கேழ்வரகு சேமியா இட்லி / Ragi semiya idli

ragi semiya idli

இது உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு டிஃபன்.ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு தானியம் சாப்பிட வேண்டும் என்பதால் லிஸ்டில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

கேழ்வரகு சேமியா உப்புமா செய்வதில் பாதி வேலைகூட இதற்குத் தேவையில்லை.எண்ணெயும் சேர்க்காததால் மிகுந்த ஆரோக்கியமானதும்கூட‌.

ஒரு பாக்கெட் சேமியாவில் மூன்று பேருக்குக்குறையாமல் சாப்பிடலாம்.

செய்முறையை ஒரே வரியில் சொல்வதானால் சேமியாவில் உப்பு போட்டு  ஊறவைத்து,நீரை வடித்துவிட்டு,இட்லிப் பாத்திரத்தில் வைத்து இட்லிகளாக சுட்டெடுக்கவும்.இதைத்தான் கீழே ஒரு பதிவாகக்கொடுத்துள்ளேன், புதியவர்களுக்கு உதவும் என்பதால்.

தேவையானவை:

அணில் சேமியா பாக்கெட் (200 g )_1
உப்பு_தேவைக்கு

செய்முறை:

கேழ்வரகு சேமியாவைப் பிரித்துக் கொட்டி(பாத்திரத்தில்தான்)இரண்டு தடவை தண்ணீர் விட்டு அலசிவிட்டு,பிறகு சேமியா மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது உப்பு போட்டு நன்றாக ஊறும்வரை ஊறவிடவும்.ஊறியதும் சாதம் வடிப்பதுபோல் நீரை வடிய வைக்கவும்.

சேமியாவில் தண்ணீர் வடிந்ததும் பாத்திரத்தை நிமிர்த்திவிடவும்.சேமியாவில் போதுமான ஈரம் இருக்க வேண்டும். அப்போதுதான் சேமியா நன்றாக வேகும்.

பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பிலேற்றி அதில் இட்லித்தட்டை வைத்து, அதன்மீது இட்லித் துணியைப்போடவும்.

இட்லிப் பாத்திரம் காய்ந்ததும் சேமியாவை கையால் கொஞ்சம் கொஞ்சமாக‌ அள்ளி ஒவ்வொரு குழியிலும் வைத்து மூடி வேக விடவும்.

ஆவி வந்து,வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் கொட்டி,காரமான தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

இது மிகவும் மிருதுவாகவே இருக்கும்.

10 பதில்கள் to “கேழ்வரகு சேமியா இட்லி / Ragi semiya idli”

  1. rajalakshmiparamasivam Says:

    சித்ரா,

    இந்த இட்லி நிஜமாகவே மிக மிக சிம்பிள்.
    நாளையோ, நாளை மறு நாளோ நான் செய்து பார்க்கிறேன்.
    நீங்கள் சொல்லியிருக்கும் விதம் அருமையாக இருக்கிறது.

    ராஜி

  2. ranjani135 Says:

    ராகி இட்லி என்று நான் செய்வேன், ராகி மாவில். மிகவும் மிருதுவாக இருக்கும். இதையும் செய்து பார்த்துவிட வேண்டியதுதான்!

    //கேழ்வரகு சேமியாவைப் பிரித்துக் கொட்டி(பாத்திரத்தில்தான்) // ரசித்தேன்!

    • chitrasundar5 Says:

      ரஞ்ஜனி,

      ராகி இட்லிக்கு கடையில் கிடைக்கும் ராகிமாவு வாங்கிதான் செய்வேன்.நீங்க கேழ்வரகு அரைத்து செய்வீங்களா?அல்லது மாவு சேர்த்தா?ஏனேனில் நான் ஃப்ரெஷ் கேழ்வரகு (500 g)வாங்கி வச்சிருக்கேன். அதை வைத்து என்ன செய்யலாம் எனத் தெரியவில்லை.நேரமிருக்கும்போது பதிலளித்தால் போதும்.

      பதிவை எழுதி முடித்தபிறகு படித்துப்பார்த்தால் அங்கு ஒரு பாத்திரத்தை சேர்க்கவேண்டி வந்தது.யாரோ கேள்வி கேட்டு நான் பதில் சொல்வதுபோல எழுதிவிட்டேன். அதை ரசித்ததில் எனக்கு மகிழ்ச்சி.

  3. chollukireen Says:

    மிகவும்,சுலபமாக இருக்கு. உடம்புக்கும் நல்லது கேழ்வரகு. வேண்டுமானால் தினுஸு,தினுஸாக வெந்த சேமியாவில் சேர்க்கலாம். உபயோகத்தில் சீக்கிரம் வரும் குறிப்பு.நல்ல உதவி.

    • chitrasundar5 Says:

      காமாஷிமா,

      சுலபமானதுதான்.சுவையாகவும் இருக்கு.ஆமாம் அம்மா,வெந்த சேமியாவை வைத்து தினுஸு தினுஸாக செய்யலாம்.ஒரு நாளைக்கு பச்சைப்பருப்பு சேர்த்து பொங்கல் செய்யலாம் என நினைத்துள்ளேன்.இடியாப்பம் மாதிரி சர்க்கரை+தேங்காய்ப்பூ சேர்த்தும்,காய்கறிகள் சேர்த்து கிச்சடி மாதிரியும் செய்து சாப்பிடலாம்.உங்களுக்கு எளிதாக கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.அன்புடன் சித்ரா.

  4. Mahi Says:

    Looks good..but my hubby loves semia upma rather than this Chitra Akka..will check on Indian store for Ragi semia next time.

    • chitrasundar5 Says:

      முதலில் இங்கும் அப்படித்தான்.இப்போ இந்த இட்லிகூட விருப்பமான ஒன்றாகிவிட்டது.வேலையும் கம்மி.நூடுல்ஸ் பக்கத்துல வச்சிருக்காங்க. மகி,எடுக்கும்போது அணில் சேமியாவைப் பார்த்து எடுங்க.ஒரு தடவ வேறு ப்ராண்ட் வாங்கி நல்லாவே இல்ல.

  5. ranjani135 Says:

    நானும் ராகி மாவில் தான் இட்லி செய்வேன், சித்ரா.
    கேழ்வரகை ஊறப்போட்டு அரைத்துப் பால் எடுத்து அல்வா செய்யலாம்.
    என் பெண் வீட்டில் இதை அடிக்கடி செய்வார்கள். ஹால்பாய் என்பார்கள். வெல்லம் சேர்த்துக் கிளறுவார்கள். சர்க்கரை சேர்ப்பதில்லை. ஏலக்காய் பொடி சேர்க்கலாம். பிடிக்குமானால் முந்திரி, திராட்சை போடலாம்.

    செய்துபார்த்து விட்டு அதையும் ஒரு பதிவு போட்டு விடுங்கள்!
    தலைப்பு ‘கர்நாடக ராகி ஹால்பாய்’ . இது எப்படி இருக்கு?

    • chitrasundar5 Says:

      ரஞ்ஜனி,

      “தலைப்பு ‘கர்நாடக ராகி ஹால்பாய்’.இது எப்படி இருக்கு?”____கேட்க நல்லாத்தான் இருக்கு.இந்த சோதனையைக் கேழ்வரகை வைத்து என்பதில்தான் சிக்கல்.பக்குவம் வராமப் போயிட்டா?பார்த்துபார்த்து வாங்கி வந்தேனாக்கும்.எதற்கும் கொஞ்சமா செஞ்சு பார்த்து,ஹால்பாயுடன் உங்க பெயரையும் சேர்த்து பதிவாக்கிவிடுகிறேன்.புது குறிப்பு கொடுத்ததற்கு நன்றிங்க.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: