பனீர் & பச்சைப்பட்டாணி குருமா / Paneer mutter masala

kurumakuruma

அவரவர் விருப்பம்போல் பனீரை தனியாகவோ அல்லது மற்ற காய்கறிகளுடன் சேர்த்தோ குருமா செய்யலாம்.

தேவையானவை:

பனீர்_சுமார் 100 g
பச்சைப் பட்டாணி_1/2 கைப்பிடி
சின்ன வெங்காயம்_10
தக்காளி_1 பெரியது
இஞ்சி_சிறு துண்டு
பூண்டிதழ்_3
மிளகாய்த்தூள்_ஒன்றரை டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள்_சிறிது
எலுமிச்சை சாறு
கொத்துமல்லி தழை_ஒரு கொத்து
புதினா_ஒரு கொத்து
உப்பு_தேவைக்கு

அரைக்க:

தேங்காய் பத்தை_3
கசகசா_ஒரு டீஸ்பூன்
முந்திரி_2 (அல்லது) சிறிது பொட்டுக்கடலை

தாளிக்க:

எண்ணெய்
கிராம்பு_3
பட்டை_சிறு துண்டு
சீரகம்
பெருஞ்சீரகம்
வெந்தயம்_4 (வாசனைக்கு)

செய்முறை:

பச்சைப்பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்துவிட‌வும்.

வெங்காயம்,தக்காளி இவற்றை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்..இஞ்சி & பூண்டு தட்டிக்கொள்ள‌வும்.

அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,முதலில் இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்.

பிறகு வெங்காயம் & தக்காளி அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசம்போக நன்றாக வதக்கவும்.

அடுத்து பட்டாணியை சேர்த்து வதக்கிவிட்டு,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து மூடி கொதிக்க விடவும்.

குருமா கொதி வருவதற்குள் ஒரு கடாய் அல்லது தோசைக்கல்லை அடுப்பிலேற்றி சிறிது எண்ணெய் விடவும்.

பனீரை சிறுசிறு துண்டுகளாக்கி,எண்ணெய் சூடானதும் கடாயில் போட்டு,பனீரின் எல்லா பக்கங்களும் லேஸாக நிறம் மாறும் வரை வதக்கி எடுக்கவும்.அல்லது நறுக்கிய துண்டுகளை அப்படியேகூட‌ சேர்த்துக்கொள்ள‌லாம்.

குருமா கொதிக்க ஆரம்பித்ததும் பனீர் துண்டுகளை சேர்த்து கிண்டிவிட்டு கொதிக்க‌விடவும்.

குருமா நன்றாகக் கொதித்த பிறகு தேங்காய்,கஸகஸா,முந்திரி இவற்றை மைய அரைத்து குருமாவுடன் சேர்த்து கலக்கிவிடவும்.

எல்லாம் சேர்ந்து கொதித்ததும் எலுமிச்சை சாறு,கொத்துமல்லி,புதினா சேர்த்து இறக்கவும்.

kuruma

இது சாதம்,சப்பாத்தி,பரோட்டா இவற்றிற்கு சூப்பராக இருக்கும்(இருந்தது).

14 பதில்கள் to “பனீர் & பச்சைப்பட்டாணி குருமா / Paneer mutter masala”

  1. திண்டுக்கல் தனபாலன் Says:

    சூப்பர்…

    செய்முறைக்கு நன்றி…

  2. rajalakshmiparamasivam Says:

    குருமாவில் பனீர் கொஞ்சம் வித்தியாசமான சுவையுடன் இருக்குமென நினைக்கிறேன்.
    எனக்கு குருமாவே கொஞ்சம் தகராறு செய்யும்.(கவனிக்கவும். குருமாதான் என்னோடு தகராறு செய்து ஒழுங்காக வராது. நான் ரொம்பவும் சரியாக செய்வேன் என்று சொல்ல வருகிறேன்)
    பனீர் குருமா என்பதைவிட குருமா செய்முறையை நன்றாகப் பார்த்துக் கொண்டேன். ஒரு சின்ன சந்தேகம் இந்த கசகசா அரைபட ரொம்பவும் அலட்டிக் கொள்கிறதே.ஒரு டிப்ஸ் தாங்களேன்.

    • chitrasundar5 Says:

      ராஜலக்ஷ்மி,

      உங்க பதிவு போலவே பின்னூட்டமும் கலகலப்பா இருக்கு.

      “கசகசா அரைபட”_____ஏதாவது ஒரு வழியில அதை முதலிலேயே கொஞ்சம் தட்டிவிட்டு,பிறகு தேங்காயுடன் மிக்ஸியில் போட்டு,மிதமான சுடுதண்ணீர் விட்டு அரைத்தால் மசிந்துவிடும்.

      வருகைக்கு நன்றிங்க.

  3. மகிஅருண் Says:

    குருமா நன்றாக இருக்கு சித்ராக்கா! நான் பெரும்பாலும் ப்ரோஸன் பட்டாணிதான் உபயோகிப்பேன். நீங்க எப்படி “1/2 கைப்பிடி பச்சைப்பட்டாணி”-யை ஊறவைச்சு, பொறுமையா வேகவும் வைக்கறீங்க? 😉

    அப்புறம் இன்னொரு சீரியஸ் டவுட்..”கசகசா” இந்தியன் ஸ்டோரில் கிடைக்குதா என்ன? நான் ஸ்ப்ரவுட்ஸ் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் கிடைக்கும் என்று தோழி சொன்னதைக் கேட்டு தேடினேன், ஆனா கருப்பு கலரில் இருந்ததே “poppy seeds”?! அதனால் வாங்காமலே வந்துட்டேன். எங்கே கிடைக்கும்னு சொல்லுங்களேன். நன்றி!

    பனீர் பக்கத்தில பரோட்டா டாப் க்ளாஸா இருக்கு..சாதத்தை விட, பரோட்டாதான் என்னை இழுக்குது, ஸோ அந்த ப்ளேட்டை நான் எடுத்துக்கிறேன்! 😛 😉

    • chitrasundar5 Says:

      பட்டாணியை ஊறவச்சு,காய்கள் மாதிரி அப்படியே சேர்த்திடுவேன்.எளிதில் வேகக்கூடியதுதானே.எல்லா நேரமும் கிடைக்காது என்பதால் முருங்கைக்காய் தவிர ஃப்ரோஸன் காய்கள் எதுவும் வாங்கியது கிடையாது.

      கருப்பு கலரில் கஸகஸாவா!!கஸகஸாவை நம்ம ஊர் கடைகளில் இருந்துதான் வாங்குறேன்.பட்டை,கிராம்பு பக்கத்தில் தேடிப்பாருங்க.

      பரோட்டா ப்ளேட்டையே எடுத்துக்கோங்க மகி.எங்க வீட்டிலும் எல்லோருக்கும் அதுதான் பிடித்திருந்தது.

      • மகிஅருண் Says:

        //பட்டாணியை ஊறவச்சு,காய்கள் மாதிரி அப்படியே சேர்த்திடுவேன்.எளிதில் வேகக்கூடியதுதானே.// என்ன சொல்றீங்க? ரியலி??! 🙂 நான் எப்பவுமே பட்டாணி மற்றும் உலர் தானிய வகைகளை ஊறவைச்சு ப்ரெஷர் குக்கரில் வேக வைப்பதுதான் வழக்கம். ஊறினாலும் பட்டாணி அவ்வளவு சீக்கிரம் வெந்துருமா? டவுட்டா இருக்கே….அவ்வ்வ்வ்வ்!

        கஸகஸா இந்த முறை இண்டியன் ஸ்டோர் பொனப்போ மறந்தாச்சு, அடுத்த முறை பார்க்கறேன். நன்றி! 🙂

      • chitrasundar5 Says:

        பட்டாணி,பெரும்பயறு இதையெல்லாம் ஊறவச்சு அப்படியே சேர்த்திடுவேன். சுண்டலுக்கான தானியங்களையும் ஊறவச்சு குக்கரில் வைக்காமல் பாத்திரத்திலேயே வேகவச்சுடுவேன்.அது தனி ருசிதான்.ட்ரைபண்ணி பாருங்க.

        இந்த முறை இல்லாட்டி அடுத்த தடவ போனால் கொஞ்சம் உஷாரா எழுதி எடுத்திட்டுப் போய்விட வேண்டியதுதான்.ஆனாலும் வாங்காமல் விடுபட்டு போனால் கடுப்பாகத்தான் இருக்கும்.

  4. மகிஅருண் Says:

    என்ன சித்ராக்கா? ஏப்ரல்ல இதுவரை சமையலறையில் ஒரே ஒரு பதிவு தான் போட்டிருக்கீங்க? பிஸியா?..அப்டேட் பண்ணுங்கோ சீக்கிரம்…

  5. சாக்பீஸ் Says:

    செய்து பார்த்தோம். சப்பாத்திக்கு மிக அருமையாக இருந்தது. நன்றி!


மகிஅருண் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி