ப்ரெட் சாண்விச்சை பல வகைகளில் தயார் செய்யலாம்.
ப்ரெட்டின் இடையில் வைக்கப்போகும் பொருள்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்துகொள்ளலாம். சாதாரணமாக நான் செய்வதை இங்கே கொடுத்திருக்கிறேன்.நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.
தேவையானவை:
ப்ரெட் துண்டுகள் _ ஒரு நபருக்கு 2 துண்டுகள் வீதம்
வெங்காயம் _ (பெரிய வெங்காயம் இல்லை என்பதால் சின்ன வெங்காயம் சேர்த்திருக்கிறேன்)
தக்காளி
வெள்ளரி பிஞ்சு
விருப்பமான சீஸ்
விருப்பமான ரான்ச்/Ranch_கொஞ்சம்
லெட்யூஸ்/Lettuce_கொஞ்சம்
செய்முறை:
வெங்காயம்,தக்காளி,வெள்ளரிப் பிஞ்சு இவற்றைக் கழுவித் துடைத்துவிட்டு, விருப்பமான அளவில் மெல்லிய வில்லைகளாக்கவும்.
லெட்யூஸ் இலைகளையும் நீரில் அலசிவிட்டு,ஈரம்போகத் துடைத்துவிட்டு நறுக்கிக்கொள்ளவும்.
இரண்டு ப்ரெட் துண்டுகளை டோஸ்ட்/toast செய்து எடுத்துக்கொள்ளவும்.அல்லது அப்படியேகூட பயன்படுத்திக்கொள்ளலாம்.
கடையில் ப்ரெட் துண்டுகளின் அளவுக்கே ( Singles ) சீஸ் கிடைக்கிறது.அதில் ஒன்றை எடுத்து ஒரு ப்ரெட்டின்மேல் வைக்கவும்.சீஸ் விருப்பமில்லை எனில் விட்டுவிடலாம்.
படத்திலுள்ள சீஸ் சிறிய அளவிலானது.நான் அவற்றை மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கி வைத்திருக்கிறேன்.
லெட்யூஸை ப்ரெட்டின் மேல் வைக்கவும்.
அடுத்து தக்காளி ஸ்லைஸை வைக்கவும்.
அதேபோல் வெங்காய ஸ்லைஸையும் வைக்கவும்.
அடுத்து வெள்ளரி பிஞ்சு ஸ்லைஸை வைத்து,
இறுதியாக ரான்ச்சையும் சிறிது ஊற்றி,
ப்ரெட் துண்டுகளை ஒன்றன்மேல் ஒன்று வைத்து லேஸாக அழுத்தவும்.இப்போது சுவையான,சத்தான,ஃப்ரெஷ்ஷான வெஜ் சாண்ட்விச் சாப்பிடத் தயார்.
அப்படியே சாப்பிட்டால் உள்ளே உள்ளவை மேலேயும்,கீழேயும் வெளியில் வர வாய்ப்புள்ளது.எனவே ஒரு பேப்பர் டவலால் சுருட்டி வைத்துக்கொண்டு சாப்பிடலாம்.
11:30 பிப இல் ஏப்ரல் 29, 2013
எல்லா , என்னுடைய மருமகள்களும் இம்மாதிரிதான் செய்கிரார்கள்.
நீயும் அப்படியே செய்கிராய். இருக்கும்,ஸாமான்களுக்கு ஏற்ப சில ஸமயம் மாருதல்கள் இருக்கும்.பேப்பர் டவலில் சுற்றி அழகான ஸாமான்களை பேக் செய்வதுபோல இருக்கு. அழகாகவும் இருக்கிரது.
அன்புடன்
11:49 முப இல் ஏப்ரல் 30, 2013
ஆமாம் அம்மா,உள்ளே வைக்கும் சாமான்களை அவரவர் விருப்பத்திற்கு நிரப்பிக்கொள்ள வேண்டியதுதான்.அந்நேரத்திற்கு எது இருக்கிறதோ அதை வைத்து செய்துவிடலாம்.
ரெட்,தட்டு,பேப்பர் டவல் எல்லாமே ஏறக்குறைய ஒரே நிறத்தில் அமைந்து அழகாகிவிட்டது.உங்கள் பின்னூட்டமும் அதைவிட சூப்பரா இருக்கு. அன்புடன் சித்ரா.
1:14 முப இல் ஏப்ரல் 30, 2013
இவ்வளவு அழகாக உங்களால் தான் செய்ய முடியும்… நன்றி…
11:54 முப இல் ஏப்ரல் 30, 2013
அடிக்கிற வெயிலுக்கு ஏஸி போட்டதுபோல் உள்ளது உங்கள் பின்னூட்டம். வருகைக்கு நன்றிங்க.
9:38 முப இல் ஏப்ரல் 30, 2013
சாண்ட்விச் நீட்டா இருக்கு! 🙂 யாராவது இப்படி அழகா செய்து குடுத்தா சாப்பிட நல்லா இருக்கும். நானே எல்லாம் செய்யணும்னா கொஞ்சம் யோசனைதான்..ஹிஹ்ஹி! 😀
ஒரு காலத்தில் பனினி மேக்கர் வாங்கினோம், அப்ப அடிக்கடி இப்படியான சாண்ட்விச் தான்! பிக்கிள்ட் ஹாலபினோ, சிப்போட்லே ஸ்பைஸி ட்ரெஸ்ஸிங், பெப்பர் ஜாக் சீஸ் என்று என்று பல பொருட்கள் வாங்கி ஸ்டாக் வைச்சுகிட்டு அடிக்கடி சாண்ட்விச் செய்தேன் சித்ராக்கா! அப்புறமும் பலவருஷம் இந்திய உணவுக்குப் பழகிய நாக்கு நம்மூர் சாப்பாட்டுக்கே இழுத்துருச்சு! 😉 🙂
இப்ப எப்பவாவது ப்ரெட் வாங்குறோம். மோஸ்ட்லி வித் ஜாம் அல்லது ஃப்ரென்ச் டோஸ்ட்!
1:39 பிப இல் ஏப்ரல் 30, 2013
“நானே எல்லாம் செய்யணும்னா”____சமைக்கணும்னா யோசிக்கலாம். இதுக்குமா!!பனினி மேக்கர் வாங்க ஆசைதான் மகி,எவ்வளவுதான் வாங்கி அடைப்பது என விட்டாச்சு.
எனக்கு ரொம்ப நாள் ஆச்சு,இந்த ஊர் சாப்பாடு பிடித்து சாப்பிட.இன்னமும் எங்க வீட்ல இவருக்கு நம்ம ஊர்(முக்கியமா தமிழ்நாடு,எனக்கும் வேறெதுவும் தெரியாது) சாப்பாடு தவிர வேறெதுவும் பிடிக்காது.ஊரில் இருந்தவரை வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லைனா ப்ரெட் வாங்கிட்டு வருவாங்களேன்னு ஒரு சின்ன சந்தோஷம் வரும்.இப்போ இது தெரிஞ்சிதுன்னா அவ்வளவுதான்.
காரத்துக்கும்,அந்தப் புளிப்புக்கும் பயந்து அலபினோ,பிக்கிள் இல்லாமல்தான் சாண்விச் வாங்குவோம்.
4:05 முப இல் ஜூலை 3, 2013
Ranch endral enna mam
10:46 முப இல் ஜூலை 3, 2013
pushpavani,
‘Ranch dressing’ என்பது salad ல் சேர்க்கப்படும் லேஸான புளிப்புச் சுவையுள்ள தயிர் போன்ற ஒன்று. சென்னை கடைகளில் கிடைக்க சான்ஸ் இருக்கு, கேட்டுப் பாருங்க.
6:11 முப இல் ஒக்ரோபர் 9, 2015
மிக எளிமையா இருக்கு ஞாயிற்றுக்கிழமை செய்து பாக்கனும்
8:39 முப இல் ஒக்ரோபர் 9, 2015
நாராயண்,
சீஸ் மட்டும் கொஞ்சம் க்ரில் பண்ணி சேர்த்துக்கோங்க. இல்லை அப்படியே சேர்த்தாலும் பரவாயில்லை.