ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் நிறைய வெரைட்டியில் பீன்ஸ் வருகிறது.அதில் இந்த Romano beans ம் ஒன்று.(ரோமன் பீன்ஸ் அல்லது ரொமானோ பீன்ஸ் ??).கொஞ்சம் தட்டையாக அவரைக்காய் மாதிரியும்,பசுமையாக பீன்ஸ் மாதிரியும் தெரிகிறது.
சுவை எப்படி இருக்கும் எனத் தெரியாமல் வாங்காமலேயே இருந்தேன்.சென்ற வாரம் துணிந்து (என்னா தைரியம்!!) வாங்கிவிட்டேன். இளம் பிஞ்சாக,ஃப்ரெஷ்ஷாக இருந்ததால் வெந்ததும் சீக்கிரம்,சுவையும் அபாரம்.
தேவையானவை:
பீன்ஸ நறுக்கியது_ஒரு கிண்ணம்
சின்ன வெங்காயம்_மூன்று
மஞ்சள்தூள்_சிறிது
வேகவைத்து பிழியப்பட்ட துவரம்பருப்பு_1/2 கைப்பிடி
கொத்துமல்லி தழை_ஒரு கொத்து
அரைக்க:
தேங்காய் பத்தை_3
காய்ந்தமிளகாய்_1 காரத்திற்கேற்ப
சீரகம்_கொஞ்சம்
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
கடலைப் பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
சாம்பாருக்கு வேக வைத்த துவரம்பருப்பில் ஒரு அரை கைப்பிடி அளவுக்கு பிழிந்து வைத்துக்கொள்ளவும்.
பீன்ஸை நன்றாகக் கழுவிவிட்டு விருப்பமான வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
தேங்காய் பத்தையுடன் சீரகம்,காய்ந்தமிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.
ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து பீன்ஸ் சேர்த்து வதக்கி சிறிது மஞ்சள்தூள்,உப்பு,காய் வேக சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
காய் வெந்த பிறகு துவரம் பருப்பு,அரைத்த தேங்காய் கலவை இரண்டையும் சேர்த்து கிண்டிவிடவும்.
புதிதாக சேர்த்தவை எல்லாம் சூடாகி,பீன்ஸுடன் நன்றாகக் கலந்ததும் கொத்துமல்லி தூவி இறக்கவும்.
இது எல்லா சாதத்துக்கும் பொருத்தமாக இருக்கும்.
10:02 முப இல் மே 24, 2013
வாவ்வ்வ்வ்…. சூப்பர் பீன்ஸ் பொரியல் சகோதரி!… வாசிக்கும்போதே வாயூறுதே… காஞ்சமிளகாய் இப்படி தேங்காபூ சீரக சகிதம் அரைச்சு போடுறது இப்பதான் உங்க குறிப்பில் பார்க்கின்றேன். ம்.நல்ல்ல கார மிளகாய் போட்டு அரைச்சு சேர்த்தா…. ஸ்ஸ்ஸ்… கிண்ணென்றிருக்கும்… செஞ்சு பார்க்கிறேன். நல்ல குறிப்பு சகோதரி… பகிர்விற்கு மிக்க நன்றி!
ஆங்… அங்கே கேட்டதிற்கு இங்கே பதில் சொல்றேன்….;).
காமாக்ஷி அம்மாகிட்ட என்னைப் பார்க்குறீங்களோ… ஓ.. சரி சரி…:). அப்போ அறிமுகம் பெரிசா தேவையில்லை. ஆனா நான் தான் இவ்வளவு நாளா கரட் கட்டின குதிரை மாதிரி இருந்திருக்கேனாக்கும்….:))).
சரி.. என் சொந்த நாடு இலங்கை. ஈழத்தமிழிச்சி!!!
இப்போ இருக்கும் நாடு 28 வருஷமா ஜேர்மனி… குடும்பத்தோடு. கணவர் + மகன்!
போதும்ன்னு நினைக்கிறேன் சரியா… :).
11:41 முப இல் மே 24, 2013
காரம் என்றால் பிடிக்கும்போல் தெரிகிறது.மாறுதலுக்கு ஒருதடவ இப்படியும் செய்து பார்க்கலாமே.
ஓ,நீங்கள் இலங்கைக் காரரா?அதனால்தான் உங்கள் நடையில் தமிழ் இவ்வளவு அழகாக இருக்கிறது!ஐபி அட்ரஸை வைத்து ஜெர்மன் எனத் தெரிந்துகொண்டேன். தகவலுக்கு நன்றிங்க.
இராஜேஸ்வரி அவர்களின் திருவரங்கம் (திருக்கோவிலூர் பக்கம்) கோவில் பதிவில் அங்கு நீங்கள் போனதாக பின்னூட்டத்தில் பார்த்தேன்.ஒருவேளை அந்த ஊர் பக்கமோ (எனக்கும் கொஞ்சம் பக்கமாக இருக்குமே) என நினைத்துக் கேட்டேன்.அவ்வளவுதாங்க.நன்றிங்க.
6:05 முப இல் மே 25, 2013
ஓ இது ஜெனிவாவில் நிறைய கிடைக்கும். நான் நீள அவரைக்காய்னே பேர் வைத்திருந்தேன். அவரைக்காயில் பண்ணும் எல்லா தினுஸும் செய்யலாம். ப்ரெஞ்ச் பெயர் ஏதோ போட்டிருக்கும். மனதில் அதை பதியவிடவே இல்லை. இப்போ சித்ராவின் அடுப்படிக்கு வந்து விட்டது. என்னென்ன செய்யப் போகிராளோ?
நிரைய அவதாரங்கள் எடுக்கும் வாய்ப்பு வந்து விட்டது. ஸரிதானே?
அன்புடன்
1:14 பிப இல் மே 27, 2013
“அவரைக்காயில் பண்ணும் எல்லா தினுஸும் செய்யலாம்”_____தகவலுக்கு நன்றிமா.நான்தான் எப்படி இருக்குமோ என இவ்வளவு நாளும் வாங்காமல் இருந்தேன்.நிறைய அவதாரங்கள் எடுப்பதற்குள் காணாமல்(இந்த வாரம்) போய்விட்டது.அடுத்த வாரம் வருகிறதா என பார்க்கிறேன்.
நல்லா சொன்னீங்கமா,சில காய்களின் பெயர் எனக்கும் பதிவதில்லை. மார்க்கெட்டிலிருந்து ஒருசில எழுத்துக்களுடன் வீட்டுக்கு வந்து கூகுளில் பார்த்து நினைவு வைத்துக்கொள்வேன்.ரஸிக்கும்படியான பின்னூட்டம். நன்றிமா,அன்புடன் சித்ரா.
7:30 முப இல் மே 25, 2013
காயைப் பார்க்கவே பச்சைப் பசேல் என்று அழகா இருக்கு. ருசியும் சூப்பரா இருக்கு என்கிறீங்க..அப்புறமென்ன? அந்த தட்டை நான் எடுத்துக்கறேன். 😉 🙂
பீன்ஸூடன் தேங்காய்-சீரகம்-பூண்டு அரைச்சுப் போட்டு ஒரு மசாலாப் பொரியல் செய்வேன், அது போல உங்க ரெசிப்பியும் செய்து பார்த்துட வேண்டியதுதான். ரொமானோ பீன்ஸெல்லாம் நோ சான்ஸு..நார்மல் பீன்ஸுலதான் செய்யணும்.
1:23 பிப இல் மே 27, 2013
உங்களுக்கில்லாததா,எடுத்துக்கோங்க!”ரொமானோ பீன்ஸெல்லாம் நோ சான்ஸு..நார்மல் பீன்ஸுலதான் செய்யணும்”___இங்கும் அதேதான்.இந்த வாரம் வாங்கலாம்னு போனால் காணோம்.சாதா பீன்ஸைதான் வாங்கி வந்தேன்.
பூண்டு கடைசியில் சேர்க்கும்போது பச்சை வாசனை வராதா!இதுமாதிரியும் ஒரு தடவ செய்து பார்க்கணும்.
10:38 பிப இல் மே 29, 2013
//பூண்டு கடைசியில் சேர்க்கும்போது பச்சை வாசனை வராதா!// பூண்டை தட்டிப் போட்டு ரெண்டொரு நிமிஷம் கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கினா காய் சூட்டிலேயே பூண்டும் வெந்து நல்ல வாசனையா இருக்கும் சித்ராக்கா! தேங்காய்+சீரகம்+பூண்டு சேர்த்து பல்ஸ்-ல போட்டு சேர்க்கலாம். அல்லது தே.துருவல், சீரகப் பொடி, பூண்டை தட்டி சேர்கலாம். டிரை பண்ணிப் பாருங்க. எல்லாம் ப்ளாக் உலகில் கத்துகிட்டதுதான்! 🙂
10:58 முப இல் மே 31, 2013
தே.துருவல்,சீரகத்துடன் பூண்டு தட்டிப்போட்டு செய்து பார்க்கிறேன்.இவ்வளவு தைரியம் கொடுத்த பிறகு செய்திட வேண்டியதுதான்.நன்றி மகி.
9:54 முப இல் மே 28, 2013
சித்ரா ,
உங்கள் romantic பீன்ஸ் ….. சாரி…சாரி…. ரொமானோ பீன்ஸ் கறி பார்க்க சாப்பிடத் தோன்றுகிறது.
நன்றாகவே வாசனை வருகிறது. அருமையான சமையல் குறிப்பு.
10:52 முப இல் மே 31, 2013
நீங்க சூட்டியுள்ள பெயரும் சூப்பரா இருக்கு.புது காய் என்பதால் வாசனை அங்குவரை வருதுனு நினைக்கிறேன்.வருகைக்கு நன்றிங்க.
6:14 பிப இல் மே 29, 2013
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_30.html) சென்று பார்க்கவும்… நன்றி…
9:53 பிப இல் மே 29, 2013
விவரத்திற்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.இதனை சீனா ஐயா மூலமாகவும் அறிந்தேன்.மீண்டும் நன்றிங்க.
10:03 முப இல் ஜூன் 5, 2013
சித்ராக்கா, இங்கே பாருங்கோ… http://mahiarunskitchen.blogspot.com/2013/06/beans-stir-fry-sarana-bavan-style-beans.html
🙂
6:16 பிப இல் ஜூன் 6, 2013
இதோ போய் பார்க்கிறேன் மகி!
6:57 பிப இல் செப்ரெம்பர் 4, 2013
நானும் இந்த பீன்ஸை கடந்த வார உழவர் சந்தையில் வாங்கினேன். ஒரு சில காய்களில் பிங்க் கலரில் patches-ம் இருந்தது. காயைப் பார்க்க முற்றலாக இருக்கே என நினைச்சுகிட்டே வாங்கினேன், ஆனா இளசாகத்தான் இருந்தது. சமைக்கையில் கொஞ்சம் கோக்கு மாக்கு ஆகி, காயை குழைய வேகவைச்சுட்டேன்! 😉 ஹிஹ்ஹிஹி!!
சீக்கிரம் ப்ளாகில் ரெசிப்பி போடறேன் பாருங்க. 🙂
10:26 பிப இல் செப்ரெம்பர் 4, 2013
இங்கும் வருது.இப்போல்லாம் ஒரு வாரம் இந்த பீன்ஸ் அடுத்த வாரம் அந்த பீன்ஸ்னு வாங்கறேன்.சாம்பாருக்குக்கூட நல்லாருக்கு.க்ரீன் பீன்ஸைவிட இது சாஃப்டாதான் இருக்கு.உங்க ரெஸிபிய எதிர்பார்த்திட்டிருக்கேன்.
எனக்கு காய் குழையாம இருக்கணும்,இவர் அப்படியே நேர் எதிர்.ஆனாலும் எப்படித்தான் முயற்சித்தாலும் சமைப்பது நான் என்பதால் என்னுடைய விருப்பமே நிறைவேறிவிடுகிறது.