தேவையானவை:
தயிர்_ஒரு கப்
சின்ன வெங்காயம்_5 அல்லது பெரிய வெங்காயம்_பாதி
வெள்ளாரி பிஞ்சு_பாதி
கேரட்_பாதி
பச்சை மிளகாய்_1
இஞ்சி_சிறுதுண்டு
பெருங்காயம்_பெயருக்கு சிறிது
கறிவேப்பிலை_ஒன்றிரண்டு இலைகள்
கொத்துமல்லி தழை_கொஞ்சம்
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
செய்முறை:
தயிரில் சிறிது உப்பு சேர்த்து கட்டிகளில்லாமல் கடைந்துகொள்ளவும்.
அதனுடன் கொடுத்துள்ள எல்லாப் பொருள்களையும் விருப்பமான அளவில் நறுக்கி சேர்த்து கலந்துகொள்ளவும்.
துளியளவு எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கலக்கி பறிமாறவும்.
பிரியாணி,புலாவ்,கலவை சாதம் இவை எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.
இந்த வெயில் நாளுக்கு அப்படியேகூட சாப்பிடலாம்.
6:47 பிப இல் ஏப்ரல் 21, 2013
நானும் இதேபோல செய்வேன், ஆனா பெருங்காயம், தாளித்துக் கொட்டுவது ரெண்டும் மைனஸ்! 🙂 வெயிலுக்கேத்த குறிப்பு சித்ராக்கா!
11:31 முப இல் ஏப்ரல் 23, 2013
பெருங்காயம் கண்ணுக்குத் தெரியாம சேர்க்க வேண்டும்.இல்லாட்டி வாசனை தூக்கலாகிவிடும்.தாளிப்பும் அப்படித்தான் மகி.சில சமயங்களில் தாளிப்பு இருக்கும்,பல சமயங்களில் இருக்காது.
வருகைக்கு நன்றி மகி.
6:55 பிப இல் ஏப்ரல் 21, 2013
அடிக்கிற வெயிலுக்கு தினமும் தேவை…
நன்றி…
11:32 முப இல் ஏப்ரல் 23, 2013
எப்படியாவது வெயிலை ஓட்ட வேண்டுமே!வருகைக்கு நன்றிங்க.
12:39 முப இல் ஏப்ரல் 22, 2013
தயிர் பச்சடி பார்க்கும் போதே சாப்பிடத் தோன்றுகிறது.
அதுவும் சென்னை வெயிலுக்கு தினமுமே சாபிடலாம்.
3:31 முப இல் ஏப்ரல் 22, 2013
நம்ம ஊர்லே விருந்தினருக்கும், மற்ற எல்லா விசேஷ சமையல்களிலும், பச்சடிக்கு ஒ ரு முக்கிய ஸ்தானம் உண்டு.
துவையல்,பொடி வகைகள்,தற்போது புலவு வகைகள், இவைகளுக்கு ஸரியான உற்ற துணை. போட்டோவும் பச்சடியும், வா,வா என்று அழைக்கிறது.
11:40 முப இல் ஏப்ரல் 23, 2013
“போட்டோவும் பச்சடியும், வா,வா என்று அழைக்கிறத”____ வாங்க,வாங்க! எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம்!!!அந்தக்காலத்து செய்முறையாக இருந்தாலும் இன்னமும் எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.வருகைக்கு நன்றிமா.
11:36 முப இல் ஏப்ரல் 23, 2013
தயிர்தானே,தேவைக்கு எடுத்து சாப்பிடுங்க.இந்த வாரத்திலிருந்து எங்க ஊரிலும் சரியான வெயில்.மாலை வரவரத்தான் அதிகமாகத் தெரியும்.
வருகைக்கு நன்றிங்க.
6:16 முப இல் ஏப்ரல் 23, 2013
தயிர் என்ன இத்தனை கெட்டியாக இருக்கிறதே! கடைந்தது போலவே இல்லை. கலப்படம் இல்லாததோ?
வழக்கம் போல கேள்விகளாகக் கேட்டு விட்டேன்!
வெயில் காலத்துக்கு ஏற்ற ரெசிபி!
12:02 பிப இல் ஏப்ரல் 23, 2013
“தயிர் என்ன இத்தனை கெட்டியாக இருக்கிறதே! கடைந்தது போலவே இல்லை. கலப்படம் இல்லாததோ?”________இங்குள்ள அன்னப்பறவைகளில் இரண்டைப் பிடித்து நம்மூருக்கு அனுப்பிவிடுகிறேன்.அதன் பிறகு பாருங்க உங்க ஊர் தயிரும் போட்டிக்கு வந்துவிடும்!
முதலில் ஆசிரியருக்கு கேள்விகள் வந்தால்தானே மாணவருக்கு விளக்கமான பாடம் கிடைக்கும்.தத்துவம் தானா வந்து விழுது.
வருகைக்கு நன்றிங்க.