கேரட் & புரோக்கலி பொரியல் / Carrot & Broccoli poriyal

carrot&broccoli poriyal

தேவையானவை:

நடுத்தர அளவிளான புரோக்கலி_1
கேரட்_1
சின்ன வெங்காயம்_இரண்டு அல்லது மூன்று
பச்சை மிளகாய்_ஒன்றிரண்டு
வெந்து பிழியப்பட்ட‌ துவரம் பருப்பு_ ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய்_ஒரு டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி இலை_கொஞ்சம்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
கடலைப் பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

சாம்பாருக்கு வேகவைத்த‌ துவரம் பருப்பில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கொஞ்சம் பிழிந்து வைத்துக்கொள்ளவும்.

கேரட்,புரோக்கலி இரண்டையும் நன்றாகக் கழுவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தையும் அவ்வாறே நறுக்கவும்.பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும்.காரம் விரும்பினால் பொடியாக்கலாம்.

வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கேரட்,புரோக்கலியைச் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி,லேஸாக உப்பு தூவி,சிறிது தண்ணீர் தெளித்து மூடி மிதமானத் தீயில் வேக வைக்கவும்.

புரோக்கலி சீக்கிரமே வெந்துவிடும்.கேரட்டும்கூட மெல்லிய துண்டுகளாக இருப்பதால் சீக்கிரமே வெந்துவிடும்.

இவை வெந்ததும் பிழிந்து வைத்துள்ள பருப்பை சேர்த்துக் கிளறிவிட்டு சூடேறியதும்,தேங்காய்ப்பூ,கொத்துமல்லி இலை தூவி மேலும் ஒரு கிளறுகிளறி இறக்கவும்.இப்போது எளிதாக செய்யக்கூடிய கேரட் & புரோக்கலி பொரியல் தயார்.

இது எல்லா சாதத்திற்கும் நன்றாக இருக்கும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , . 9 Comments »

9 பதில்கள் to “கேரட் & புரோக்கலி பொரியல் / Carrot & Broccoli poriyal”

 1. மகிஅருண் Says:

  கலர்ஃபுல் பொரியல்..இப்படி துவரம்பருப்பு சேர்த்து செய்ய எனக்கு ரொம்ப ஆசை, ஆனா பாருங்க, குக்கரில் வைக்கும் பருப்பு நல்லா குழைஞ்சு வெந்துரும். பாசிப்பருப்பு மட்டும் ஊறவைச்சு மைக்ரோவேவில் வேகவைச்சு சேர்ப்பேன். பதமா வெந்திருக்கும். து.பருப்பையும் அப்படி ட்ரை பண்ணிப்பார்க்கவேண்டியதுதான்! 🙂

  • chitrasundar5 Says:

   துவரம் பருப்பையும் பாத்திரத்தில்தான் (எவர்சில்வர் pan) வேகவைக்கிறேன்.வெந்து கொஞ்சம் ஆறியதும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று,அவ்வளவுதான்.கண்டிப்பாக சுவையில் வித்தியாசம் தெரியும்.

 2. ranjani135 Says:

  ‘துவரம் பருப்பை பிழிந்து’ என்பதை படித்தவுடன் ‘குழைந்திருக்குமே’ என்று தோன்றியது. எனக்காக மகி கேட்டுவிட்டார்.
  என் மாமியார் இதேபோல துவரம் பருப்பை இலை இலையாக (மாமியாரின் பாஷை!) வேக வைத்து, வெண்டைக்காயையும் சிறிது புளி ஊற்றி அதிகம் குழையாமல் வேகவைத்து அதில் துவரம் பருப்பைச் சேர்த்து ஒரு கறியமுது (பொரியலின் இன்னொரு பெயர்!) செய்வார்.
  இதுவரை அவர் செய்ததுபோல எனக்கு செய்ய வந்ததே இல்லை. நீங்கள் சொல்லியிருப்பது போல வெளியில் வேகவைத்து பார்க்க வேண்டும்.

  • chitrasundar5 Says:

   கறியமுது___பெயரைச் சொல்லும்போதே சூப்பரா இருக்கு.வெண்டைக்காய் வாங்கினால் செய்து பதிவு போடுகிறேன்.

   ஊரில் இருந்தவரைதான் குக்கருடன் போராட்டம்.ஒரு ஸ்பூன் அரிசியாக இருந்தாலும் குக்கரைத்தான் எடுப்பேன்.இப்போ ரசித்து,ருசித்து (உண்மையில் நேரமிருப்பதும் ஒரு காரணம்)சமைப்பதால் சமைக்கும் பாத்திரங்களையும் மாத்தியாச்சு.

   பருப்பு வெந்த குக்கரைத் திறந்தால் ஒரு வாசனை வருமே,அதிலிருந்து தப்பியாச்சு.வெளியில் வேக வைக்கும்போது நல்ல வாசனையுடன் வேகிறது.

 3. rajalakshmiparamasivam Says:

  சுதந்திரப் பொரியல் என்று பெயர் வைத்து விடலாம். .மூன்று கலரும் இருக்கிறதே.
  இது வரை ப்ரோக்கொலியில் இந்த மாதிரி செய்ததில்லை..நல்ல ஆரோக்கிய பதிவு.
  நன்றி இது போல் இன்னும் ஆரோக்கியப் பதிவுகளாக அசத்துங்கள்….

  • chitrasundar5 Says:

   புரோக்கலி&கேரட் சேர்த்து பொரியல் செய்வதாக மகி ஒரு தடவ சொன்னாங்க.அதை நினைத்துக்கொண்டேதான் இந்தப் பொரியல் செய்தேன்.அன்று அவங்களும் எதேச்சையாக‌ பதிவு போடுங்கன்னு சொன்னதும் சரின்னுட்டு அதையே போட்டுவிட்டேன்.நீங்க அதுக்கு ஒரு பேரும் வச்சிட்டீங்க.நல்லாருக்கு.

 4. MahiArun Says:

  I prepared this poriyal today Chitra Akka! Unexpectedly yesterday thuvaram paruppu was perfect, even after cooking in pressure cooker. I saved a bit and prepared this one for today’s lunch. Tasted delicious..I will post it in English soon!
  Thanks for the delicious and healthy stir fry! 🙂


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: