இன்னும் பட்டர்,சர்க்கரை சேர்க்க விரும்பினால் நீண்ட புள்ளிகளுக்கு அப்பாலுள்ள அளவின்படி சேர்க்கலாம்.
தேவையானவை:
மைதா _ 2 கப்
பேகிங் சோடா / Baking soda _ 1/2 டீஸ்பூன்
உப்பு _ 1/4 டீஸ்பூன்
பட்டர் / Unsalted butter _ 1/2 கப் …… ………………………………………..( 3/4 கப்)
ப்ரௌன் சுகர் / Brown sugar _ 1/2 கப்
சர்க்கரை_1/4 கப்……………………………………………………………………. (1/2 கப்)
பீனட் பட்டர் / Crunchy Peanut butter _ 1/2 கப் ……………………………(3/4 கப்)
முட்டை_1
வென்னிலா எக்ஸ்ராக்ட் / Pure vanilla extract _ ஒரு டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மைதா,பேகிங் சோடா,உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து ஒன்றுக்கு இரண்டு தடவை சலித்துக்கொள்ளவும். அப்போதுதான் பேகிங்சோடா மாவுடன் நன்றாகக் கலந்துகொள்ளும்.
ஒரு பெரிய பௌளில் பட்டரை எடுத்துக்கொண்டு விஸ்க்கால் மென்மையாகும்வரை கலக்கவும்.
அடுத்து இரண்டு விதமான சர்க்கரையையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
இவை நன்றாகக் கலந்ததும் பீனட் பட்டரை சேர்த்து கலக்கவும்.
பிறகு முட்டை,வென்னிலா எக்ஸ்ராக்ட் சேர்த்து நன்கு கலக்கவும்.
கடைசியாக மைதா கலவையை சேர்த்து நன்றாகக் கலந்து மூடி ஒரு 1/2 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஓவனை 350 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.
ஒரு baking sheet ல் parchment paperஐ போட்டு மாவில் இருந்து சிறுசிறு உருண்டை அளவிற்கு எடுத்து மென்மையாக உருட்டி படத்தில் உள்ளதுபோல் போதுமான இடைவெளி விட்டு அடுக்கவும்.
ஒரு ஃபோர்க் ஸ்பூனில் சர்க்கரையைத் தொட்டு ஒவ்வொரு உருண்டையின் மீதும் வைத்து லேஸாக அழுத்திவிடவும்.
இதனை முற்சூடு செய்யப்பட்ட ஓவனில் 10 லிருந்து 15 நிமிடங்களுக்கு அல்லது குக்கியின் ஓரங்கள் லேஸாக சிவந்து வரும்வரை பேக் செய்து எடுத்து ஆறவிடவும்.
இப்போது சுவையான,மொறுமொறுப்பான,இன்னும் என்னல்லாம் பில்டப் கொடுக்கலாம்!!,ம்ம்ம்…கரகரப்பான,க்ரன்சியான பீனட்பட்டர் குக்கிகள் தயார்.
8:35 பிப இல் மே 14, 2013
இதெல்லாம் வீட்டில் செய்வார்களா தெரியவில்லை… இருந்தாலும் நன்றி…
8:48 பிப இல் மே 14, 2013
ஒன்றும் பெரிய வேலையெல்லாம் இல்லை.Oven இருந்தால் செய்துவிடலாம்.வீட்டில் செய்து பார்க்கச் சொல்லுங்க.
2:25 முப இல் மே 15, 2013
செய்து பார்த்தால் போகிரது.ருசியாகத்தானிருக்கும். பார்த்தாலே தெரிகிரதே!
3:39 பிப இல் மே 15, 2013
காமாக்ஷிமா,
பீனட் பட்டர் வாசனை பிடிக்கிறவர்களுக்கு கண்டிப்பாக இந்த குக்கியும் பிடிக்கும்.பாட்டிக்கு பேத்திகள் கொஞ்சம் உதவி செய்தால் ஒருநாள் மாலை ஸ்நாக்ஸ் ஆகிவிடும்.செய்து பாருங்கம்மா.அன்புடன் சித்ரா.
8:56 முப இல் மே 15, 2013
செய்து பார்த்து விடுகிறேன்.
அதற்குப் பின் மீண்டும் ஒரு பின்னூட்டம் எழுதுகிறேன்.
செய்ய டைம் கிடைக்க வேண்டுமே!
3:42 பிப இல் மே 15, 2013
ராஜலக்ஷ்மி,
காத்திட்டிருப்பேன்,செய்து முடித்து பின்னூட்டத்துடன் (குக்கியுடனும்) வாங்க.
12:58 பிப இல் மே 15, 2013
எக்லஸ் குக்கீஸா? பார்க்கவே க்ரிஸ்ப் & க்ரன்ச்சியா இருக்கு சித்ராக்கா! அழகா செய்திருக்கீங்க!
பீனட் பட்டர் ஏகத்துக்கும் இருக்கு வீட்டில்! ப்ரவுன் ஷுகர்தான் இல்லே! 🙂 ஒரு முறை வாங்கினேன், ஆனால் அது “ஏதோ” ஒரு புளிச்சவாடை அடித்தது மாதிரி இருந்தது, அப்படியே தூக்கிப் போட்டுவிட்டேன். எல்லா ப்ரவுன் சர்க்கரையும் அப்படிதான் இருக்குமா அல்லது நான் வாங்கிய ஒரு பேக்கட் மட்டும் அப்படி இருந்ததோ என்ற சந்தேகம் மட்டும் இன்னும் இருக்கு. ஹிஹி… 😀
3:56 பிப இல் மே 15, 2013
முட்டை இருக்கே.பின்னூட்டத்தைப் பார்த்ததும் எழுத மறந்திட்டேனோன்னு நெனச்சி ஒரு தடவ செக் பண்ணினேன்.
குக்கீஸ் எல்லாம் நல்ல வாசனையோட சூப்பரா இருக்கு மகி.ஏகத்துக்கும் பீனட் பட்டர் இருக்கும்போது ‘வெயிட்’ பிரச்சினை இல்லைனா நிறைய செய்து சாப்பிடுங்க.
ப்ரௌன் ஷுகர்ல புளிப்பு வாசனை எதுவும் வராதே.நாளானதா இருக்குமோ!இந்த ஊர் கடையில வாங்கிப் பாருங்க.
1:17 பிப இல் மே 20, 2013
//வெயிட்’ பிரச்சினை இல்லைனா நிறைய செய்து சாப்பிடுங்க.// போட்டீங்களே ஒரு போடு! 🙂 😉 வெயிட் ப்ராப்ளம் இல்லை, ஆனால் எனக்கு பீனட் பட்டர் பிடிக்காதே…வேர்க்கடலையை அவித்து, வறுத்து சாப்பிடச் சொன்னா சரி, இந்த பீனட் பட்டர் ஏனோ பிடிப்பதே இல்லை. என்னவர் பாட்டில் பாட்டிலா வாங்கி வந்து வீட்டில் அடுக்கிவைச்சிருக்கார். அவருக்கு குக்கீஸ் பிடிக்கவும் பிடிக்காது. ஹூம்!!
ப்ரௌன் ஷூகர்…ம்ம்ம், வாங்கப் பார்க்கிறேன் சித்ராக்கா. விளக்கத்துக்கு நன்றி! நாந்தான் முட்டைய கவனிக்காம கமெண்ட்டிருக்கேன், டேக் இட் ஈஸி! 😉
1:05 பிப இல் மே 21, 2013
பீனட் பட்டரை ரொம்பவே பிடிக்கும்.நான்தான் பயந்துபயந்து (பயத்தினால் மெலிஞ்சிடுவாங்கன்னு கேள்விப்பட்டு) சாப்பிடுவது.
“என்னவர் பாட்டில் பாட்டிலா வாங்கி வந்து வீட்டில் அடுக்கி வைச்சிருக்கார்”____இங்கு எல்லாமே தலைகீழ்.இவை எதையும் தொடமாட்டார்.நானும் மகளும் மட்டுமே ஒருகை பார்ப்பது.
‘டேக் இட் ஈஸி!’யைப் பார்த்தப்புறம்தான் சீரியஸே வந்திருக்கிறது.