ப்ரஸ்ஸல்ஸ் குருமா / Brussels sprouts kurma

kurma

இவை பார்ப்பதற்கு குட்டிக்குட்டி கோஸ் மாதிரி கொத்துகொத்தாக இருக்கும். இதைவைத்து பொரியல்,சாம்பார்,குருமா எல்லாம் வைக்கலாம்.சுவையும் ஏறக்குறைய அதேதான்.

நான் பச்சைப்பட்டாணி சேர்த்து குருமா செய்துள்ளேன்.அவரவர்க்கு விருப்பமான காய்களுடன் அல்லது சிக்கனுடனும் சேர்த்து சமைக்கலாம்.

brussels sproutbrussel sprout

தேவையானவை:

ப்ரஸ்ஸல்ஸ்_சுமார் 15
பச்சைப்பட்டாணி_1/2 கைப்பிடி
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1
இஞ்சி_சிறுதுண்டு
பூண்டிதழ்_3
மிளகாய்த்தூள்_3 டீஸ்பூன்
மஞ்சள்தூள்_சிறிது
எலுமிச்சை சாறு_1/2 டீஸ்பூன்
கொத்துமல்லி,புதினா
உப்பு_தேவைக்கு

அரைக்க:

தேங்காய் பத்தை_3
கசகசா_ஒரு டீஸ்பூன்
பொட்டுக்கடலை_ஒரு டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்
கிராம்பு_3
பிரிஞ்சி இலை_1
பட்டை_1
பெருஞ்சீரகம்
சீரகம்

செய்முறை:

பச்சைப்பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி இவற்றைப் பொடியாக நறுக்கவும்.இஞ்சி&பூண்டு தட்டிக்கொள்ள‌வும்.

ப்ரஸ்ஸல்ஸை முழுதாகக் கழுவிவிட்டு நுனிப்பகுதியில் லேஸாகக் கீறிவிடவும்.அல்லது முழுதாகக்கூட போட்டுக்கொள்ள‌லாம்.

அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.

பிறகு வெங்காயம்,தக்காளி,பட்டாணி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கிவிட்டு,இரண்டு கப் தண்ணீர் ஊற்றி,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மூடி கொதிக்க விடவும்.

நன்றாகக் கொதித்த பிறகு ப்ரஸ்ஸல்ஸை சேர்த்து வேக வைக்கவும்.இது சீக்கிரமே வெந்துவிடும்.

அரைக்க வேண்டியவற்றை மைய அரைத்து,குருமா மீண்டும் கொதி வரும்போது அதில் சேர்த்து கலக்கிவிடவும்.

எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் எலுமிச்சை சாறு,கொத்துமல்லி இலை,புதினா சேர்த்து இறக்கவும்.

இது சாதம்,சப்பாத்தி,பரோட்டா இவற்றிற்கு நன்றாகப் பொருந்தும்.

குருமா வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 11 Comments »

11 பதில்கள் to “ப்ரஸ்ஸல்ஸ் குருமா / Brussels sprouts kurma”

 1. திண்டுக்கல் தனபாலன் Says:

  சிக்கனுடன் சேர்த்து செய்து பார்ப்போம்… நன்றி…

 2. rajalakshmiparamasivam Says:

  சித்ரா,
  உங்கள் குட்டி முட்டைகோஸை வைத்து சாம்பார் எல்லாம் செய்திருக்கிறேன்.
  ஆனால் குருமா செத்ததில்லை.

  நல்ல சமையல் குறிப்பு.

 3. MahiArun Says:

  Nice recipe..shall try some time. Thanks for the farmers market picture. I never knew that brussel sprouts grow like this! 🙂
  After seeing the picture here, did see some more in google images as well! 😀

  • chitrasundar5 Says:

   உங்க ஊர் கடையில் முழு கொத்தா இருக்காதா!ம்,ஃபார்மர்ஸ் மார்க்கெட் படம் போட்டதும் நல்லதாப்போச்சு.

   வாரத்துக்கு ஒரு 10 காய் வாங்கினாலே மீதமாகிடும்.சிலர் முழுகொத்தா எடுத்துட்டு போவாங்க.என்ன செய்வாங்கன்னு தெரியல.

   வருகைக்கு நன்றி மகி.

 4. chollukireenkamatchi Says:

  பிரஸல்ஸ் குருமா பார்க்கவே அழகாயிருக்கு. செய்து பார்த்தால் போச்சு


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: