அரைத்துவிட்ட மீன் குழம்பு/வறுத்தரைச்ச மீன் குழம்பு/Araithu vacha fish kuzhambu

மீன் குழம்பிற்கு சிறுசிறு மீன்களாக இருந்தால் நன்றாக இருக்கும்.நான் செய்திருப்பது நடுத்தர அளவிலான வெள்ளை வௌவால் மீனில்(White pomfret).இக்குழம்பை சாதாரண மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.

தேவையானவை:

மீன்_1
புளி_சிறு எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம்_7
தக்காளி_பாதி
பூண்டு_பாதி

வறுத்து அரைக்க:

கொத்துமல்லி விதை_2 கைப்பிடி
காய்ந்த மிளகாய்_5 (காரத்திற்கேற்ப கூட்டிக் குறைத்துக்கொள்ளவும்)
மிளகு_5
சீரகம்_1/2 டீஸ்பூன்
மஞ்சள்_சிறு துண்டு
வெந்தயம்_சிறிது
தேங்காய் பூ_2 டீஸ்பூன்

தாளிக்க:

நல்லெண்ணெய்
வடகம்
வெந்தயம்
கறிவேப்பிலை

செய்முறை:

மீனை சுத்தம் செய்து,துண்டுகளாக்கி,உப்புபோட்டு நன்றாகக் கழுவிவிட்டு நீரை வடிய வைக்கவும்.

புளியை மூழ்கும் அளவு தண்ணிரில் ஊற வைக்கவும்.

வறுத்து அரைக்க வேண்டியதை(மஞ்சள் தவிர்த்து)வெறும் வாணலில் தனித்தனியாக சிவக்க வறுக்கவும்.ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடிக்கவும்.அல்லது தண்ணீர்விட்டு மைய அரைத்தெடுக்கவும்.

வெங்காயம்,பூண்டு உரித்து விருப்பம்போல் அரிந்து/தட்டி வைக்கவும்.தக்காளி நறுக்கி வைக்கவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டு,தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் புளித்தண்ணீரைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றி,பொடித்து வைத்துள்ள பொடி/அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து,உப்பு போட்டு மூடி நன்றாக கொதிக்க வைக்கவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்தாற்போல் வரும்போது மீன் துண்டுகளைச் சேர்த்து,மிதமானத் தீயில் கொதிக்க விடவும்.தீ அதிகமானால் மீன் உடைந்துவிடும்.

ஒரு 5 நிமி கொதித்த பிறகு மீன் துண்டுகளைத் திருப்பிவிட்டு,மேலும் ஒன்றிரண்டு நிமி கொதிக்க விட்டு இறக்கிவிடவும்.

இது சாதம்,இட்லி,தோசை இவற்றுக்கு சூப்பராக இருக்கும்.

Advertisements
அசைவம், குழம்பு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . 4 Comments »

4 பதில்கள் to “அரைத்துவிட்ட மீன் குழம்பு/வறுத்தரைச்ச மீன் குழம்பு/Araithu vacha fish kuzhambu”

  1. திண்டுக்கல் தனபாலன் Says:

    …ஸ்……ஸ்……ஸ்… அருமையாக இருக்கு…

    நன்றி…

  2. Mahi Says:

    //ஒன்னும் சத்தத்தையே காணோம்!வந்த களைப்பு? / வருவதற்கான ஏற்பாடு? /வின்(ட்)டர் முடிந்து வருவதாக உத்தேசம்? எதுன்னு தெரியல// எப்படி கண்டு புடிச்சீங்க, நான் வந்தாச்சுன்னு?! 🙂
    நீங்க குடுத்த 3 சாய்ஸ்-ல முதல் சாய்ஸ்தான்..வந்த களைப்பு மட்டுமே. வருவதற்கான ஏற்பாட்டில் இன்னும் இறங்கவில்லை, பெரிய உத்தேசங்களும் இல்லை. 🙂
    நேற்று மதியம்தான் வந்தேன் சித்ராக்கா! ஜெட் லாக் வராமல் இருக்க முயற்சிக்கிறேன். அதுதான் சைலன்ட்டா எல்லா ப்ளாகும் மேய்ஞ்சுகிட்டு(!) இருக்கேன். 😉 🙂
    மீன் குழம்பு பார்க்கவே சூப்பரா இருக்கு.

    • chitrasundar5 Says:

      மகி வந்தாச்சா!எனக்குத் தெரியாம எப்ப‌டி வரமுடியும்?சித்ராவா ……?

      காலையில்(ஊரில்)வந்து பார்ப்பீங்கன்னு நான் சும்மாதான் கேட்டுவச்சேன். ஆனால் நிஜமாவே வந்தாச்சு,பின்னூட்டம் பார்த்ததும் மகிழ்ச்சி.நல்லா தூங்கி ரெஸ்ட் எடுங்க.

      புரட்டாசி முடிந்ததும் முதல் வேலையாக மீன் குழம்பு வச்சாச்சு.வருகைக்கு நன்றி மகி.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: