தேவையானவை:
வறுத்துப் பொடித்த ஓட்ஸ் பொடி_2 கப்
பச்சைப்பட்டாணி_1/2 கைப்பிடி
கேரட்_சிறியது ஒன்று
காலிஃப்ளவர்_ஒரு சிறு பகுதி
சின்ன வெங்காயம்_ஐந்தாறு
தக்காளி_பாதி
இஞ்சி_ஒரு சிறிய துண்டு
பூண்டு_2 பற்கள்
பச்சை மிளகாய்_2
மஞ்சள் தூள்_சிறிது
உப்பு_தேவைக்கு
கொத்துமல்லி இலை_ஒரு கொத்து
எலுமிச்சை சாறு_சிறிது
தாளிக்க:
எண்ணெய்,கிராம்பு_3,பிரிஞ்சிஇலை_1,சீரகம்,கடலைப்பருப்பு,முந்திரி,பெருங்காயம்,கறிவேப்பிலை
செய்முறை:
பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்துவிடவும்.
வெங்காயம்,தக்காளி,கேரட்,காலிஃப்ளவர் இவற்றை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.
இஞ்சி,பூண்டு தட்டிக்கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பிலேற்றி தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் வெங்காயம்,தக்காளி,காய்கள்,பட்டாணி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கிவிட்டு,ஒரு பங்கு ஓட்ஸ் பொடிக்கு இரண்டு பங்கு தண்ணீர் என ஊற்றிவிட்டு,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கலக்கிவிட்டு கொதி வரும்வரை மூடி வைக்கவும்.
கொதி வந்ததும்,ஓட்ஸ் பொடியை லேஸாகத் தூவியவாறு கொட்டிக்கொண்ட்டே விடாமல் கிண்டிவிடவும். கிண்டுவதற்கு whisk ஐப் பயன்படுத்தினால் கட்டிகளில்லாமல் நன்றாக வரும்.
முழுவதையும் கொட்டிக்கிண்டிய பிறகு தீயைக்குறைத்துவிட்டு இரண்டொருதரம் கிளறிக்கொடுத்து,எலுமிச்சை சாறு விட்டு,கொத்துமல்லி தூவி இறக்கவும்.
இப்போது சுவையான ஓட்ஸ் கிச்சடி தயார்.தேங்காய் சட்னி,சாம்பாருடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
உங்கள் விருப்பம்போல் காய்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.அதேபோல் இறுதியாக முந்திரியை நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம்.
இப்பதிவை ஃபாயிஷாவின் Passion on plate giveaway event ற்கு அனுப்புகிறேன்.
6:37 பிப இல் பிப்ரவரி 25, 2013
பசியை தூண்டி விட்டீர்கள்…
6:40 பிப இல் பிப்ரவரி 25, 2013
மாலை டிஃபனுக்கு ரெடிபண்ணிட வேண்டியதுதான்.வருகைக்கு நன்றிங்க.
7:02 பிப இல் பிப்ரவரி 25, 2013
அவ்வ்வ்…முந்திரியைப் போட்டே மனதைப் பறிக்கறீங்களே?! 😉 நல்லா இருக்கு கிச்சடி..நான் இன்ன்ன்ன்ன்னும் ஓட்ஸ் வாங்கலே! ஹிஹி..கடைக்குப் போகும்போதெல்லாம் மறந்து போகுதே..அடுத்த வாட்டில் ரிமைன்டர் வைச்சுகிட்டு போகணும். 🙂
7:27 பிப இல் பிப்ரவரி 25, 2013
“முந்திரியைப் போட்டே மனதைப் பறிக்கறீங்களே”___அந்த ஊர் பக்கம்னு வேற எப்படி காட்றது?.ரவை மாதிரி இதையும் ஸ்டாக் வச்சிக்கிட்டா அவசரத்துக்கு உதவும்.செஞ்சிங்களா இல்லையான்னு அடுத்த வாரம் வந்து செக் பண்ணிடுவோமில்ல!வருகைக்கு நன்றி மகி.
10:07 பிப இல் பிப்ரவரி 25, 2013
பாத்தாலே சாப்பிடணும் போல இருக்கு. நல்ல வெண்ணெய் காச்சின நெய்யை விட்டு, எல்லா ஸாமானையும் போட்டுண்டிருக்கேன். வந்து
ருசிபாரு என்று கூப்பிடுவதுபோல இருக்கு. வரேன் வரேன்.
10:18 பிப இல் பிப்ரவரி 25, 2013
காமாஷிமா,
வாங்கவாங்க,உங்களுக்கில்லாததா?நீங்க சூப்பரா செஞ்சிருப்பீங்க. ‘நேபாளம்’பற்றிய பதிவில் கிச்சடி,கேசரி கிண்டியதையெல்லாம் சொன்னவிதம் நேரில் பார்த்ததுபோலவே இருந்தது.
‘வந்து ருசிபாரு என்று கூப்பிடுவதுபோல இருக்கு.வரேன் வரேன்”____மகிழ்ச்சியாக உள்ளது.
11:34 பிப இல் பிப்ரவரி 25, 2013
உங்கள் ஓட்ஸ் கிச்சடி இந்த வாரத்தில் ஒரு நாள் கண்டிப்பாக செய்வேன்.
செய்து பார்த்து மீண்டும் பின்னூட்டம் இடுகிறேன்.
நன்றி பகிர்விற்கு.
வேறு என்ன என்ன செய்யலாம் ஓட்ஸ் வைத்து ? பதிவு செய்யுங்கள்.
1:55 பிப இல் பிப்ரவரி 26, 2013
செஞ்சிட்டு சொல்லுங்க.கொஞ்சம் சூடாகவோ அல்லது மிதமான சூட்டிலோ சாப்பிட்டால் ஒன்றுமே தெரியாது.
ஒன்னுமில்லைங்க,அரிசி,ரவைல என்னலாம் செய்வோமோ அதையெல்லாம் செய்யலாம்.அடுத்து ஓட்ஸ் கஞ்சி போடுறேன்.காலையில் அவசரத்திற்கு உதவும்.வருகைக்கு நன்றிங்க.
11:36 பிப இல் பிப்ரவரி 25, 2013
உங்கள் ஓட்ஸ் கிச்சடி இந்த வாரம் செய்து விடுவேன்.
செய்து பார்த்து மீண்டும் பின்னூட்டம் இடுகிறேன்.
வேறு என்னென்ன செய்யலாம் ஓட்ஸ் வைத்து? பதிவு செய்யுங்கள்.
நன்றி பகிர்விற்கு.
10:21 பிப இல் பிப்ரவரி 27, 2013
நான் வருவதற்குள் ஓட்ஸ் கிச்சடியை போட்டிக்கு அனுப்பிட்டீங்களே!
‘கொஞ்சம் சூடாகவோ அல்லது மிதமான சூட்டிலோ சாப்பிட்டால் ஒன்றுமே தெரியாது’ – என்னங்க இது?
11:17 முப இல் பிப்ரவரி 28, 2013
நேரம்தான் முக்கியம்.ரிப்பேரு,ப்ரேக்டௌன் ஆயிருச்சு இதெல்லாம் வேலைக்காகாது.
“‘கொஞ்சம் சூடாகவோ அல்லது மிதமான சூட்டிலோ சாப்பிட்டால் ஒன்றுமே தெரியாது’ – என்னங்க இது?”_____இது சீக்ரெட்.இதிலிருந்து நீங்க இன்னும் ஓட்ஸ் பொங்கல் செஞ்சு சாப்பிடலன்னு தெரியுது.அது செஞ்சு சாப்பிட்டவங்களுக்குத்தான் இந்த ரகசியம் புரியும்.அது ஓட்ஸுக்கே உரிய ஒரு சிறப்பு குணம்,கொழகொழப்பு.