சாத்தணூர் அணை/Sathanur Dam

ஒருசில பழைய படங்களின் பாடல் காட்சிகளில் இந்த அணையைப் பார்த்திருப்பீர்கள்.

2009 ல் இந்தியாவுக்கு சென்றபோது ஒருசில இடங்களுக்கு சென்று வந்தோம். அதில் ஒன்றுதான் திருவண்ணாமலைக்குப் பக்கத்திலுள்ள சாத்தணூர் அணை.நல்ல கோடை காலத்தில் அங்கு சென்றபோது இதமாக இருந்தது. அவ்விடம் முழுவதுமே சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருந்தது.

நிறைய படங்கள் எடுத்தேன்.எடுத்தாலும் வீட்டு குட்டீஸ்கள் அவற்றில் இருந்ததால் அவர்கள் இருப்பதைத் தவிர்த்து,ஒருசிலவற்றை மட்டுமே பதிவிடுகிறேன்.

போகும்போதே  வழியில்,ஒரு ஊரில் நின்றிருந்த சில ஆடுகள்.

தொலைவில் வயலில் மேலும் சில ஆடுகள்.

நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு உள்ளே சென்றபோது நாய் ஒன்று படுத்துக்கொண்டு   அழகாக போஸ் கொடுத்தது.

ஆங்காங்கே படத்திலுள்ளதுபோல் அழகிய வேலைப்பாடுகளுடன்கூடிய காட்சிகள் இருந்தன.

குழந்தைகள் விளையாட நிறைய இடங்கள் இருந்தன.அவற்றில் ஒன்றுதான் கீழே படத்திலிருப்பது..

கொஞ்ச தூரம் உள்ளே போனதுமே நல்ல மழை.எல்லா இடங்களும்   நனைந்துவிட்டது.இவ்வளவு தூரம் வந்தும் சுற்றிப்பார்க்க முடியாமல் போகுமோ என நினைத்தால்,சிறிது நேரத்திலேயே மழை நின்றுவிட்டது.பிறகு மாலைவரை இருந்து சுற்றிப்பார்த்தோம்.

அடுத்த பதிவில் மேலும் சில படங்களுடன்.

சாத்தணூர் அணை இல் பதிவிடப்பட்டது . 15 Comments »

15 பதில்கள் to “சாத்தணூர் அணை/Sathanur Dam”

 1. திண்டுக்கல் தனபாலன் Says:

  நல்ல படங்கள்… தொடர்கிறேன்… நன்றி…

 2. Gnanaguru Says:

  muthal padam miga arumai..unga camera clarity arumai..eduthavargalukum paratu..top left corner la adjust pani eduthiruntha inum nandraka irunthurukum..thiruvanamalai pogum pothu sathanur dam mum ini ninavuku varum..ninga non resident ? nallam..nandri..vaazlthukal.

  • chitrasundar5 Says:

   Gnanaguru,

   பாராட்டுக்கு நன்றி.அதில் பாதி காமிராவுக்குத்தான்.முன்னெல்லாம் ஏதோ ஒன்னுன்னு க்ளிக் பண்ணிடுவேன்.இப்போது பார்த்துப்பார்த்து எடுப்பது.இனி போனால் பார்த்து,அழகாக எடுத்து வரவேண்டும்..சில வருடங்களாக non resident.வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி.

 3. ranjani135 Says:

  கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன் குழந்தைகளுடன் போயிருந்தேன். இப்போது நீங்கள் போட்டிருக்கும் இடங்களையும், அழகழகான சிற்பங்களையும், பார்த்திருக்கிறேனா என்று நினைவே இல்லை.
  ஒரு மலரும் நினைவுகளைக் கொண்டு வந்ததற்கு நன்றி, சித்ரா!

  • chitrasundar5 Says:

   ரஞ்ஜனி,

   உங்க மலரும் நினைவுகளைக் கொண்டுவந்ததில் எனக்கு மகிழ்ச்சி.”30 வருடங்களுக்குமுன்”___என்றதும் பள்ளிச்சுற்றுலாவோ என நினைத்துவிட்டேன்.வருகைக்கு நன்றி.

 4. chollukireen Says:

  ஒரு அழகான இடம். ரொம்ப வருஷங்கள் ஆச்சு.. தொடர்ந்து
  2,3 முறைபோயிருப்பதால் படங்களைப் பார்த்ததும் ஞாபகம் வருகிரது. போட்டோக்கள் அழகாக இருக்கிறது. தொடர்ந்து பார்க்கிறேன்.

  • chitrasundar5 Says:

   காமாஷிமா,

   உங்களுக்கும் ஞாபகம் வந்துச்சா!படங்களைப் போடும்போதே நினைத்தேன், நீங்க போயிருப்பிங்கன்னு.சுற்றிலும் காய்ந்த பகுதிகள்,நடுவில் இது மட்டுமே பசுமையாக.இன்னும் சில படங்களைப் போடுகிறேன்,தொடர்ந்து வாங்க. நன்றிமா.அன்புடன் சித்ரா.

 5. Mahi Says:

  Nice photos..I’ve never been to these areas. Thanks for sharing!

 6. rocky arun Says:

  hi aunt ……………..nyc pics ………..i still remember that i snap that pics …..with u ….at dam ……………


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: