புரிடோ / Burrito

burrito

தேவையானவை:

ஃப்ளோர் டார்டியாஸ் / Flour tortillas_ஒரு நபருக்கு ஒன்று வீதம்.
சாதம்_வெள்ளை (அ)சிவப்பு (அ) கருப்பு
வெங்காயம்
தக்காளி
பச்சை மிளகாய்_இதற்கு பதிலாக இனிப்பு மிளகாய்கள் சேர்த்துள்ளேன்.
அவகாடோ
ஸ்வீட் கார்ன்/Sweet corn_இல்லை என்பதால் சேர்க்கவில்லை
சல்ஸா
சோர் க்ரீம்/Sour cream
ப்ளாக் பீன்ஸ்/Black beans_இல்லை என்பதால் பெரும்பயறு சேர்த்துள்ளேன்.
துருவிய சீஸ்
லெட்யூஸ் இலைகள்
கொத்துமல்லி தழை

burritoburritos

தேவையானப் பொருள்களையும்,அதிகமான படங்களையும் பார்த்து மலைக்க வேண்டாம்.செய்வதற்கு ரொம்பவே சுலபம்.

தேவையானப் பொருள்களில் ஒன்றிரண்டு கூடினாலும் குறைந்தாலும் பிரச்சினையில்லை.ஆனால் டார்டியாவை மட்டும் செக் பண்ணிடுங்க.

அதேபோல் அளவெல்லாம் தேவையில்லை.விருப்பமானதை கூட்டியும்,குறைத்தும் சேர்க்கலாம்.

செய்முறை:

பயறை ஊற வைத்து,வேக விட்டு ஸ்பூன் அல்லது விரலால் ஒன்றும் பாதியுமாக மசித்துக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி,மிளகாய்,லெட்யூஸ்,கொத்துமல்லி இவற்றை எல்லாம் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

மற்ற பொருள்களையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

burritosburrito

டார்டியாவை சூடான தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் திருப்பிவிட்டு, சூடாகியதும் எடுத்து ஒரு அகலமான தட்டில் வைக்கவும்.

அதன் உள்ளே வைத்து நிரப்பப்போகும் பொருள்களை எல்லாம் நீளவாக்கில்தான் வைக்கப் போகிறோம்.அப்போதுதான் மடித்து,சுருட்டுவதற்கு வசதியாக இருக்கும்.

burrito

முதலில் ஒன்றிரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சாதத்தை நீளவாக்கில் தூவினாற்போல் பரப்பி விடவும்.

burrito

அடுத்து லெட்யூஸ் இலைகள்,கொத்துமல்லி இவற்றை சேர்க்கவும்.

burrito
அதன்மேல் பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்களை சேர்க்கவும்.

burrito
அடுத்து வெந்த பயறை சேர்க்கவும்.

burrito

அதன்மேல் சல்ஸா,சோர் க்ரீம்,துருவிய சீஸ் இவற்றை ஒன்றன்மேல் ஒன்றாக சேர்க்கவும்.

burrito

இறுதியாக படத்தில் காட்டியுள்ளவாறு இரண்டு பக்கமும் மடித்துப் பிடித்துக்கொண்டு, கீழ் பகுதியை (1 ஐ) மேல் பக்கமாக (2 ஐ நோக்கி) மடித்துவிட்டு இறுக்கி சுருட்டவும்.

இரண்டு பக்கமும் மடித்ததை ஃபோட்டோ எடுப்பதற்காக டூத்பிக் சொருகியுள்ளேன்.படம் எடுத்ததும் குச்சிகளை எடுத்துவிடுவேன்.

burrito

இப்போது சுவையான வெஜ் புரிடோ சாப்பிடத் தயார்.

ஏற்கனவே சொன்னதுபோலவேதான்,அப்படியே சாப்பிட்டால் கொஞ்சம் அசௌகரியமாக இருக்கும் என்பதால் ஒரு பேப்பர் டவலில் சுற்றிக் கொடுத்தால் கவலைப் படாமல் சாப்பிடலாம்.

வெளியில் எடுத்துச் செல்வதாக இருந்தால் அலுமினம் ஃபாயிலில் சுருட்டி எடுத்துச்செல்ல‌லாம்.

14 பதில்கள் to “புரிடோ / Burrito”

 1. திண்டுக்கல் தனபாலன் Says:

  புதிதாக இருக்கிறது… செய்து பார்க்க வேண்டும்…

  செய்முறை குறிப்பு + விளக்கங்களுக்கு நன்றி அம்மா…

 2. MahiArun Says:

  I love chipotle burritos! Again lazy to make these at home. Hehehe! 😉

  Do send some burritos here Chitra Akka!

  • chitrasundar5 Says:

   வீட்ல நிறைய டார்டியாஸ் இருக்கு.எவ்வளவு வேணும்னாலும் புரிடோஸ் செய்து அனுப்புகிறேன்.ஹோம் மே(ய்)ட் இல்லையா!அதனால‌ விலைதான் கூடுதலா இருக்கும்.ஆர்டர் பண்ணியதும் டோர் டெலிவரிதான்.

   எனக்குமே சிப்பாட்லே புரிடோஸ்,சாலட் பௌல் எல்லாமே விருப்பம்.சீக்ரெட் இங்ரடியன்ஸ் வச்சிருப்பாங்க.இந்தக் கடையிலும் எந்நேரமும் கூட்டம்தான்.வீக்கென்டுல ஒரு நடை போய்ட்டு வந்திருங்க.நன்றி மகி.

 3. rajalakshmiparamasivam Says:

  வாவ் வெஜ் புரிடோ !
  பார்க்க சுவையாக இருக்கிறது. .செய்து பார்ப்போம்.

  • chitrasundar5 Says:

   ராஜலக்ஷ்மி,

   “வாவ் வெஜ் புரிடோ!”_____தலைப்பை இப்படியும் வச்சிருக்கலாமோன்னு தோணுது.

   பொருள்கள் கிடைத்தால் செய்வது சுலபம்தான்,செஞ்சு பாருங்க.

   வருகைக்கு நன்றிங்க.

 4. chollukireen Says:

  ஒன்றன்மேல் ஒன்றாக. அடுத்தடுத்து எல்லாவற்றையும் போட்டுச் சுருட்டி,ருசியான, அழகான புரிடோஸ் ரெடி. சாப்பிடவும் எல்லோரும் ரெடி. படங்களெல்லாம் ரொம்பரொம்ப அருமை.கிடைத்தால் கேக்கணுமா? அன்புடன்

  • chitrasundar5 Says:

   காமாக்ஷிமா,

   வாங்க,வாங்க!வந்த பிறகு அவசராவசரமாக செய்ய வேண்டியதில்லை. முன்பே எல்லாமும் செய்து அடுக்கியாயிற்று.ஜாலியாக கதை பேசிக்கொண்டே சாப்பிடலாம்,வாங்கமா.அன்புடன் சித்ரா.

 5. திண்டுக்கல் தனபாலன் Says:

  வணக்கம்…

  உங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்… நன்றி…

  • chitrasundar5 Says:

   திண்டுக்கல் தனபாலன்,

   வலைச்சரத்தில் நான் அறிமுகப் படுத்தப்பட்டதை சிரமம் பாராது விரைந்து வந்து தெரிவித்தமைக்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

 6. Asiya Omar Says:

  http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
  வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.பகிர்வுக்கு நன்றி.

  • chitrasundar5 Says:

   சகோதரி ஆஸியா ஓமர்,

   வாங்க,வாங்க! உங்களின் முதல் வருகைக்கு நன்றிங்க. என்னுடைய வலைப்பக்க‌த்தின் ஒரு பதிவை தெரிவு செய்து அதை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றிங்க.இதோ விரைந்து சென்று பார்க்கிறேன்.மீண்டும் நன்றி!

 7. ranjani135 Says:

  வலைச்சர அறிமுகத்திற்கு பாராட்டுக்கள்!


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: