கோஸ் சாம்பார்/Cabbage sambar

kos sambar

முருங்கைக்கீரை சாம்பார்,முருங்கைக்கீரை&வாழைப்பூ சாம்பார்,கோஸ் சாம்பார் இவை செய்யும்போது கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்தால் சூப்பரா இருக்கும்.

தாளிக்கும்போது பெருஞ்சீரகம் சிறிது சேர்த்தும்,புளி சேர்க்காமலும் செய்ய வேண்டும்.மேலும் சாம்பார் நீர்த்து இருக்க வேண்டும்.சாதத்துடன் சாதாரன சாம்பார்போல் இல்லாமல் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட வேண்டும்.

தேவையானவை:

துவரம் பருப்பு_1/4 கப்
கோஸ்_ஒரு சிறு பூவில் பாதி
சின்ன வெங்காயம்_ஒரு ஏழெட்டு
தக்காளி_1
பூண்டுப்பல்_2
மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
தேங்காய்ப் பூ_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை

செய்முறை:

துவரம் பருப்பைக் கழுவிவிட்டு,அது வேகுமளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள்தூள்,பெருங்காயம்,2 பூண்டிதழ் சேர்த்து மலர வேகவைக்கவும்.

cabbagecabbage

தேவையான கோஸ் இலைகளைப் பிரித்துக் கழுவிவிட்டு,தண்ணீர் வடிய வைத்த பிறகு,மெல்லிய அளவில் நறுக்கிக்கொள்ளவும்.நான் நீளநீளமாக நறுக்கிக்கொள்வேன்.வெங்காயம்,தக்காளி நறுக்கிக்கொள்ளவும்.

குழம்பு வைக்கப்போகும் பாத்திரத்தை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டுக்காய்ந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,வெங்காயம், தக்காளி அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் பருப்பைக் கடைந்து ஊற்றவும்.தேவையான தண்ணீர் சேர்த்துக்கொண்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.

நன்றாகக் கொதித்த பிறகு கோஸ் சேர்த்துக் கிளறிவிடவும்.கோஸ் சீக்கிரமே வெந்துவிடும்.கோஸ் சேர்த்த பிறகு,சாம்பார் கொதிக்க ஆரம்பித்து ஒரு 5 நிமிடம் கழித்து, தேங்காய்ப்பூ, கொத்துமல்லி தூவி இறக்கவும்.

கோஸ் சேர்த்த பிறகு மூடி போடாமல் கொதிக்க விட்டால் அதன் பச்சை நிறம் மாறாமல் இருக்கும்.

இப்போது கமகம வாசனையுள்ள சாம்பார் ரெடி.இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.

சாம்பார் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 10 Comments »

10 பதில்கள் to “கோஸ் சாம்பார்/Cabbage sambar”

 1. Rajalakshmiparamasivam Says:

  சித்ரா,உங்கள் கோஸ் சாம்பார் செய்முறை நன்றாக இருக்கிறது. இதுவரை நான் செய்து பார்த்தது இல்லை .செய்து பார்க்கிறேன்.:

  Raji

 2. chollukireen Says:

  பயத்தம் பருப்புபோட்டு கூட்டு செய்வது வழக்கம். இதுவும் நன்றாக
  இருக்கிரது. செய்து ருசிக்க வேண்டும்.போட்டோவும் அழகாக இருக்கு.

  • chitrasundar5 Says:

   காமாஷிமா,

   இது அம்மா செய்யும் சாம்பார்.மற்ற சாம்பாரைவிட இந்த சாம்பார் செய்யும் அன்று எல்லோரும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம்.இப்போது இங்கும் இதை அடிக்கடி செய்கிறேன்.நீங்களும் செஞ்சு,சாப்பிட்டுப் பாருங்க. அன்புடன் சித்ரா.

 3. Mahi Says:

  வித்யாசமான செய்முறையா இருக்கு சித்ராக்கா! சோம்பு சேர்த்து சாம்பார்?! சீக்கிரம் செய்து பார்க்கிறேன்.

  முட்டைக்கோஸ் பார்க்கவே ஆசையா இருக்கு. ஃபார்மர்ஸ் மார்க்கட்டில் வாங்கினேன்னு சொல்லி காதில புகை வரவைப்பீங்க..ஐ நோ! 😉 🙂 இவ்வளவு ஃப்ரெஷ் முட்டைக்கோஸ் நான் இங்கே இன்னும் பார்க்கவே இல்ல. சாம்பாரை விட முட்டைக்கோஸ் என் கவனத்தை ஈர்த்துடுச்சு! 🙂

  • chitrasundar5 Says:

   ஆமாம் மகி,சோம்பு சேர்த்த சாம்பார்தான்.முருங்கைக்கீரை கிடைத்தாலும் செஞ்சு பாருங்க.நல்லாவே இருக்கும்.

   காதுல புகை வர்ர இடத்துல வாங்கியதுதான்.குட்டிக்குட்டியா நிறைய வருது. ஒருதடவ இல்லாட்டி ரெண்டுதடவ சமைத்தால் காலியாகிவிடும்.கடையில் அவ்ளோ பெருசா வாங்கி சமைத்து முடிப்பதற்குள் உள்ளே நிறம் மாறிடும்.

   வருகைக்கு நன்றி மகி.

 4. Dr.M.K.Muruganandan Says:

  வடிவான முட்டைக்கோஸ் படங்கள்
  சமையல் இங்கும் மணக்கிறது.

 5. MahiArun Says:

  Chitra Akka, I made this sambar today! Instead of thuvaram paruppu, I used split moong dal(with skin). Enjoyed with hot rice. Thank you for the recipe! 🙂

  • chitrasundar5 Says:

   நான் பச்சைபயறு வைத்து செய்ததில்லை.முடிந்தால் செய்து பார்க்கிறேன்.செய்து பார்த்து பின்னூட்டமும் கொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி மகி.

   கோஸ் மாதிரியே முருங்கைக்கீரை,வெந்தயக்கீரை,வாழைப்பூ & அகத்திக்கீரை வைத்தும் செய்யலாம்.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: