சாப்பாட்டில் ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு தானியம் எடுத்துக்கொண்டால் உடலுக்கு நல்லது என மருத்துவர் சொல்வதால் ஏதாவது ஒருவேளை உணவுக்கு ஓட்ஸைப் பயன்படுத்தலாமே.
இது கொஞ்சம் கொழகொழப்பு தன்மையுடையது.முதன்முதலில் சாப்பிட்டபோது பிடிக்கவே பிடிக்காது.கடகடவென மருந்து விழுங்குவதுபோல் சாப்பிட்டு விடுவேன்.எனக்கே இப்படி என்றால் வீட்டில் உள்ளவர்கள் நிலை,இவர்கள் தொடவேமாட்டார்கள்.
ஒருமுறை லேஸாக வறுத்துப் பொடித்து உப்புமா செய்தேன்.வறுத்ததால் நல்ல வாசனையுடன் சுவை கூடுதலாகவும் இருந்தது.கொஞ்சம் கொழகொழப்பும் குறைவாக இருந்தது.அன்றிலிருந்து ஒரு பெரிய கண்ணாடி பாட்டில் அளவிற்கு வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு கஞ்சி,பொங்கல்,உப்புமா,கிச்சடி என எல்லாமும் செய்வேன்.கொஞ்சம் கூடுதலாக மாவாக்கிக் கொண்டால் இட்லி,தோசை,அடை என எல்லாமும் செய்யலாம்.இப்போது எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த தானியமாக வலம் வந்துகொண்டிருக்கிறது.
படத்தில் உள்ளதுபோல் உள்ள தட்டையான ஓட்ஸை (Rolled oats) வெறும் வாணலில் போட்டு மிதமானத் தீயில் லேஸாக சிவந்து, சூடேறும்வரை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்றுகள் சுற்றி பொடித்துக்கொள்ளவும்.மாவாக்க வேண்டுமானால் மேலும் இரண்டு சுற்றுகள் சுற்றினால் மாவாகிவிடும்.
நீங்களும்போய் ஓட்ஸை வறுத்து,பொடிச்சு வையுங்க.அடுத்த பதிவில் இந்த பொடித்த ஓட்ஸை வைத்து வெண்பொங்கல் செய்வதைப் பார்க்கலாம்.
7:38 பிப இல் பிப்ரவரி 10, 2013
ஓட்ஸ் வீட்டில் செல்லுபடியாவதே இல்லை.
ஆனால் இதயத்திற்கு மிகவும் நல்லது என்று சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் சொல்வது போல் அதன் கொழகொழப்பு , யாரையும் கிட்ட நெருங்க விடுவதில்லை.
ஆவலுடன் காத்திருக்கிறேன் உங்கள் ஓட்ஸ் பொங்கலுக்காக .
உபயோகமான மருத்துவ பதிவு.
நன்றி பகிர்விற்கு.
8:24 பிப இல் பிப்ரவரி 10, 2013
ராஜலஷ்மி,
நான் சொன்னதுபோல வறுத்து,பொடிச்சு செஞ்சு பாருங்க,நல்ல வாசனையோட இருக்கும்.பிறகு அவர்களாகவே சாப்பிட நெருங்கி வருவாங்க.
கூடிய விரைவில் பொங்கல் பதிவு போட முயற்சிக்கிறேன்.வருகைக்கு நன்றிங்க.
2:10 முப இல் பிப்ரவரி 11, 2013
நன்றாக சிவக்க வறுத்து பொடி செய்து, சர்க்கரை சேர்த்து
நெய்விட்டு லட்டு ஏலக்காய் வாஸநையுடன் , ஆப்பத்துக்கு
கஞ்சிகாச்ச, சுலபமாயிருக்கு. வறுத்தமாவு கையிருப்பிருந்தால்
ரொம்பவே சுலபந்தான். நல்ல யோசனை.
7:16 பிப இல் பிப்ரவரி 11, 2013
காமாஷிமா,
பின்னூட்டத்தின் மூலம் ஓட்ஸ் லட்டுக்கு ரெசிபி கெடச்சாச்சு.நீங்க சொல்வதுமாதிரியே வறுத்தமாவு கையிருப்பு இருப்பதால் அவசர டிஃபனுக்கு ரொம்பவே உதவியா இருக்கு.உங்க யோசனைக்கும் நன்றிமா.
“ஆப்பத்துக்கு கஞ்சிகாச்ச,சுலபமாயிருக்கு”___இது என்னன்னு தெரியல, நேரம் கிடைக்கும்போது சொல்லுங்கம்மா.அன்புடன் சித்ரா.
3:22 முப இல் பிப்ரவரி 11, 2013
nalla pathivu…nandri 🙂
7:18 பிப இல் பிப்ரவரி 11, 2013
ஞானகுரு,
சென்னையின் அவசர உலகத்திலிருந்தும் வந்து பின்னூட்டம் கொடுப்பது மகிழ்ச்சி.வருகைக்கு நன்றி.
2:21 முப இல் பிப்ரவரி 13, 2013
yes 😦 missing all posts and comments of your posts…tc..thanks.
1:41 பிப இல் பிப்ரவரி 11, 2013
நான் ஓட்ஸை அப்படியே லேஸாக நெய்யில் வறுத்து சேர்த்து பொங்கல் செய்வேன் சித்ராக்கா..கொழகொழப்பு தெரியாது. வறுத்து பொடித்து உப்மா செய்திருக்கேன் எப்பவோ ஒரு காலத்தில்! 🙂
கடந்தமுறை வாங்கிய ஓட்ஸ் தீர்ந்த பிறகு இன்னும் வாங்கவே இல்லை. சீக்கிரம் வாங்கணும், உங்க ரெசிப்பி எல்லாம் ப்ரெஷ்ஷா ட்ரை பண்ணனுமே! 😉 🙂
7:32 பிப இல் பிப்ரவரி 11, 2013
நானும் முன்பெல்லாம் முழு ஓட்ஸை போட்டு செய்திருக்கிறேன்.அது பிடிக்காமலே இருந்தது.பிறகு பொடித்து செய்து பார்த்தேன்,ஓரளவிற்கு பரவாயில்லையாய் இருந்தது.இப்போது வறுத்துப்,பொடித்துவிடுவதால் நல்ல வாசனையாகவும் இருக்கிறது.ஓட்ஸைப் பார்த்தாலே ஓட்டம் பிடிக்கும் இவர்களே சாப்பிடும்போது நானும் செய்துவிடுவது.
சீக்கிரம் வாங்கி பொடிச்சு வைங்க.ஒரு நாளைக்கு(கே) எல்லோருமாக சேர்ந்து செஞ்சிடலாம்.வருகைக்கு நன்றி மகி.
7:49 முப இல் பிப்ரவரி 17, 2013
ஓட்ஸ் என்றால் கஞ்சி மட்டும்தான் என்று நினைத்திருந்த எனக்கு உங்கள் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளும் யோசனை மிகவும் பிடித்து விட்டது.
வெண்பொங்கல் செய்முறைக்காக வெயிட்டிங்!
6:36 பிப இல் பிப்ரவரி 17, 2013
ரஞ்சனி,
ஓட்ஸை முழுசுமுழுசா போட்டு கஞ்சி செய்து பார்த்துவிட்டுத்தான் இந்த வேலையில் இறங்கினேன்.வறுத்துப்பொடித்ததில் கஞ்சி செஞ்சு பாருங்க, கமகம வாசனையோட சூப்பரா இருக்கும்.உப்புமா,கிச்சடி எல்லாம் பின்னால், நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்னா வரும்.
வெண்பொங்கல் செஞ்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.வருகைக்கு நன்றிங்க.