இலையுதிர் காலம் வரும்போதே மரங்களிலுள்ள இலைகள் எல்லாம் பழுத்து,நிறம் மாறி,உதிரத் தொடங்கிவிடும். நிறம் மாறிய சமயம்,எல்லா மரங்களும் பச்சை,மஞ்சள்,ஆரஞ்சு,சிவப்பு என கலந்து,பார்க்க அழகாக இருக்கும்.ஒரு காற்று,லேசான தூறல் வந்தால் போதும், இலைகள் உதிர்ந்துவிடும்.அதன்பிறகு வெறும் கிளைகள், குச்சிகளாகத்தான் காட்சியளிக்கும்,வசந்தகாலம் வரும்வரை.
இப்போது ஒரு வாரமாக லேசான காற்று,சிறுசிறு தூரல்கள்.இவற்றினால் இலைகள் முழுவதுமாக உதிர்வதற்குள் படமெடுத்துவிட வேண்டுமென்று இன்று வாக்கிங் போனபோது எடுத்த படங்கள் இவை.பிடிச்சிருக்கான்னு வந்து சொல்லுங்க.வழக்கம்போல் படத்தைப் பெரியதாக்கிப் பார்த்தால்தான் அதன் அழகு தெரியும்.
வழியில் ஒரு பூங்காவில் உள்ள மரங்களூடே சூரிய ஒளி நுழையும் அழகான காட்சி.
தெருவின் நடுவில் நின்று எடுத்திருந்தால் அழகாக வந்திருக்கும்.கார்கள் போய்க்கொண்டு இருந்ததால் ஒரு ஓரமாக நின்று எடுத்த படம்.நம்ம ஊரு வேப்பிலை மரம் மாதிரியே இருக்கில்ல!
இந்தத் தெரு எவ்வளவு அழகா இருக்கு!
தெருவின் ஓரத்தில் உள்ள மரங்கள்.மீதமுள்ள இலைகள் இன்று உதிரலாமா இல்லை நாளையா? என்பதுபோல் உள்ளது.
இவை எங்க அப்பார்ட்மெண்டில் உள்ள மரங்கள். சில மரங்களின்,இலைகளின் நிறம் மாறிக்கொண்டும்,நிறம் மாறியவை உதிர்ந்துகொண்டும் உள்ளன.
9:08 முப இல் நவம்பர் 20, 2012
ஆஹா… அழகோ அழகு…
9:20 முப இல் நவம்பர் 20, 2012
ஆமாம்.நேரில் பார்க்கும்போது இன்னும் அழகாக இருக்கும்.நன்றி தனபாலன்.
10:35 முப இல் நவம்பர் 20, 2012
அற்புதமாக இருக்கிறது fall colours! இந்த வருஷம் இங்கே அவ்வளவாக கலர்கள் மாறவில்லை..இலைகள் எல்லாம் பச்சையாகவே இருந்து சட்னு காய்ந்து சருகாகி உதிர்கின்றன.
Lucky you! Enjoy the colours Chitrakkaa! 🙂
7:42 முப இல் நவம்பர் 21, 2012
வந்த புதிதில் ஆச்சரியமா இருந்துச்சு.பிறகு அதுவே பழகிவிட்டது.வருகைக்கு நன்றி மகி.
10:03 பிப இல் நவம்பர் 21, 2012
arumaiya irukku..enjoy 🙂
6:01 பிப இல் நவம்பர் 23, 2012
நன்றி ஞானகுரு!தமிழில் பெயரை சரியாகத்தான் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
9:21 பிப இல் நவம்பர் 26, 2012
இலையுதிர்கால வண்ண மாற்றங்கள் எவ்வளவு அழகு? இதே மரங்கள், வஸந்தத்தில் இன்னும் அழகாக பூக்களை அனுப்பி பிறகு
துளிர்விட்டு கலர் மாறி அது ஒரு அழகு. படங்களெல்லாம் அருமையாக வந்திருக்கு.
3:34 பிப இல் நவம்பர் 27, 2012
காமாஷிமா,
வஸந்தத்தில் மரம் முழுக்க பூக்களும்,பிறகு அவை கொட்டி,அதன் பிறகு இலைகள் துளிர்த்து வருவது என சுவாரஸியமாகத்தான் இருக்கிறது.நேரம் ஒதுக்கி வந்ததற்கு நன்றிமா.அன்புடன் சித்ரா.
9:04 முப இல் நவம்பர் 30, 2012
இங்கும் (பெங்களூரில்) இதைப் போன்ற வண்ண வண்ண பூக்களுடன் மரங்கள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் காண முடியும் ஒரு காலத்தில்.இப்போது மெட்ரோ, மேம்பாலம் என்று நகர விரிவாக்கத்தில் எல்லா மரங்களையும் வெட்டி விட்டார்கள்.
மைசூரில் பல்கலைக்கழக வளாகத்தில் பர்பிள் வண்ணப் பூக்கள் நிறைந்திருக்கும் மரங்கள் நிறையப் பார்த்திருக்கிறேன். தரை எங்கும் வண்ணக் கோலங்கள் போட்டதுபோல பல வித வண்ணங்களில் பூக்கள் உதிர்ந்து இருக்கும் அழகோ அழகு!
கண்ணுக்கும் விருந்து கொடுத்து விட்டீர்கள் சித்ரா!
10:22 முப இல் நவம்பர் 30, 2012
ரஞ்ஜனி,
மரங்களை வெட்டுவதே நமக்குப் பொழுதுபோக்காகிவிட்டது.நான்கூட ஒரு காலத்தில்(1994&1995)உங்க ஊருக்கு அடிக்கடி விஜயம் செய்ததுண்டு.நிறைய மரங்களைப் பார்த்ததாகத்தான் ஞாபகம்.ஊரும் அழகாக இருந்தது.வருகைக்கு நன்றிங்க.