இட்லி சாம்பார் / Idli sambar

idli&sambaridli sambar

என்னதான் விதவிதமாக சாம்பார் வைத்து இட்லிக்கு தொட்டு அல்லது ஊற்றி சாப்பிட்டாலும் இட்லிக்கென தனியாக செய்யும் சாம்பார் மாதிரி வராது.பச்சைப் பருப்பை வேகவைத்து,சின்ன வெங்காயத்தை முழுசுமுழுசாகப் போட்டு,காய்கள் எதுவும் போடாமல்,கொஞ்சம் கூடுதலான மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த சாம்பார் இட்லி,தோசைக்கு சூப்பர்.

காய் போட்டே தீருவேன் என அடம்பிடித்தால் காயின் வாசனை வராத அளவுக்கு சிறு கேரட் ஒன்று போடலாம்.

தேவையானவை:

பச்சைப்பருப்பு_1/4 கப்
சின்ன வெங்காயம்_சுமார் 10
பழுத்த,சிவந்த தக்காளி_1
பச்சை மிளகாய்_1
பூண்டிதழ்_2
மஞ்சள்தூள்_சிறிது
மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை
உப்பு_தேவைக்கு
அரிசி மாவு_1/2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
வெந்தயம்_நான்கைந்து(வாசனைக்கு)
பெருங்காயம்
காய்ந்த மிளகாய்_1
கறிவேப்பிலை

செய்முறை:

பச்சைப்பருப்பை வெறும் வாணலில் சிவக்க வறுத்து,ஆறியதும் கழுவிவிட்டு,அது வேகுமளவு தண்ணீர் விட்டு,அதில் விளக்கெண்ணெய் 2 சொட்டு,பெருங்காயம், மஞ்சள்தூள்,பூண்டிதழ்கள் சேர்த்து மலர வேக வைத்து கடைந்து வைக்கவும்.

வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் இவற்றை நறுக்கிக்கொள்ளவும். வெங்காயத்தை லேசாகத் தட்டி முழுதாகக்கூட போடலாம்.

ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் பருப்பை சேர்த்துவிட்டுத் தேவையானத் தண்ணீர் விட்டு மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கலக்கிவிட்டு மூடி கொதிக்க வைக்கவும்.

நன்றாகக் கொதித்தபிறகு அரிசி மாவில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து சாம்பாரில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.

idli sambar

அரிசி மாவு இல்லாவிட்டால் (எங்க அம்மா செய்வது) இட்லி மாவில் சிறிது எடுத்து சாம்பாரில் விட்டு கலக்கிவிட்டும் கொதிக்கவைத்து இறக்க‌லாம்.

இது இட்லி,தோசை,பொங்கல் இவற்றிற்குப் பொருத்தமாக இருக்கும்.

22 பதில்கள் to “இட்லி சாம்பார் / Idli sambar”

 1. MahiArun Says:

  I always fail while adding rice flour/idli batter to gravies like this Chitra Akka..sothappiruven! 😉 Your version and photos look good!

  Oru chinna doubt..Paruppu sambarukkum arisi maavu thevai paduma? Sambar thick-aa thaane irukkum? I heard people adding kadalamaavu to poori-masala, but this is new to me!

  • chitrasundar5 Says:

   இந்த சாம்பாருக்கு மட்டுமே அரிசிமாவு சேர்ப்பேன்.அரிசிமாவில் சிறிது தண்ணீர் விட்டு(பால் அளவிற்கு)கரைத்து ஊற்றி கிண்டிவிட்டு கொதி வந்தபிறகு இறக்குவேன்.

   இதே மாதிரிதான் பூரி மசாலாவுக்கும்.கடலைமாவை கரைத்துவிட்டு செய்தால் உருளையும்,அந்தத்தண்ணீரும் சேர்ந்தார்போல் இருக்கும்.

   துணிந்து ஒரு தடவ செஞ்சிருங்க.பிடிச்சா அடுத்த தடவையும்,இல்லாட்டி விட்டுடலாம்.வருகைக்கு நன்றி மகி.

   • Mahi Says:

    நீங்க வேற! ஒரு முறை இப்படி இட்லிமாவு கரைச்சு விடற ஒரு ரெசிப்பிய, ஸ்டெப் பை ஸ்டெப் போட்டோ எடுத்துகிட்டே செய்தேனா..போட்டோஸ் எல்லாம் சூப்பரோ சூப்பர்! ஆனா எங்களுக்கு ருசி பிடிக்கலை சித்ராக்கா! அவ்வ்வ்வ்! 😉 🙂 பிறகு அத்தனை போட்டோவும் அப்படியே ஒரு மூலையில கிடக்கு! அதுக்கப்புறம் இந்த இட்லிமாவு பக்கம் போறதில்ல நானு!

    மசாலாவுக்கும் கடலைமாவு சேர்த்த ருசி பிடிக்காது(எனக்கு)..அதனால் என்னவருக்கு இந்த டெக்னிக் பற்றியே தெரியாது. நாஞ்செஞ்சாத்தானே தெரியும், ஹிஹி! 🙂 😉 எங்க வீட்டுப்பக்கம் இப்படி செய்ததே இல்லை, அதனால ருசி பிடிக்கமாட்டேன்னுதா, இல்ல நாந்தான் சொதப்பிடறேனா?! அது ஆண்டவனுக்கே வெளிச்சம்! 😀

   • chitrasundar5 Says:

    நீங்க நிறைய மாவு கரைச்சு விட்டுட்டிங்களோ!கொஞ்சமாத்தானே வைக்கப்போறோம்.1/2 டீஸ்பூனே அதிகம்.டிஃபனுக்கு மட்டும்தான். சாதத்துக்கு சரிவராது.மசாலாவுக்கும் அளவ கொறச்சு செஞ்சு பாருங்க.

  • chitrasundar5 Says:

   நான்கு வருடமா இருக்கு.சாம்பார்&ரசம் வைப்பது,சாதம் கிண்டுவது,பூரி குருமா எல்லாம் இதில்தான்.இன்னொன்னு இருக்கு,அது வேறு சமையலுக்கு.

   வயசான தாத்தா வெயிலில் வித்தாங்கன்னு வாங்கினேன்.இப்போ ரொம்பவே பிடிச்சுப்போச்சு.

   • Mahi Says:

    ஊரில் வாங்கி இங்க கொண்டுவந்து வைச்சிருக்கீங்களா? சூப்பர்!
    Gas burner இல்லாம என்ன செய்யன்னு வாங்கலை நான். என்னோட ஸ்டவ் பாத்திருக்கீங்கதானே? அதில மண்சட்டி கட்டாயம் வைக்க முடியாது.

   • chitrasundar5 Says:

    ஊர்ல இருந்துதான் வாங்கிட்டு வந்தது.இதுதா என்னோட முதல் மண் பாத்திர சமையல்.தோசைக்கல்லும் கொண்டு வந்தேன்.அதுல மாவு ஊத்தினா ஊத்தின மாவு அப்படியே வேகாம இருக்கு,ஆனா கல்லின் பாட்டத்தில் ஒரே தீய்ச்சல்.பிறகு தானாவே கொஞ்சம் கொஞ்சமா நிறைய கீறல் விட்டுடுச்சு. அடுத்த முறை அங்கேயே செய்துபார்த்து எடுத்து வர வேண்டும்.அதுல தோசை செஞ்சா நல்லா வாசனையா இருக்குமாமே.

    எங்க வீட்டிலும் electric stove தான்.இருந்தாலும் விடுவதா இல்ல.எவ்ளோ கஷ்டப்பட்டு எடுத்துட்டு வந்தது.அடுத்த தடவ ஊருக்குப்போனா நீங்களும் கையோட இதையெல்லாம் கொண்டுட்டுவந்திடுங்க.

 2. திண்டுக்கல் தனபாலன் Says:

  ஒரு சின்ன சந்தேகம் – மண்சட்டியில் செய்தால் தான் ருசியோ…?

  • chitrasundar5 Says:

   உண்மைதாங்க.அதாவது அளவோடு வேகுது.ஓவர் குக்கிங் கிடையாது.நான் குக்கரை எல்லாம் தூக்கிப்போட்டாச்சு.பருப்பு,சாதம் எல்லாம் தனித்தனியாக பாத்திரத்திலேயே வேக வச்சிடறது.நல்லாவே இருக்கு.உங்க வீட்ல வேலைக்குப் போறாங்கன்னா இதெல்லாம் சரிவராது.

   வருகைக்கு நன்றி தனபாலன்.

 3. chollukireen Says:

  மண்பாத்திரத்தில் ஸாம்பார்,வெந்தயக் குழம்பு எது செய்தாலும்
  ருசியாகயிருக்கும்,. வளவனூருக்கு முதலில் கோலியனூர் வருமே!
  தெரியுமா . அந்த ஊர் மண் பாண்டங்கள் மிகவும் பிரஸித்தம். மாரியம்மன் கோயிலும் பிரஸித்தம். அதிலும், கருப்பு நிற பாத்திரங்கள் , பாத்திரங்கள் மாடலும் அழகாக இருக்கும். வெள்ளிக்கிழமைகளும் பிரஸித்தம். கோவிலின் வாசலில் கடைகள். யாவருமே மண் பாத்திரங்கள் வாங்காது போகமாட்டார்கள். தோசைக்கல், தயிர் தோய்க்க, குழம்புகள் வைக்க, அவ்வளவு நன்ராக வரும். பீங்கான் பாத்திரங்கள் மாதிரி
  மண் பாண்டங்களும் மைக்ரோவேவில் வைக்கலாமா?
  ஸாம்பாரும், இட்லியும் ஜோராயிருக்கு. அன்புடன்

  • chitrasundar5 Says:

   காமாக்ஷிமா,

   எந்த சமையலும் செய்யலாம் போலிருக்கு.நாம்தான் நேரமெடுக்கும் என எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டோம்.

   உங்க ஊர் நினைவுகள் எழுதும்போது,கோலியனூர்,சிறுவந்தாடு எல்லாம் வரும் என எதிர்பார்த்தேன்.நானே கேட்கலாமா என நினைத்தபோது வயது காரணமாக தொந்தரவு செய்யக்கூடாது என விட்டுவிட்டேன்.

   புத்துவாயம்மன் (ஆனால் சொல்வது ‘புட்லாயம்மன்’) கோயிலுக்கு நானும் போவதுண்டு.’ஆடி’யில் வரும் வெள்ளிக்கிழமைகள் ரொம்பவே ஃபேமஸ். நிறைய மண் பாத்திரக்கடைகள் இருக்கும்.இப்போ இருக்கா என்னன்னு தெரியலமா.

   “பீங்கான் பாத்திரங்கள் மாதிரி மண் பாண்டங்களும் மைக்ரோவேவில் வைக்கலாமா?”_______தெரியலயே.அப்படின்னா வாங்கிப் பயன்படுத்தலாம். ஊருக்குப் போனபோது பார்த்தேன்,எவர்சில்வரில் என்னென்ன பாத்திரங்கள் இருக்குமோ எல்லாமே இதிலும் இருக்கு.

   வருகைக்கு நன்றிமா,அன்புடன் சித்ரா.

 4. rajalakshmiparamasivam Says:

  சித்ரா,
  இங்கேயும் முதலில் உங்களிடம் சாரி. உங்கள் கருத்தை மிஸ் பண்ணியதற்காக (இடியாப்பம் பதிவு) இப்பொழுது நன்றி சொல்லிவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன். கொஞ்சம் உடம்பு மக்கர், கூடவே கெஸ்ட்ஸ்..அதான் விஷயம்.

  உங்கள் இட்லி சாம்பார் நானும் வைப்பேன். ஆனால் பாசிப் பருப்பை வறுக்க மாட்டேன். இது வாசனையாக இருக்குமென நினைக்கிறேன். அரிசி மாவிற்குப் பதிலாக வேக வைத்த உருளைக் கிழங்கு ஒன்றை மசித்து சேர்ப்பேன்.. consistency நம் தேவைக்கு ஏற்றார் போல் வரும்.

  எதற்காக விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும் ? கசந்து விடாதோ?
  இந்தியாவில் கூட நாங்கள் மண் பானை உபயோகப் படுத்துவதில்லை.ஆனால் இங்கிருந்து
  வாங்கி பத்திரமாக எடுத்துக் கொண்டு போய் அதில் சமையல் செய்யும் உங்களை நிச்சயம்
  பாராட்ட வேண்டும்.
  பாராட்டுக்கள்.

  மிக அருமையான சுவையான பதிவு. பாராட்டுக்கள்.
  தொடருங்கள்……

  • Mahi Says:

   /எதற்காக விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும் ? கசந்து விடாதோ?/ பருப்பு வேகவைக்கும் போது சிலதுளிகள் விளக்கெண்ணெய் சேர்த்தால் பருப்பு நல்ல நிறமாக இருக்கும், நன்றாக வெந்தும் இருக்கும். அதற்காகதான் விளக்கெண்ணெய் சேர்ப்பது என நினைக்கிறேன், எங்க அம்மாவும் சேர்ப்பாங்க. 2 சொட்டு எண்ணெயில் கசப்பெல்லாம் தெரியாதுங்க.
   கரெக்ட் சித்ராக்கா? 🙂 இல்ல, வேறு காரணங்களும் இருக்கா?

   • chitrasundar5 Says:

    கரெக்ட்தான் மகி.எனக்கும் ஒரு அம்மா சொன்னாங்க.பருப்பு நல்லா வேகும், பருப்புல வாயு சேராது,வயித்துல அழுக்கு இருக்காதுன்னு.முக்கியமா பொங்கி வராது.எங்கம்மா நல்லெண்ணெய் விடுவாங்க.

    இங்கு வந்தபிறகுதான் விளக்கெண்ணெய் வாங்க ஆரம்பிச்சேன்.உங்க விளக்கத்தின் மூலம் பருப்புக்கு நல்ல நிறம் கிடைக்கும் என்பதும் தெரிந்துவிட்டது.நன்றி மகி.

  • chitrasundar5 Says:

   ராஜலஷ்மி,

   இதுக்கெல்லாமா சாரி சொல்லுவாங்க.இதுக்கெல்லாம் நான் கோபித்துக்கொள்வேன் என்ற உண்மையை யாரோ உங்ககிட்ட போட்டுக் கொடுத்திருக்காங்க.

   வறுத்து செய்தால் வாசனையாத்தான் இருக்கும்.ஏதும் வாசனை வராது என்றால் அடுத்த தடவ உருளைக்கிழங்கு சேர்க்கிறேன்.விளக்கெண்ணெய் சேர்ப்பதால் கசப்பெல்லாம் தெரியாதுங்க.மகியும் சொல்லியிருக்காங்க.ப‌ருப்பு நல்லா வேகும்,பருப்புல வாயு சேராது,வயித்துல அழுக்கு இருக்காது.முக்கியமா பொங்கி வராது.நல்ல நிறமும் கிடைக்குமாமே,பிறகென்ன சேர்த்துடுங்க.

   மண்சட்டியை முதலில் கையாள கொஞ்சம் பயம் உடைஞ்சிருமோன்னு.பிறகு அதுவே பழகிருச்சு.உடைந்தாலும் பரவாயில்லன்னு தைரியமா வாங்குங்க. வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றிங்க.

 5. ranjani135 Says:

  இதுபோல பாசிப்பயறு போட்டு இட்லிக்கேன்றே சாம்பார் இதுவரை கேள்விப்பட்டதில்லை. சாம்பார் கெட்டியாக இட்லிமாவைக் கரைத்து ஊற்றுவதும் புதிது.

  மண்சட்டி உடைந்தால்தான் அழகு, இல்லையா? அடுத்தமுறை ஊருக்கு வரும்போது (பாவம், தாத்தா!) இன்னொன்று வாங்கி வந்துடலாம்!

  தைரியமாக வாங்குங்க ராஜி! படிச்சு கிழிக்கறாப்பல, சமையல் செய்து உடைக்கலாம் பாருங்க!

  • chitrasundar5 Says:

   சாம்பார் ரொம்ப கெட்டியா இருக்காது.கூட்டம் அதிகம் என்பதால் அம்மா அப்படி செய்திருக்கலாம்.அம்மாவின் சமையல் பிடித்துப்போவதால் நானும் அப்படியே செய்துவிடுகிறேன்.

   “மண்சட்டி உடைந்தால்தான் அழகு, இல்லையா?”____எனக்கும் உடைத்து அழகு பார்க்க ஆசைதான்.தாத்தாவின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும்.என்ன செய்வது,கிடைத்தால்தானே!

   ராஜலக்ஷ்மியையும் உடைக்கச் சொல்லி ஒரே அட்வைஸா இருக்கு.உங்க சந்தோஷத்திற்காக‌ ஊரிலிருந்து ஒரு சூட்கேஸ் நிறைய வாங்கிவந்து… நான் உடைக்க வேண்டாம்,எல்லாம் தானாகவே உடைந்துவிடும்.

 6. Gnanaguru Says:

  wow super…tat idly parkum pothe poo madhiri iruku…romba perithavum ille chinathavum ille…naale idly perfect breakfast with one uluntha vadai…ithe 4 idly daily breakfast ah one week correct time ku eduthukita body sema change ah irukum nu nenaikuren…right side sambar super..and i think it ll be really tastefull…thanks for the post chitrakka.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: