நாங்க இருக்கும் பகுதியிலுள்ள ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் வாங்கிய சில பழங்கள்.ஃப்ரெஷ்ஷாக இருப்பதால் ஒரிஜினல் டேஸ்ட்டில் இருக்கும்.பொங்கல்சமயம் என்பதால் பழங்களுடன் கரும்பும் சேர்ந்துகொண்டது.
இந்தப் பொங்கலுக்கு வாங்கிய கரும்பு.முழு கரும்பு கிடைத்தாலும் அப்படியே எடுத்துவர முடியாது என்பதால் துண்டுகளாகவே வாங்கியாச்சு.
எல்லோரும் ஒவ்வொன்னா எடுத்துக்கோங்க.உங்களுக்காகவே பட்டையை உரித்து,குட்டிக்குட்டித் துண்டுகள் போட்டாச்சு.
செர்ரி பழங்கள்
நிறைய வெரைட்டியில் திராட்சை கிடைக்கும்.
பள்ளி முடிந்து வரும் மகளுக்காகக் காத்திருக்கும் பலா சுளைகள்.
எப்போதும் (சீஸன் சமயத்தில்) பெரிய கொய்யாப் பழங்களே வரும். ஒருமுறை இதுபோன்ற நாட்டுக்கொய்யா கிடைத்தது.உள்ளே லேஸான பிங்க் நிறம்.நல்ல இனிப்பு.
1:45 பிப இல் ஜனவரி 16, 2013
aahaa! அருமை!
கரும்பு இனிப்பா இருந்ததா? இங்கே பெர்ஷியன் மார்க்கெட்டில இதே போல கரும்பு (பார்க்க சூப்பரா இருந்துச்சு) வாங்கிவந்தேன். ஆனா இனிப்பே இல்லைஐஐஐஐஐஐ! சள்ளுன்னு இருந்துச்சு, ரொம்ப ஏமாற்றமாப் போச்சு, யு ஸீ?! :o) அதிலிருந்து கரும்பு பக்கமே போறதில்ல!
செர்ரி- பார்க்கவே எடுத்துச் சாப்பிடலாம் போலிருக்கு. திராட்சையும் அப்படியே! கொய்யா, அதுவும் இனிப்பா? ஹ்ம்ம்ம்…என்ஜாய்,என்ஜாய்! எல்லாப் பழங்களும் நன்றாக இருக்கு.
இன்னும் பலாப்பழம் கிடைக்குதா உங்கூர்ல? இல்ல சம்மர்ல வாங்கிய பலாவா சித்ராக்கா? 😉
3:29 பிப இல் ஜனவரி 16, 2013
கரும்பு இந்த சனிக்கிழமை ஃபார்மர்ஸ் மார்க்கெட்ல வாங்கினது.நல்ல இனிப்பு.வெள்ளை கரும்புகூட இருந்துச்சு,அது அடுத்த வாரத்துக்கு. திராட்சை, கரும்பு தவிர மற்றவை சம்மரில் வாங்கியவை.
இப்போ ஃபார்மர்ஸ் மார்க்கெட் போறதில்லையா?எல்லாக் காய்களும், கீரைகளும்,பழங்களும் இங்கு வாங்குவதோடு சரி.ஒவ்வொரு வாரமும் அந்தக் கூட்டத்துல போய்ட்டு,வெளியே வந்தால்தான் ஒரு நிம்மதி.
5:45 பிப இல் ஜனவரி 16, 2013
//இப்போ ஃபார்மர்ஸ் மார்க்கெட் போறதில்லையா?// இல்லை சித்ராக்கா! எங்க வீட்டிலிருந்து ஆறேழு மைல் போகணும், அதுவும் வெள்ளிக்கிழமை! வீகென்டில போறதுன்னா 10-12 மைல் போகணும், சனிக்கிழமை காலை 8 மணிக்கு கிளம்பி போறதெல்லாம் நடக்கற காரியமா? அதனால விட்டாச்! 😉
உங்களுக்கு நடந்து போகும் தொலைவிலேயே ஃபார்மர்ஸ் மார்க்கட்டோ? என்சொய்! 🙂
8:14 பிப இல் ஜனவரி 16, 2013
10_12 மைல் போகனும்னா கஷ்டம்தான்.நாங்க முன்பு இருந்த வீட்டிலிருந்து (4 வருடங்கள்) நடந்து போய்தான் வாங்குவோம்.
இப்போது உள்ள இடத்திலிருந்து,வெள்ளிக்கிழமை மார்க்கெட்,காரில் போக 5 நிமி ஆகும்.சனிக்கிழமை மார்க்கெட் 10_12 நிமி ஆகும்.சனிக்கிழமைதான் போவோம்.அப்படியே பழகிப்போச்சு மகி.
9:25 பிப இல் ஜனவரி 16, 2013
நம்மூரில் கிடைக்கும் பழங்கள் அங்கும் கிடைக்குமா? வாயில் ஜலம் ஊறுகிறது படங்களைப் பார்த்தால்.
நீங்களும் மகியும் பேசிக் கொள்வதிலிருந்து இன்னும் நிறைய விஷயங்கள் அறிய முடிகிறது. புதிய ப்ளாக் ஆரம்பித்து இதையெல்லாம் – உங்கள் ஊரைப்பற்றி – போடுங்களேன்.
சனிக்கிழமைகளில் ட்ராபிக் ஜாம்-மினால் தாமதமாகுமோ?
7:06 பிப இல் ஜனவரி 17, 2013
ரஞ்சனி,
ம்ம்,ஒருசிலவற்றைத் தவிர எல்லாப் பழங்களும் கிடைக்கும்.கொஞ்சம் தேடித்தேடி வாங்கனும்.
நாங்க இருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் இரண்டு ஃபார்மர்ஸ் மார்க்கெட் இருக்கு.வெள்ளிக்கிழமை ஒன்று_இது பக்கத்தில் உள்ளது,மற்றொன்று சனிக்கிழமை_இது கொஞ்சம் தூரத்தில் உள்ளது.அதனால் கூட கொஞ்சம் நேரமாகும்.
“புதிய ப்ளாக் ஆரம்பித்து இதையெல்லாம் – உங்கள் ஊரைப்பற்றி” ____உங்களை மாதிரியெல்லாம் நகைச்சுவையா,படிப்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் எழுத முடிவதில்லை.முயற்சிக்க வேண்டும்.
10:13 பிப இல் ஜனவரி 16, 2013
சித்ரா,
அது எப்படி அவ்வளவு அழகாக கரும்பை வெட்டியிருக்கறீர்கள். மற்ற பழங்களும் பார்க்கவே ருசி தருகிறது. உங்கள் சாலாட் பதிவு உங்கள் பழங்களைப் போலவே சூப்பர்.
அருமையான பகிர்விற்கு நன்றி.
அன்புடன்,
ராஜி
7:15 பிப இல் ஜனவரி 17, 2013
ராஜலஷ்மி,
மார்க்கெட் போனால் இப்படித்தான் குட்டிகுட்டியா நறுக்கி,டூத்பிக் வைத்து ஃப்ரீ சாம்பிளுக்கு வச்சிருப்பாங்க.அதைப்பார்த்துதான் இப்படி செய்வேன். கரும்பும் ரொம்பவே சாஃப்டா இருக்கறதால ஈஸிதான்.பழங்கள் ஃப்ரெஷ்ஷா இருக்கறதால சாப்பிடவும் ருசிதான்.வருகைக்கு நன்றிங்க.
12:38 முப இல் ஜனவரி 17, 2013
பழங்களுக்கெல்லாம் பழம் ரொம்ப பிடிக்கும்.. அதுவும் அருமையான பழங்கள்.கரும்பெல்லாம் காசு கொடுக்காமல் எங்கள் ஊரில் வாசலில் போகும் வண்டிக்காரனைக் கேட்டே வாங்கி விடுவோம்.. நெல்லிக்குப்பத்து ஆலைக்காக ஸ்டேஷனுக்கு
வண்டி போகும். ஆளுக்கு ஒரு கரும்பு கூட பல்லாலே பட்டை உரித்து, கடித்து சாப்பிடமுடியும். மெல்லியதான வெளிர் பச்சைக் கரும்பு. எங்கேயிருந்து எங்கு ஞாபகங்கள் பார். நன்னாயிருந்தது கரும்பு.
7:34 பிப இல் ஜனவரி 17, 2013
காமாஷிமா,
‘நெல்லிக்குப்பம்’ ஆலையை நினைவு வச்சிருக்கீங்க,ஆச்சரியமா இருக்கு! சின்னவயசு ஞாபகம்,அவ்வளவு எளிதில் மறக்கவா முடியும்.எங்க ஊரிலும் வெளிர் பச்சை கரும்புதான் பயிர் செய்வாங்க.பண்ணிக்கரும்பு பொங்கலுக்கு மட்டும் வெளியூரிலிருந்து விற்பனைக்கு வரும்.
எங்க ஊர்’பண்ருட்டி’னு சொன்னாலும் அதுக்குப் பக்கத்துல ஒரு கிராமம்.பெயர் முதற்கொண்டு,கரும்புக்கும்,எங்க ஊருக்கும் நிறையவே தொடர்புண்டு.அப்படின்னா எங்க ஊர்ல எவ்ளோ கரும்பு விளையும் பாருங்க!
நீங்க சொல்ற மாதிரிதான்,வண்டிக்காரங்கள கேட்டா ஒரு கத்தையையே தள்ளிவிட்டுட்டு போவாங்க.ஆளுக்கு ஒரு கழியாக எடுத்து,கடித்து சாப்பிடுவாங்க.காசு கொடுத்து வாங்குவது ஒருபக்கம் இருந்தாலும் கிடைக்க வேண்டுமே.நம்ம ஊரைப் பற்றிய பேச்சு என்றதும் பதில் நீண்டுவிட்டது.
‘நன்னாயிருந்தது கரும்பு’___சந்தோஷம் அம்மா.அன்புடன் சித்ரா.
7:28 முப இல் ஜனவரி 17, 2013
ellam nallaruku..nandri.
7:39 பிப இல் ஜனவரி 17, 2013
ஞானகுரு,
‘ellam nallaruku’___ஒருவேளை இவற்றை வைத்து சமைக்கவில்லை என்பதால் இருக்கலாம்.வருகைக்கு நன்றிங்க.
7:42 பிப இல் ஜனவரி 17, 2013
haha no…ninga samaichiruntha inum nalarukum..nandri nandri
5:23 முப இல் ஜனவரி 20, 2013
Pazagal polava uggal Kavithi yum enippaga erukku….
6:52 பிப இல் ஜனவரி 20, 2013
சாந்தகுமார்,
முதலில் நான் எழுதிய கவிதை எங்கே எனத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்!