கடையில் வாங்கியதையுமா!

எனக்குப் பிடித்ததாக இருந்தால் (உணவு உட்பட) ஃபோட்டோ எடுத்து வைத்துக்கொள்வேன். அவ்வாறு எடுத்ததுதான் இந்த ஃபோட்டோ.

Doughnut__மைதாவில் செய்து எண்ணெயில் பொரித்தெடுத்து,சர்க்கரைப் பாகில் தோய்த்து…சொல்லும்போதே இனிப்பா இருக்கில்லையா!

போன சனிக்கிழமை மாலை Krispy Kreme லிருந்து ஒரு டஜன் டோனட் வாங்கிவந்தோம்.நிறைய வெரைட்டியில் கிடைக்கும். அதில் ஒருசிலவற்றை மட்டுமே நாங்க வாங்குவோம்.பார்க்கவே அழகா இருக்கில்ல!

ரசிச்சு & விரும்பி சமைக்க ஆரம்பித்த‌பிறகு நமக்குத்தான் பச்சைமிளகாய்கூட அழகாகத் தெரிகிறது,அதன் காரத்தைக்கூட வியந்து ‘என்ன ஒரு அருமையான காரம்’ என வியக்கத்தோன்றுகிறது.

எடையைக் குறைக்கனும்,இதை சாப்பிட்டால் அது வரும்,அதை சாப்பிட்டால் இது வரும்,BP எகிறும், கொலஸ்ட்ரால் கூடும் என்ற பிரச்சினையெல்லாம் இல்லாதவர்கள் ஒரு பிடிபிடிக்கலாம்.சூப்பரா இருக்கும்.

சரி என்றைக்காவது ப்ளாகிற்கு உதவுமே என்று சில படங்கள் எடுத்தேன்.எங்க வீட்டில் இவரும் பொறுமையாக இருந்தார், வேறு வழியில்லை,எடுத்து முடிக்கட்டுமென்று.

‘சரி தலைப்புக்கு வாங்க’ என்பது கேட்கிறது.சொல்லிவிடுகிறேன்.மகள் அன்று காலையிலிருந்து மாலைவரை பள்ளியில் band practice செய்து முடித்துவிட்டு வியர்க்க & விறுவிறுக்க வீட்டிற்கு வந்தாள்.பார்த்தாள் நான் ஃபோட்டோ எடுப்பதை. இதற்குமேல் பொறுக்க முடியாது என்பதுபோல் ” ப்ளாகுக்கு ஃபோட்டொ எடுக்கிறேன் பேர்வழின்னு அம்மா சமைப்பதைத்தான் கொடுக்க மாட்டாங்க,கடையில் வாங்கியதையுமா?”,என்று சொல்லிக்கொண்டே வந்து எடுத்துக்கொண்டாள்.அதுவும் சரிதானே.அதை முதல் படத்தில் பார்த்தால் தெரியும்.

14 பதில்கள் to “கடையில் வாங்கியதையுமா!”

 1. திண்டுக்கல் தனபாலன் Says:

  அடுத்த பகிர்வில் அப்படியே செய்முறையும் சொல்லிடுங்க…

 2. http://mahikitchen.blogspot.com/ Says:

  🙂
  This happens at every food blogger’s house, U r not alone! hahahaha! 😀

  I love Dunkin Dougnuts…yum,yum! 😛 Have to check whether we have this shop nearby, of course, after coming there! 😉

  • chitrasundar5 Says:

   துணைக்கு நிறைய ஆட்கள் இருப்பதில் சந்தோஷம்.ஆனாலும் ஐ ஆப்பிளில் ஆப்பிள் கட்டர் வந்ததெல்லாம் தெரியும் மகி.

   வாங்க,வாங்க,வந்து தேடிப்பார்த்து எங்கு இருக்குன்னு சொல்லுங்க.Dunkin Donuts ஐ நான் சாப்பிட்டதில்லை.வருகைக்கு நன்றி மகி.

 3. ranjani135 Says:

  அன்புள்ள சித்ரா,

  உங்களது இந்தப் பதிவு பற்றி இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.

  வருகை தருக, ப்ளீஸ்!
  இன்னொரு surprise உங்களுக்கு அங்கே!

  http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_10.html

  நன்றி!

  • chitrasundar5 Says:

   சிறிது நேரம் கழித்து போய்ப்பார்த்துவிட்டு வருகிறேனே.காலை உணவு, எனக்கில்லை,வீட்டுக்காரருக்குத்தான்.

   • ranjani135 Says:

    நிதானமாக பாருங்கள். ஜஸ்ட் ஒரு அறிவிப்பு அவ்வளவுதான்.

   • chitrasundar5 Says:

    நீங்க எப்படியும் தூங்கப்போய்ருப்பீங்க,அப்படியே walking ஐயும் முடித்துவிட்டு வந்து பின்னூட்டமிடலாம் என அதையும் முடித்துவிட்டு வந்து பார்த்தால், ஹி…ஹி…ஏற்கனவே பதில் வந்துவிட்டிருக்கிறது.

    அழகா அறிமுகப்படுத்தி இருக்கீங்க.சமைத்ததை அப்படியே எழுதுவதற்கே எனக்கு ஏகத்துக்கும் பிரச்சினை.எல்லோரது ப்ளாக்குக்கும் போய்ட்டு,படித்து அவர்களை அறிமுகம் செய்வது என்றால் சும்மாவா?வாழ்த்துக்கள்.

    ‘சீக்கிரமே இன்னொரு ப்ளாக் ஆரம்பிக்க இருக்கும் இவருக்கு இப்போதே வாழ்த்துக்கள்’_வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

 4. Maniraj Says:

  வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள் !

 5. Cheena ( சீனா ) Says:

  அன்பின் சித்ரா – டோநட் படங்களும் அருமை – கட்டுரையும் அருமை – நல்வாழ்த்துகள் சித்ரா – நட்புடன் சீனா

 6. Dr.M.K.Muruganandan Says:

  ரசனையோடு பகிர்ந்திருக்கிறீர்கள்


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: