தீபாவளி வாழ்த்து

வலையுலக நண்பர்கள்,வருகை புரிவோர் அனைவருக்கும் இனிய  

                                        தீபாவளி   நல்வாழ்த்துக்கள்.     

இந்த தீபாவளிக்கு செய்த அதிரசம்.படத்தைப் பெரியதாக்கிப் பார்த்தால்தான் அதிரசம் எவ்வளவு ஜூஸியாக இருக்குன்னு தெரியும்.

எங்கள் ஊர்பக்கம் அதிரசம் இல்லாமல் தீபாவளி கிடையாது.தினை அல்லது பச்சரிசியின் ஈர மாவுடன் வெல்லம் அல்லது சர்க்கரை பாகு சேர்த்து செய்வாங்க.மற்ற எல்லா இனிப்பை விடவும் இதற்குத்தான் மவுசு அதிகம்.

கேதாரகௌரி விரத நோன்பு அன்று அதிரசம் செய்வாங்க.சாமிக்குப் படைக்கும் அதிரசங்களை அழுத்திப் பிழியாமல் அப்படியே எடுத்து வைப்பாங்க.மற்றதை எண்ணெயிலிருந்து எடுத்ததும் ஒரு படியால் அழுத்திப் பிழிந்து எடுத்து வைப்பாங்க.

கீழே படத்திலிருப்பது அப்படி(யே) எடுத்து வைத்ததுதான்.

இதன் செய்முறை இங்கே உள்ளது.

மீண்டும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிப்பு வகைகள், Uncategorized இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 16 Comments »

16 பதில்கள் to “தீபாவளி வாழ்த்து”

 1. ranjani135 Says:

  அன்புள்ள சித்ரா,

  அதிரசத்துடன் கூடிய தீபாவளி வாழ்த்துக்கள் ஜூஸி ஜூஸியாக பிரமாதமாக இருந்தது.
  அதிரசத்தின் இனிப்பு உங்கள் வாழ்க்கையில் என்றென்றும் நிலைத்திருக்க இந்த நன்னாளில் இறைவைனைப் பிரார்த்திக்கிறேன்.

  அன்புடன்,
  ரஞ்ஜனி

  • chitrasundar5 Says:

   வேண்டுதல் முறை நல்லாருக்கு.உங்கள் வாழ்க்கையும் இன்றுபோல் என்றும் இதே மகிழ்ச்சி+உற்சாகத்துடன் இருக்க வேண்டிக்கொள்கிறேன்.பிரார்த்தனைக்கு நன்றி பல.

 2. திண்டுக்கல் தனபாலன் Says:

  தங்களின் இணைப்பில் சென்று, செய்முறையை வீட்டில் குறித்து வைத்துக் கொண்டார்கள்….

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அம்மா…

  நன்றி…

 3. Mahi Says:

  Super perfect Athirasam Chitra Akka, do send some here…I miss these! 😉

  Whenever I try making Athirasam, not getting it right…avvvv!

  Thanks for the wishes n Hope you had a happy Diwali as well!

  • chitrasundar5 Says:

   உங்களுக்கில்லாததா,எடுத்துக்கோங்க.அட்ரஸ் கிடைக்கட்டும், அனுப்பிவிடுகிறேன்.

   நேற்று மதிய தீபாவளி,நல்லாவே இருந்துச்சு.உங்க வீட்டு இனிய தீபாவளியைப்பற்றியும் எழுதுங்க.வருகைக்கு நன்றி மகி.

   • Mahi Says:

    //அட்ரஸ் கிடைக்கட்டும், அனுப்பிவிடுகிறேன்.// அட்ரஸ்தானே சித்ராக்கா? “மகி, ஆரஞ்ச் கவுன்ட்டி குறுக்கு சந்து, கலிஃபோர்னியா” – அப்படின்னு போடுங்க! சுத்தியடிச்சு எங்கிட்ட வந்து சேர்ந்துரும்! 😀 😉 🙂

    உங்க மெயில் ஐடி எங்கயுமே காணமே? இருந்தா ஒரு மெய்லை தட்டி விட்டிருப்பேன். அடுத்த கமென்ட்டில் ஐடிதரேன், படிச்சுட்டு கிழிச்சிருங்க..ஐ மீன், டெலிட் பண்ணிருங்க, சரியா? 🙂

   • chitrasundar5 Says:

    ஆரஞ்ச் கவுன்ட்டில ஏகத்துக்கும் குறுக்கு சந்து இருக்கறதால(குறுக்குசந்தின் # ஆவது கொடுத்திருக்கலாம்)நேத்து அனுப்பிய பார்சல் இன்று திரும்பியாச்சு.அதுவும் இந்த மழைக்கு நல்லதாப்போச்சு.

    நாங்க ஒரு வருஷம் ஆரஞ்ச் கவுன்டியில கார்டன் க்ரூவில்,ப்ளாக் அட் ஆரஞ்ச் ஷாப்பிங் மால் பக்கமாக இருந்தோம்.ஏன்னே தெரியல,அங்கிருக்க எங்களுக்குப் பிடிக்கல.சான்ஸ் கிடைத்ததும்,திரும்பவும் பழைய இடத்துக்கே வந்தாச்சு.

    நேற்றே ஐடியை டெலிட் பண்ணியாச்சு.நன்றி மகி.

 4. chollukireen Says:

  அதிரஸம் ஜோராஇருக்கு. வாழ்த்துகள்.அன்புடன்

 5. Mahi Says:

  //கார்டன் க்ரூவில்,ப்ளாக் அட் ஆரஞ்ச் ஷாப்பிங் மால் பக்கமாக // சித்ராக்கா, நீங்க சொல்லும் இடம் பற்றி எனக்குத் தெரியவில்லை, நாங்கள் இருப்பது அந்த இடத்திலிருந்து 20 மைல் தள்ளி! மே பி, நீங்க இருந்தது சிட்டிக்குள்ளாக இருக்கலாம், எங்க வீடு இருப்பது ஒரு மலைச்சாரலில்(foothill ranch -என்று தேடிப்பாருங்கோ! :)) இந்தப் பக்கம் ஏரியா மிகவும் நன்றாக இருக்கும். இங்க வந்திருந்தால் நீங்க இங்கயே தங்கியிருந்திருக்கக் கூடும்! 😉

  பி.கு. இந்தப் பதிவையும் படித்துவிட்டு நீக்கி விடுங்கள், பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாது என்று இப்ப,இப்ப,இப்பத்தான் ஒரு அக்கா சொல்லியிருக்காங்க! ;):)

  • chitrasundar5 Says:

   நான் அப்பவே டெலீட் பண்ணியாச்சு,அதுதான் போகமாட்டிங்கிது.

   நாங்க இருந்தது சிட்டிக்குள்ளதான்.ரொம்பவே பிஸியான ஏரியா.உங்க பகுதியைப் பார்த்தேன்,மலைச்சரிவு மாதிரிதான் இருக்கு.உங்க ப்ளாக் வீடியோ பார்க்கும்போதுகூட நினைப்பேன்,எதிர்த்தாப்பல,வரிசையாக வீடுகளைக் கானோமே என்று.பார்க்கவே அழகாக இருக்கும்னு நினைக்கிறேன்.மழை சமயத்தில் நிலச்சரிவு எல்லாம் வராதே?


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: