இந்த சீஸனில் மார்க்கெட்டில் ஆரஞ்சுப் பழங்கள் நிறைய வெரைட்டியில் அதிக அளவில் வருகின்றன.அவற்றை எவ்வாறு எளிதாக உரிப்பது, துண்டுகள் போடுவது எனப் பார்க்கலாம்.
கீழே படத்திலுள்ளவை நம்ம ஊர் கமலா பழம் போன்றது.இதை உரிப்பது எளிது.தோலை நீக்கிவிட்டு சுளைகளை எடுத்து அந்தத் தோலின் மேலேயே வைத்து,தட்டில் அடுக்கி வைத்துக் கொடுக்கலாம்.
கீழேயுள்ளது Navel ஆரஞ்சு.இதை ஜூஸ் பிழிந்தோ அல்லது உரித்து சுளைகளாகவோ சாப்பிடலாம்.
சாத்துகுடி,ஆரஞ்சு போன்றவற்றை சிலர் நகத்தால் கீறி எடுக்க முயற்சிப்போம்.அப்போது நகக்கண்ணில் வரும் வலியானது மீண்டும் உரிக்க நினைக்கும்போதே ஒரு பயம் வரும்.அந்த வலியானது இரண்டுமூன்று நாட்கள் நீடிக்கும்.
அவ்வாறு இல்லாமல் முழு பழத்தின் மேலும் கீழும் கத்தியைப் பயன்படுத்தி சிறிது நறுக்கிவிட்டு,நான்கைந்து இடங்களில் நீளவாக்கில் கீறிவிட்டுப் பிய்த்தால் தோல் எளிதாக வந்துவிடும்.
உரித்த முழு பழத்தினை குறுக்காக,இரண்டாக நறுக்கி,பிறகு விருப்பமான அளவில் துண்டுகள் போட்டு,அந்தத் தோலின் மேலேயே நறுக்கிய துண்டுகளை வைத்து,ஒரு ‘டூத்பிக்’குடன் தட்டில் அடுக்கிக் கொடுத்தால் பார்க்க அழகாகவும் இருக்கும், பார்க்கும்போதே சாப்பிடவும் தூண்டும்.
அல்லது நறுக்குவதற்கு பதிலாக தோலை நீக்கிவிட்டு சுளைகளை எடுத்து அந்தத் தோலின் மேலேயே வைத்து,தட்டில் அடுக்கி வைத்தும் கொடுக்கலாம்.
ஜூஸ் வேண்டுமானால் இரண்டு பழங்களைக் குறுக்காக வெட்டி, ஒவ்வொன்றாக ஜூஸரில் வைத்துப் பிழிந்து ஒரு க்ளாஸில் ஊற்றிக் குடிக்கலாம்
9:22 பிப இல் பிப்ரவரி 3, 2013
ஆரஞ்சைப் பார்த்தவுடனேயே சாப்பிடத் தூண்டுகிறது.
அந்த ஜூஸ் பார்க்க பார்க்க குடிக்கத் தூண்டுகிறது.
நன்றி பகிர்விற்கு,
ராஜி
9:32 பிப இல் பிப்ரவரி 3, 2013
ராஜலஷ்மி,
நிறத்தைப் பார்க்கும்போதே சாப்பிடத்தூண்டும் பழம்தானே இது.ஜூஸ் குடிச்சிட்டு,அப்படியே பழங்களும் எடுத்துக்கோங்க.வருகைக்கு நன்றிங்க.
9:33 பிப இல் பிப்ரவரி 3, 2013
காமாஷிமா,
பழங்கள் உங்களுக்குப் பிடித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.அன்புடன் சித்ரா.
10:28 பிப இல் பிப்ரவரி 3, 2013
ஜூஸ் சூப்பர்…
10:07 முப இல் பிப்ரவரி 4, 2013
வருகைக்கு நன்றி.
10:36 பிப இல் பிப்ரவரி 3, 2013
இன்னிக்கு நாங்களும் பார்மர்ஸ் மார்க்கெட் போனோமே,,ஆரஞ்சுப் பழம் வாங்கிவந்தோமே! 🙂
நல்ல பதிவு. எனக்கு பழத்தை அப்படியே சாப்பிடப் பிடிக்கும்..தோலுரிக்காமல் அப்படியே மெல்லிய வட்டங்களா நறுக்கிட்டாலும் சாப்பிட ஈஸியா இருக்கும். வட்டத்தில் ஒரு இடத்தில் லேசாக கடித்தால் தோல் சுலபமாக வந்துரும், பழமும் சாப்பிட நல்லார்க்கும். [நான் சொல்றது உங்களுக்கு புரியுதா? இல்ல தூக்கத்தில உளறறேனா தெரில,..ஹிஹி! நாளைக்கு வாரேன்! ;)]
10:20 முப இல் பிப்ரவரி 4, 2013
மார்க்கெட் போய்வந்த சந்தோஷம் பின்னூட்டத்தைப் பார்த்தாலே புரியுது.
“மெல்லிய வட்டங்களா நறுக்கிட்டாலும் சாப்பிட ஈஸியா இருக்கும்”__ வட்டத்துக்கு பதிலா அரை வட்டமாக்கிட்டா சாப்பிட இன்னும் ஈஸியா இருக்கும்.தூக்கத்துல உளறினாலும் அதெப்படி கரெக்ட்டா உளற்றீங்க!
ஆமாம்,நீங்க சொல்ற மாதிரிதான் வட்டவட்டமா நறுக்கி,பிறகு அதை அரை வட்டமா ஆக்கி,மேலும் ஒரு கால் வட்டமாக்கி எங்க ஊர் மார்க்கெட்டில் ஃப்ரீ சாம்பிள் வச்சிருப்பாங்க.இதோ,லன்ச் டைம்ல சாப்பிட ஆள் வந்ததும் அந்த டிசைன்லயும் கட் பண்ணி போட்டுடறேன்.
8:32 முப இல் பிப்ரவரி 5, 2013
🙂 photo-vai kanome? Should I post it Chitra Akka? 😉
11:50 முப இல் பிப்ரவரி 5, 2013
post பண்ணுங்க!உங்க ஊர் ஆரஞ்சு என்ன கலர்ல,என்ன ஷேப்ல இருக்குன்னு நாங்க மட்டும் பார்க்க வேண்டாமா என்ன?சீக்கிரமே போடுங்க.
9:43 பிப இல் பிப்ரவரி 22, 2013
Just now saw the smiley in the orange shade! It’s cute! Unga Ponnu kaivannamaa? 🙂
Btw, I posted orange marmalade coffee cake in my English blog in which there are pictures of cutting orange. Shall try to post it in tamil too..
10:26 முப இல் பிப்ரவரி 23, 2013
அவங்கல்லாம் பிஸியோ பிஸி,பொழுதுபோகாமல் இதையெல்லாம் பண்ணுவது வேறு யார்!
அதெல்லாம் முடியாது.ஆரஞ்சை யாருமே கட்பண்ணி பதிவு போடக்கூடாது.அதுக்கு patent வாங்கிட்டேன்.அழகான கேக்,சீக்கிரமே தமிழ்ல போடுங்க.