு,கறிவேப்பிலையைப் போடவும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . 10 Comments »

10 பதில்கள் to “அவியல்”

 1. http://mahikitchen.blogspot.com/ Says:

  Chitra akka, how are you?

  Delicious avial! I have seen people adding a small piece of bitter gourd in avial..I too add bitter gourd! 🙂 😉

 2. திண்டுக்கல் தனபாலன் Says:

  செய்து பார்ப்போம்… மேலே படம் தான் வரவில்லை…

  நன்றி…

 3. chollukireen Says:

  அவியலுக்கு ஆகாத காய்களே இல்லை என்று வசனம். நன்றாக இருக்கிறது செய்முறை.

  • chitrasundar5 Says:

   காமாஷிமா,

   எதுகை+மோனையுடனான பழமொழி சூப்பர்.இனி எல்லா காய்களையும் போட்டு செய்திட வேண்டியதுதான்.அதனால் அந்த வரியையே நீக்கிவிடுகிறேன்.பகிர்வுக்கு நன்றி அம்மா.அன்புடன் சித்ரா.

   .

 4. ranjani135 Says:

  அவியல் குறிப்பு பார்த்தவுடன் பழைய நினைவு ஒன்று. என் பெண் கல்யாணத்தில் நம் சாப்பாடு எதுவுமே செய்ய முடியவில்லை. மாப்பிள்ளை கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்பதால் தோழி ஒருவரின் துணையுடன் அவர்கள் முறைப்படி, கர்நாடக சமையல் காரர்களை வைத்தே சமையல்.
  தெரியாத்தனமாக என் கணவர் சமையற்காரரிடம் ‘அவியல் செய்யத் தெரியுமா?’ என்று கேட்டு வைக்க, அவர் பண்ணியிருந்த அவியல்….’கர்நாடகா அவியல்’ என்று என் வீட்டார்கள் கிண்டலடிக்க… அசடு வழிய நான் நின்றது நினைவுக்கு வந்தது!

  காமாட்சி அம்மாவைப் பற்றி சைபர்சிம்மன் எழுதி இருப்பதைப் படித்தீர்களா? உங்கள் வலைத்தளம் மூலம் தான் அவர் எனக்கு அறிமுகம் ஆனார்.

  • chitrasundar5 Says:

   ரஞ்சனி,

   கல்யாண கலாட்டா நல்லாருக்கு.ஏற்கனவே கல்யாண சமையலில் ஏற்பட்ட பிரச்சினைப் பற்றி நீங்க நகைச்சுவையாக எழுதியதைப் படித்ததாக ஞாபகம். இங்கு இவர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை.எனவே நெட் பக்கம் வர முடிய‌வில்லை.

   ’80 வ‌யது பாட்டியின் வலைப்பதிவு!’_படிச்சிட்டு வந்தாச்சு.காமாஷி அம்மாவைப்பற்றி அப்படியே எழுதியிருக்காங்க.அறிமுகப்படுத்தியதில் சந்தோஷம்.இந்த வயதில் எவ்வளவு பெரியபெரிய பதிவுகள்!அதுவும் படிக்க சுவாரசியமாக.நான் பதிவு கொஞ்சம் பெரியதாக வருகின்ற மாதிரி இருந்தால் வரைவில் போட்டுவிடுவேன்.

   “உங்கள் வலைத்தளம் மூலம் தான் அவர் எனக்கு அறிமுகம் ஆனார்”_ அப்படியா!எப்போது?கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி.நன்றி.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: