ஸ்ட்ராபெர்ரி/Strawberry_வருடம் முழுவதும் மார்க்கெட்டுக்கு வரும் பழம் இது.இரண்டாவது படத்தைப் பாருங்க, எவ்வளவு ஜூஸியா இருக்குன்னு!
இது blood orange.சீஸன் சமயத்தில் ஒன்றிரண்டு மட்டும் வாங்குவேன். சாதாரண ஆரஞ்சிலிருந்து சிறிது வித்தியாசமாக இருக்கும்.
எத்தனையோ வெரைட்டியில்,நிறங்களில் ஆப்பிள் வந்தாலும் நாங்கள் வாங்குவது Fuji ஆப்பிள்.அதிக புளிப்பில்லாமல் ஜூஸியா இருக்கும்.அது இல்லையென்றால் gala வகை.Pink lady கூட உண்டு.
சீஸன் ஆரம்பிக்கும்போது நல்ல சிவப்பு நிறத்தில் வரும்.இப்போது கலர் மாறி விட்டது.நாங்கள் ரெகுலராக வாங்கும் கடையில் இந்த வாரத்துடன் விற்பனை முடிந்துவிட்டது.அங்கேயே உள்ள வேறு கடைகளில்தான் இனி வாங்க வேண்டும்..ஆப்பிளுக்கு அடுத்து இந்தக் கடையில் ப்ளாக்பெர்ரி,ப்ளூ பெர்ரி வரும்.ம் ம் யம்மி!
சீஸன் சமயத்தில் தற்சமயம்
இது அவகாடோ.இதுவும் வருடம் முழுவதும் மார்க்கெட்டுக்கு வரக்கூடியது.உள்ளே உள்ள சதைப்பகுதியை எடுத்து சர்க்கரை சேர்த்து பிசைந்து அல்லது துண்டுகளாக்கி சர்க்கரையில் புரட்டி எடுத்து சாப்பிட சூப்பரா இருக்கும்.இல்லை அப்படியேகூட சாப்பிடலாம். எங்க வீட்டில் நான் மட்டுமே சாப்பிடும் பழம் இது.
மாங்காய்,புளியங்காய் போன்றவை சீஸன் முடிந்தபிறகு காய்க்கும்போது அதன் காய்கள் புளிப்பே இல்லாமல், சாப்பிட சூப்பரா இருக்கும், ‘கரட்டுக்காய்’னு சொல்லுவோம்.அந்த மாதிரிதான் இந்தப்பழமும்.இந்த ப்ளம்ஸ் பழங்கள் சீஸன் முடியும்போது வருபவை.இரண்டு நாட்களில் பழுத்துவிடும்.
இது நம்ம ஊர் பேயம்பழம் மாதிரியான சுவையில் சூப்பரா இருக்கும்.கோடையில் மட்டுமே வரும் கடையில் இது கிடைக்கும்.விலையோ எக்கச்சக்கம்.
இது ஸ்வீட் லெமன்.ஊறுகாய் போட்டால் நன்றாகவே இல்லை, குப்பைக்குத்தான் போனது.மீதமானதை நறுக்கி நறுமணத்துக்காக ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டேன்.
கரும்பும் ஏறக்குறைய வருடம் முழுவதும் வந்துகொண்டுதான் இருக்கிறது.ஒரு துண்டு $3.இரண்டு துண்டுகள் $5.
வீட்டுக்குப் போய் கடித்து / நறுக்கி சாப்பிடுவதில் சிரமமா? அல்லது இதையெல்லாம் செய்யும்போது கார்பெட் அழுக்காகிவிடும் என நினைத்தாலும் ப்ளாஸ்டிக் கவரில் உள்ளதை வாங்கிக்க வேண்டியதுதான்!ஆனாலும் கடித்து சாப்பிடுவதில் ஒரு சுவை உண்டு.
8:00 பிப இல் மார்ச் 20, 2013
Hmmmm…farmerssssssss marketttttt! :))) enjoy!
9:45 பிப இல் மார்ச் 20, 2013
yesszzzz…
9:56 பிப இல் மார்ச் 20, 2013
ஸ்…ஸ்…ஸ்…
அடிக்கிற வெயிலுக்கு இவையெல்லாம் மிகவும் தேவை…
10:04 பிப இல் மார்ச் 20, 2013
வீட்டுக்குக் கிளம்பும்போது அப்படியே வாங்கிட்டுப் போக வேண்டியதுதான். ஆனாலும் நம்ம ஊர் வெள்ளரிப்பழம்,இளநீர்,நுங்கை விடவா!!!
வருகைக்கு நன்றிங்க.
10:48 பிப இல் மார்ச் 20, 2013
இந்தப் பழங்களைப் பார்த்தவுடன், ஆஹா! இவைகளை வாங்கி, சுத்தம் செய்து (யாராவது!) நறுக்கி கொடுத்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று தோன்றியது!
கண்ணுக்குக் குளிர்ச்சியான பழங்கள்!
6:26 பிப இல் மார்ச் 21, 2013
யார் உதவியும் தேவையில்லை.பேசாம எங்க ஊர் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டின் இந்தப் பக்கமாக நுழைந்து அந்தப் பக்கமாக வெளியே வந்திடுங்க போதும், சூப்பரா ஃப்ரெஷ் ஃப்ரூட் சாலட் சாப்பிட்ட மாதிரி ஆயிடும்.
வருகைக்கு நன்றிங்க.
3:42 முப இல் மார்ச் 21, 2013
இந்த அவகேடோவை நறுக்கி, இடித்தமாதிரி பண்ணி டொமேடோ,பச்சை மிளகாய்,வெங்காயம் , பச்சை கொத்தமல்லி யெல்லாம் போட்டு, எலுமிச்சம் பழம் பிழிந்து, கறுக்காது .இருக்க
அதன் கொட்டையை நடுவில் வைத்து, ஆலிவ் ஆயில் விட்டு, உப்பு போட்டுதான் ஒரு ஸைட்டிஷ் ஸவுத் ஆப்பிரிக்காவில் கற்றதாக என் பிள்ளை செய்வது மிகவும் எனக்குப் பிடிக்கும். அவகேடாவைப் பார்த்ததும் ஞாபகம் வந்தது.. இரும்புச் சத்து மிகுந்தது இது.
மற்ற பழங்களெல்லாம் வாவா என்று கூப்பிடுகிரது.ப்ளட் ஆரஞ்ச் பார்க்கலே. பழங்களின் அணிவகுப்பு. அன்புடன்
6:41 பிப இல் மார்ச் 21, 2013
காமாக்ஷிமா,
‘அவகாடோ’வை வைத்து நீங்க சொல்லியுள்ள முறையும் எளிதாகவே இருக்கு.நல்ல கொழுப்பு இருப்பதாகக்கூட சொல்றாங்க.ப்ளட் ஆரஞ்சை நானும் இங்குதான் பார்க்கிறேன்.
பின்னாளில் (‘வேர்ட்ப்ரஸ்’காரங்க விட்டு வச்சாங்கன்னா) எப்போதாவது எடுத்து பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் பதிந்துகொண்டேன் அம்மா. அன்புடன் சித்ரா.
10:33 முப இல் மார்ச் 22, 2013
க்வாக்கமோலே- ரெசிப்பிதானே காமாக்ஷிம்மா சொல்லியிருப்பதும்? 🙂 😉
5:05 பிப இல் மார்ச் 22, 2013
ஆமாம் மகி,அதேதான்.நான்தான் செய்வது கிடையாது.’க்வாக்கமோலே’யை சும்மா சாப்பிட்டுப் பார்க்கவாவது ஒரு நாளைக்கு செய்துபார்க்க வேண்டும், வருகைக்கு நன்றி மகி.
10:02 முப இல் மார்ச் 22, 2013
உங்கள் பசங்கள் நாவில் நீர் ஊற செய்கிறது.
அவகாடோவில் நல்ல கொழுப்பு(HDL) இருப்பதாகப் படித்திருக்கிறேன். .
உங்கள் தளத்திற்கு வந்தால் உங்கள் ரெசிபியுடன் கூட மற்றவர் ரெசிபியும் கிடைக்கும் போலிருக்கிறது. .இன்று காமாக்ஷி மாமி ரெசிபி.
பழங்கள் அழகான படங்களாகியிருக்கின்றன.
4:59 பிப இல் மார்ச் 22, 2013
ஆமாங்க,நானும் படித்திருக்கிறேன்.இருந்தாலும் கொழுப்பு எனும்போது கொஞ்சம் யோசிப்பேன்,பிறகு என்னைக்கோ ஒரு நாளைக்குத்தானே என வாங்கிடுவேன்.
“உங்கள் ரெசிபியுடன் கூட மற்றவர் ரெசிபியும் கிடைக்கும் போலிருக்கிறது” ____பின்னூட்டத்தில் காமாக்ஷி அம்மா,மகி இவர்களின் குறிப்புகளும் தொடர்ந்து வருவது சந்தோஷமாக உள்ளது.வருகைக்கு நன்றிங்க.
“பழங்கள் அழகான படங்களாகியிருக்கின்றன”__அழகான இந்த ஒருவரிக் கவிதைக்கும் நன்றிங்க.