பீன்ஸ் பொரியல்/Beans poriyal

beans poriyal

நேற்று சுரைக்காய் கூட்டுக்கு இடித்த,வேர்க்கடலை & காய்ந்த மிளகாய் பொடி கொஞ்சம் மீதமிருந்தது.முன்பு போல பெரிய பருப்பாக இல்லாமல் இப்போதெல்லாம் குட்டிக்குட்டியா வருது.இதை ஓவனில் பார்த்துப்பார்த்து வறுக்க வேண்டியுள்ளது. வேர்க்கடலையின் விலையும் மிகமிக அதிகமாகிவிட்டது.

அதனால் இந்தப் பொடியை வீணாக்கக்கூடாது என நினைத்து பீன்ஸ் பொரியலில் சேர்த்தேன்.நன்றாக இருந்தால் சரி , இல்லையென்றால் நானே சாப்பிட்டுவிடுவது என.மிகமிக நன்றாகவே இருந்தது.முடிந்தால் நீங்களும் செஞ்சு பாருங்க.

தேவையானவை:

முழு நீள பீன்ஸ்_ஒரு கை நிறைய
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை_ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய்_2 (காரத்திற்கேற்ப)
தேங்காய்ப் பூ_கொஞ்சம்
கொத்துமல்லி இலை_சிறிது (போட மறந்தாச்சு)
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்,கடுகு,உளுந்து,கடலைப்பருப்பு,சீரகம்,பெருங்காயம்,கறிவேப்பிலை

செய்முறை:

பீன்ஸைக் கழுவிவிட்டு,விருப்பமான அளவில் நறுக்கிக்கொள்ளவும்.

மிளகாயைக் கருகாமல் மிதமானத் தீயில் சூடுவர வறுத்துக்கொள்ளவும்.

வேர்க்கடலையுடன் மிளகாயைச்சேர்த்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக இடித்துக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பில் ஏற்றித் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு,பீன்ஸைப் போட்டு வதக்கவும்.

லேஸாக வதங்கியதும் அது வேகுமளவு திட்டமாகத் தண்ணீர் விட்டு,சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும்.

தண்ணீர் வற்றி வெந்ததும் இடித்து வைத்துள்ள வேர்க்கடலை & காய்ந்த மிளகாய்ப் பொடி,தேங்காய்ப் பூ சேர்த்துக் கிளறி,கொத்துமல்லி தூவி இறக்கவும்.

இந்த சுவையான பீன்ஸ் பொரியல் எல்லா வாகையான சாதத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 10 Comments »

10 பதில்கள் to “பீன்ஸ் பொரியல்/Beans poriyal”

 1. rajalakshmiparamasivam Says:

  என் வயதிற்கு நான் வேர்க்கடலை எல்லாம் சாப்பிடக் கூடாது.அதனால் பார்த்தே திருப்தி பட்டுக் கொள்கிறேன்.
  ஒரு சின்ன விண்ணப்பம்.
  Flax seeds இதயத்திற்கு நல்லது என்கிறார்கள். அதனால் வாங்கினேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. அதற்கு ஒரு ரெசிபி சொல்லுங்களேன்.
  அருமையான பதிவு. நன்றி பகிர்விற்கு.
  ராஜி.

  • chitrasundar5 Says:

   ராஜலஷ்மி,

   Flax seeds _’சாலட்’டிலும்,’ப்ரெட்’டின் மேலும் பார்த்திருக்கிறேன்.நான் வாங்கியதில்லை.இதை மிக்ஸியில் நைஸாகப் பொடித்து,ஒரு டீஸ்பூன் பொடியைக் கோதுமை மாவுடன் சேர்த்து சப்பாத்தி செய்வதாக ஒரு ப்ளாக்கில் பார்த்தேன்.நல்லதுனு சொல்லியிருக்கீங்க.கடைக்குப் போனால் வாங்கிவந்து செய்து பார்க்கிறேன்.நீங்களும் செஞ்சு பாருங்க.வருகைக்கு நன்றி.

 2. Mahi Says:

  Is it yard long beans?? Poriyal looks delicious!

 3. Mahi Says:

  //பெரிய பருப்பாக இல்லாமல் இப்போதெல்லாம் குட்டிக்குட்டியா வருது.// பெரிய பருப்பை விட குட்டிக்குட்டியாக இருக்கும் வேர்க்கடலைதான் ருசி நல்லா இருக்கும்– இது என்னோட observation! 😉 Oven-ல கொஞ்சம் டைம் கம்மியா வையுங்களேன்…ஒரு ட்ரேக்கு 300F-ல 10 நிமிஷம் வைச்சுப்பாருங்க.

  • chitrasundar5 Says:

   நீங்க சொன்னமாதிரி சின்ன பருப்புதான் சாப்பிட நல்லாருக்கும்.இங்கு வந்த பிறகு பெரிய பருப்பாகவே வாங்கிப் பழகிவிட்டது.போன‌ தடவ சின்னது வாங்கிட்டு கொஞ்சம் இன்னும் சிவக்கட்டும் என விட்டேன், அவ்வளவுதான்,கசப்பாயிடுச்சு.அடுத்த தடவ கடைசியில் கொஞ்சம் ஹீட்டைக் குறைத்து வைத்து எல்லாம் ஒன்னுபோல சிவந்து வந்தது.டைம் ஃபிக்ஸ் பண்ணியெல்லாம் வைப்பதில்லை.இடையிடையே எடுத்துப் பார்த்துக் கிளறிவிட்டு சிவந்ததும் எடுத்திடுவேன்.

   எங்க வீட்ல வேர்க்கடலை பயிர் செய்வோம்.வீட்டுக்கென சின்ன பருப்பு தனியாகப் போட்டு எடுப்பாங்க.அதிலும் ‘நன்னி’பயறுன்னு ஒன்னு சொல்லுவோம்,அதாவது பிஞ்சு மல்லாட்டை,அது பச்சை,காய்ந்தது, வறுத்தது என எதுவாக இருந்தாலும் சின்ன பருப்பைவிட இது இன்னும் சூப்பரா இருக்கும்.

   பதில் வளவளன்னு போகுதேன்னு ஏதும் நினைக்க வேண்டாம் மகி!அந்த ப்ளாக்குக்காக இங்கே ட்ரயல் பார்க்கிறேன்,அவ்வளவுதான்.

 4. chollukireen Says:

  நன்னி பயறு குட்டிகுட்டியா கொஞ்சம் மெல்லிசா ரொம்ப நன்றாக இருக்கும். எனக்கும் ஞாபகம் வருது. பீன்ஸ் கறி நன்றாக இருக்கிரது.

  • chitrasundar5 Says:

   காமாஷிமா,

   நீங்க சொல்ற அதே பயறுதான்.விதை பயறு பிரித்தெடுக்கும்போதும், அறுவடையின்போதும் அதைத் தேடித்தேடி எடுத்து சாப்பிடுவேன்.எங்க பாட்டி அந்த நன்னி பயறை தாளிக்கிற கரண்டியில போட்டு தனியா வறுத்து தருவாங்க.சூப்பர் டேஸ்ட்டா இருக்கும்.

   என்னதான் உலகத்தையே சுத்தி வந்தாலும் வளவனூர் பற்றிய ஞாபகங்களை இன்னும் உங்களால் மறக்க முடியவில்லை என்பது தெரிகிறது.எப்படியும் சுமார் 65 வருடங்களுக்கு முந்தைய நினைவுகளாகத்தான் இருக்கனும்.அன்புடன் சித்ரா.

 5. Pattu Says:

  காமாட்சி அம்மா , பதிவுகள் வழியாக உங்கள் பதிவு அறிமுகம். அழகான சமையல் பக்குவங்களை அருமையான புகைப்படங்களுடன் , நேர்த்தியாக விளக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். பல பக்கங்களை ஆவலுடன் படித்து , எனக்கு புதிதாக உள்ளவற்றை குறிப்பும் எடுத்தேன்.

  நன்றி. வணக்கம்.

  • chitrasundar5 Says:

   Pattu,

   உங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றிங்க.சந்தோஷமும்கூட.உங்க பின்னூட்டம் spam ல் இருந்துள்ளது,அதனால் நான் பார்க்காமலேயே விட்டிருக்கிறேன்.இனியும் தொடர்ந்து வாங்க,நன்றி.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: