பேக்(ட்)டு உருளைக்கிழங்கு/Baked potato


தேவையானவை:

உருளைக்கிழங்கு_2
ஆலிவ் ஆயில்_ஒன்றிரண்டு டீஸ்பூன்
உப்பு(Sea salt)_கொஞ்சம்

ஃபில்லிங்/filling செய்ய‌

வெண்ணெய்(Butter)_ஒரு சிறு துண்டு
பொடியாக நறுக்கிய வெங்காயம்
வெங்காயத்தாள்_1
துருவிய‌ ஷார்ப் செடார் சீஸ்/Shredded sharp cheddar cheese_கொஞ்சம்
சல்ஸா/Salsa_2 டீஸ்பூன் அளவிற்கு
Sour cream_கொஞ்சம்

உருளைக்கிழங்கை முதலில் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும்.ஒரு சிறு அழுக்கோ,சொத்தையோ இல்லாமல் ஒரு ப்ரஷ்ஷால் நன்றாகத் தேய்த்துக் கழுவ‌ வேண்டும்.

துணி துவைக்கும் ப்ரஷ் வாங்கும்போதே நான்கைந்தாக வாங்கி வைத்துக்கொண்டால்,தோலுடன் சமைக்கக்கூடிய உருளை, கேரட், முள்ளங்கி,வள்ளிக்கிழங்கு போன்றவற்றைத் தேய்த்துக்கழுவ பயன்படுத்திக்கொள்ளலாம்.

கிழங்கைத் தோலுடனே   சாப்பிடப்போகிறோம் என்பதால்தான் இத்தனை சுத்தம் தேவைப்படுகிறது.

கழுவிய பிறகு ஈரம்போகத் துடைத்துவிட்டு ஒரு ஃபோர்க் ஸ்பூனால்/Fork spoon அங்கங்கே குத்திவிட்டு எண்ணெயைக் கிழங்கு முழுவதும் தடவிவிட்டு,உப்பையும் போட்டுத் தேய்த்துவிடவும்.ஆலிவ் எண்ணெயும், உப்பும் சேர்ந்து சாப்பிடும்போது க்ரிஸ்பியாக‌ இருக்கும்.

படத்திலுள்ளதுபோல் அவனில் நடு வரிசையில்/Middle rack ல் வைத்து 350 டிகிரியில் ஒரு மணி நேரம் பேக்/ Bake செய்யவும்.கிழங்கிற்கு கீழே உப்பு,எண்ணெய் சிந்தாமலிருக்க Aluminum foil அல்லது குக்கீ ஷீட்/cookie sheet  வைக்கவும்.இடையில் 1/2 மணி நேரம் கழித்து கிழங்கை ஒருமுறைத் திருப்பிவிட‌வும்.

கிழங்கு வெந்துவிட்டதா எனத் தெரிந்துகொள்ள கிழங்கை லேசாக அழுத்திப்பார்து அமுங்கினால் எடுத்துவிடலாம்.தோலின் நிறம்கூட‌ மாறியிருக்கும்.

வெந்த பிறகு வெளியே எடுத்து மேல் பகுதியில் கத்தியால் லேசாக நீளவாக்கில் கீறி விடவும்.

பிறகு கிழங்கின் இரண்டு பக்கமும் பிடித்து லேசாக அழுத்தி அதில் பட்டரை வைத்து அதன்மேல் சல்ஸா,சோவ‌ர் கிரீம்,வெங்காயம்,வெங்காயத்தாள்,சீஸ் என ஒவ்வொன்றாக வைத்து ஒரு அலுமினம் ஃபாயிலால் சுருட்டி ஃபோர்க் ஸ்பூனால் கலந்து சாப்பிட சுவையோ சுவைதான்.

முழு கிழங்கு,ஃபில்லிங் எல்லாவற்றையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

5 பதில்கள் to “பேக்(ட்)டு உருளைக்கிழங்கு/Baked potato”

 1. திண்டுக்கல் தனபாலன் Says:

  வித்தியாசமாக இருக்குங்க… செய்து பார்க்க சொல்கிறேன்… நன்றி…

  • chitrasundar5 Says:

   திண்டுக்கல் தனபாலன் ,
   நாம கெழங்கு வகைகளை சுட்டு அப்படியே சாப்ட்ருவோம்.இவங்க அதோட சில பொருள்களை சேர்த்து சாப்பிடுறாங்க.அவ்வளவுதான். செய்து,சாப்பிட்டுப் பாருங்க.நல்லாவே இருக்கும்.வருகைக்கு நன்றி.

 2. chollukireen Says:

  விவரமா அழகாக படங்களுடன் செய்முறை கொடுத்திருக்கிறாய்.ருசிக்கு கேட்கவே வேண்டாம். ஒருநாள் செய்யச் சொல்லி இருக்கிறேன். வித்தியாஸமான உருளை.

  • chollukireen Says:

   ருசிக்கு திருத்திக் கொள்ளவும்.

  • chitrasundar5 Says:

   காமாட்சிமா,

   வந்த புதுசுல வாங்கி பிடிக்காம தூக்கிப்போட்டுட்டேன்.இப்போ ரொம்பவே பிடிச்சுப்போச்சு.பட்டர்,சல்ஸா,sour cream இருக்கும்படி பாத்துக்கோங்க.மத்த பொருளெல்லாம் நம் விருப்பம்தான்.கிழங்கின் அளவைப்பொறுத்து நேரம் கூடக்குறைய ஆகும்.செஞ்சிட்டு பேத்திகளுக்கு பிடிச்சுதான்னு சொல்லுங்க. அன்புடன் சித்ரா.

   ரசிக்க,’ருசிக்கு’ மாத்திட்டேன்.நன்றிமா.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: