ஓட்ஸ் பொங்கல் / Rolled Oats pongal

oats pongal

பொங்கலில் மிளகை ஒன்றும்பாதியுமாக பொடித்துப் போட்டால் சாப்பிட்டு முடித்தபிறகு தட்டில் மிளகு மீதமாகி இருப்பதைத் தவிர்க்கலாம்.இஞ்சியையும் அப்படியே வெளியே எடுத்துப் போடாத அளவிற்கு தட்டிப்போடலாம்.

இந்தப் பொங்கலை நான் எழுதியுள்ள மாதிரியும் செய்யலாம்.இல்லாவிடில் பச்சைப்பருப்பு+ஓட்ஸிற்கும் சேர்த்து தண்ணீர் ஊற்றி அதில் பச்சைப்பருப்பை வேகவைத்து,வெந்ததும் ஓட்ஸைப்போட்டுக் கிளறிக்கொடுத்து இறக்கும்போது,தாளிப்பை செய்து பொங்கலில் கொட்டிக்கிளறி இறக்கினால் இன்னும் நல்ல வாசனையாக இருக்கும்.

தேவையானவை:

வெறும் வாணலில் வறுத்துப் பொடித்த ஓட்ஸ் பொடி_2 கப்
பச்சைப் பயறு_1/4 கப்பிலிருந்து 1/2 கப்பிற்குள்
மஞ்சள்தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நெய்_இரண்டுமூன்று டீஸ்பூன்.
மிளகு_சிறிது
சீரகம்_கொஞ்சம்
முந்திரி_10
இஞ்சி_சிறு துண்டு
கறிவேப்பிலை_ஒரு கொத்து

செய்முறை:

பச்சைப்பயறை சிவக்க வறுத்து,அது வேகுமளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள்தூள்,பெருங்காயம்,விளக்கெண்ணெய் (அ) நல்லெண்ணெய் விட்டு ரொம்பவும் குழையாமல் வேகவைக்கவும்.பச்சைப்பருப்பு வேகத்தான் நேரமெடுக்கும்.அது வெந்துவிட்டால் பொங்கல் நிமிடங்களில் ரெடியாகிவிடும்.

அது வெந்துகொண்டிருக்கும்போதே இஞ்சியைத் தட்டிவைத்துக்கொள்ளவும். மிளகையும் பொடித்து வைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி,நெய்யை விட்டு சூடாகியதும் தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்துவிட்டு ஒரு பங்கு ஓட்ஸ்பொடிக்கு இரண்டு பங்கு என தண்ணீர் விடவும்.எனவே இரண்டு கப் ஓட்ஸிற்கு 4 கப் தண்ணீர் ஊற்றி,தேவையான உப்பும் போட்டு,கொதிக்கும்வரை மூடி வைக்கவும்.

பொங்கல் கொஞ்சம் மஞ்சள் நிறத்தில் வேண்டுமானால் சிறிது மஞ்சள்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அல்லது அதற்கு முன்பாகவேகூட வெந்த பச்சைப்பருப்பை சேர்த்து விடலாம்.

எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கொதித்ததும் ஓட்ஸை தூவியவாறு கொட்டிக்கொண்டே விடாமல் கிண்டிவிடவும். கிண்டுவதற்கு whisk ஐப் பயன்படுத்தினால் கட்டிகளில்லாமல் வரும்.

ரவையைப்போல ஓட்ஸும் சீக்கிரமே வெந்துவிடுமாதலால் மிதமானத் தீயில் ஒன்றிரண்டு தரம் கிளறிக்கொடுத்து தீயை நிறுத்தி மூடிவிடவும்.

இப்போது சுவையான,சத்தான,வாசனையுள்ள,கொஞ்சம் கொழகொழப்பில்லாத,எளிதாக செய்யக்கூடிய ஓட்ஸ் பொங்கல் தயார்.

oats pongal

ஆறஆற பொங்கல் கெட்டியாகும்.சூடாகவோ அல்லது மிதமான சூட்டிலோ தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.சாம்பாருடனும் நன்றாக இருக்கும்.

16 பதில்கள் to “ஓட்ஸ் பொங்கல் / Rolled Oats pongal”

  1. Gnanaguru Says:

    semma…want to eat this pongal..:) tat cashew kandipa venum 😉

    • chitrasundar5 Says:

      ஞானகுரு,

      இப்போ ஓட்ஸ்,கேழ்வரகு சமையல் எல்லாம் நம்ம ஊர் ரெஸ்டாரண்டில் கிடைக்கும்னே நினைக்கிறேன்.தேடிக் கண்டுபிடிங்க.இது தாய்லாந்து முந்திரி.என்னதான் இருந்தாலும் எங்க பண்ருட்டி முந்திரி ஆகுமா? வருகைக்கு நன்றி.

      • gnanaguru Says:

        restarant poi kelvaraku oats sapidum alavu inum varala..konja naal agatum chennai restaurants ellathulayum poi saptu oru blog start paniduren 😉 😛 ninga panruti ah..ok enaku one kg mundhiri parcel pls..:D panruti mundhiri avalavu famous ah..panruti ramachandran kelvipatruken,.panruti palapalam kelvipatruken…mundhiri inime gyabagam varum 😛

      • chitrasundar5 Says:

        இப்போ தேடினாலும் கிடைக்காது.’தானே’புயலில் மரங்கள் எல்லாம் விழுந்துவிட்டதாகக் கேள்வி.புது செடி வைத்து அறுவடை செய்ய ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆகுமாம்.

        “chennai restaurants ellathulayum poi saptu”__ஏதோ வெயிட் போடாம ப்ளாக் போட்டா சரிதான்.சபதம் நிறைவேற வாழ்த்துக்கள்.

  2. chollukireen Says:

    ஆமாம். நெய்யில் கூட துளி பெருங்காயத்தையும் தாளித்துக் கொட்டினால் இன்னும் வாஸனை தூக்கும். சுலபமாயிருக்கு.

    • chitrasundar5 Says:

      காமாஷிமா,

      செய்முறைதான் நீளமா இருக்கு.செய்வது ரொம்பவே சுலபம்.பெருங்காயம் தாளித்துதான் செய்தேன்.சுடச்சுட போட்டதால் எழுத மறந்துபோச்சு.நன்றிமா.அன்புடன் சித்ரா.

  3. rajalakshmiparamasivam Says:

    பொங்கலைப் பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றுகிறது.
    நாளை breakfast இந்தப் பொங்கல் தான். நீங்கள் சொன்னபடியே செய்கிறேன்.
    நன்றி சொல்லிக் கொடுத்ததற்கு.

    • chitrasundar5 Says:

      ராஜலஷ்மி,

      இந்நேரம் பொங்கலை செய்து சாப்பிட்டிருப்பீங்க.வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருக்கும் என்றே நினைக்கிறேன்.ரிசல்ட்டை தெரிந்துகொள்ள ஆவல்.

      • rajalakshmiparamasivam Says:

        எழுத மறந்து விட்டேன் சித்ரா,
        மறு நாளே ஓட்ஸ் பொங்கல் வித் தேங்காய் சட்னி சாப்பிட்டோம்.
        உங்கள் ரெசிபி தான்.
        நன்றாகவே செலவாயிற்று.
        யாரும் முணுமுணுக்கவில்லை.
        அதுவே பெரிய வெற்றி.

      • chitrasundar5 Says:

        உங்க பின்னூட்டம் பார்த்து நிம்மதியாச்சு.அப்படியே உப்புமா,கஞ்சி என மாற்றிமாற்றி செய்ய வேண்டியதுதான்.செய்துபார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு நன்றிங்க.

  4. Mahi Says:

    பொங்கலை விட முந்திரி ரொம்ப அட்ராக்டிவ்-ஆ இருக்கு! 🙂 அப்படியே அந்த ப்ளேட்டை இங்க தள்ளுங்க.. 😉

  5. ranjani135 Says:

    ஓட்ஸ் பொங்கல் செய்முறை அசத்தல்! செய்து பார்க்கிறேன். முந்திரி பற்றிய பின்னூட்டம் பொங்கல் போலவே ருசியாக இருக்கிறது!

    • chitrasundar5 Says:

      செய்முறை மட்டுமல்லாது பின்னூட்டங்களையும் படித்து கருத்து சொன்னதற்கு நன்றிங்க.இந்த பொங்கல் செய்து சூடாக சாப்பிட்டால் மற்ற எல்லாப் பொங்கலையும் இது எடுத்து சாப்பிட்டுவிடும் அளவிற்கு சுவையாகவே இருக்கும்.


chitrasundar5 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி