வெள்ளரிப் பிஞ்சு & மாங்காய்

இது சமையலில் கேஜி_ல் இன்னும் கிராஜுவேஷன் வாங்காதவங்களுக்கான பதிவு.(  ஊரெங்கும் கிராஜுவேஷன் ஃபீவர் இருந்ததால் வந்த பாதிப்பு ).

cucumber

 

வெயில் நேரத்திற்கு வெள்ளரிப் பிஞ்சு சாப்பிட இதமாக இருக்கும்.எனக்கு அப்படியே சாப்பிடப் பிடிக்கும்.வீட்டில் உள்ளவர்களுக்கு தோல் நீக்கி மிளகாய்த்தூள் தடவிக் கொடுத்தால்தான் இறங்கும்.

cucumbercucumber

ஒன்றிரண்டு டீஸ்பூன்கள் தனி மிளகாய்த் தூளுடன் சிறிது உப்புத்தூள் சேர்த்து கலந்துகொள்ளவும்.நபர் ஒருவருக்கு ஒரு வெள்ளரி பிஞ்சு போதும்.அதன் தோலை சீவிவிட்டு,கத்தியால் நீளவாக்கில் விருப்பமான அளவில் கீறிக்கொண்டு, துண்டுகளின்மேல் மிளகாய்த்தூளை தூவிவிட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.

mangomango

இதைப் போலவேதான் மாங்காயும்.இதில் மாங்கொட்டை இருப்பதால் சுற்றிலும் கீறிவிட்டு மிளகாய்த்தூள் தூவி சாப்பிட வேண்டியதுதான்.

ஊரில் எங்கள் வீட்டில் மாங்காயை நறுக்கியெல்லாம் சாப்பிட்டதேயில்லை. நறுக்கினால் புளிப்பு அதிகம் தெரியும் என்று முழு மாங்காயை அப்படியே உடைத்துதான் கொடுப்பார்கள்.அது ஒரு தனி சுவைதான்.

18 பதில்கள் to “வெள்ளரிப் பிஞ்சு & மாங்காய்”

 1. rajalakshmi Says:

  நாவில் நீர் ஊரும் பதிவு.பார்க்க பார்க்க சாப்பிடத் தோன்றுகிறது.நன்றி சித்ரா.

  • chitrasundar5 Says:

   பகல் நேரத்தில் நீங்களும்,சாரும் அப்படியே வெளியில் காலாற நடந்து போய், வரும்போது வழியிலிருக்கும் ஒரு கடையில் பழங்கள் ஏதாவது வாங்கிக்கொண்டு, இதையும் அப்படியே வாங்கிட்டு வந்திருங்க.நமக்கும் பொழுது போகும், பெண்ணுக்கும் உதவிய மாதிரி இருக்கும். வருகைக்கு நன்றிங்க.

 2. ranjani135 Says:

  ‘மாங்காயை அப்படியே உடைத்துதான் கொடுப்பார்கள் – புரியவில்லையே?

  • chitrasundar5 Says:

   எங்க வீட்ல பெரியபெரிய தேக்கு மர கதவுகள் இருக்கும்.அந்தக் கதவிடுக்கில் மாங்காவை வைத்து ஒரு அழுத்து,அவ்வளவுதான்,சதைப் பகுதி தனியாகவும்,கொட்டை தனியாகவும் வந்துவிடும். அந்த சதைப் பகுதியையும் கையாளேயே பிச்சுதான் எல்லோரும் (அடிச்சு,பிடிச்சு, சண்டை, போட்டு) பங்கு எடுத்துக் கொள்வோம்.

   இல்லாட்டி மாங்காவை தரையில் நேரா நிக்கவச்சி பிடிச்சிகிட்டு (கை பத்திரம்) வெயிட்போட கிலோகல் இருக்குமே,அதால ஓங்கி ஒன்றிரண்டு குத்துகள்.முன்பு சொன்ன மாதிரியே தனித்தனியாக வந்துவிடும்.பழைய நினைவுகளைக் கிளறி விட்டதுக்கு நன்றிங்க.

   • மகிஅருண் Says:

    ஆஹா! ரஞ்சனி மேடம் எனக்கு முன்னால வந்து நான் கேக்க இருந்த கேள்வியைக் கேட்டுப்புட்டாங்க. 🙂 இப்படி மாங்கா ஒடச்சு சாப்பிடறது இப்பத்தான் கேள்விப்படறேன்! 🙂

   • chitrasundar5 Says:

    மாம்பழத்தை மட்டுமே அரிவாள்மனையில் அரிந்து சாப்பிடுவோம். எந்தக் காயாக இருந்தாலும் உடைத்துதான் சாப்பிடுவோம்.அரிந்து சாப்பிடும் அளவுக்கு பொறுமை இல்லை,அதாவது வீட்டில் ஏகக்கூட்டம்.டக்டக்னு உடைச்சிட வேண்டியதுதான்.அது நல்லாவும் இருக்கும்.

    எங்கம்மா ஏதாவது திங்கற பொருள் பங்கு பிரிக்கறாங்கன்னா எனக்கு, உனக்குன்னுட்டு அவங்கள சுத்தி ஒரு கூட்டம் இருக்கும்! இப்போது எல்லாம் நினைவில் மட்டுமே.

   • ranjani135 Says:

    அட! கதவை இப்படியும் பயன்படுத்தலாமா?
    இதையெல்லாம் வைத்து ஒரு பதிவு இன்னொரு தளத்தில் போடுங்க!

   • chitrasundar5 Says:

    இப்போது செய்யும் கதவுகளைப் பயன்படுத்தினால் மாங்காவுக்குப் பதிலாக உடையப்போவது கதவாகத்தான் இருக்கும்.கதவைவிட படிக்கட்டு இன்னும் சூப்பரா இருக்கும்.கையில் பிடித்துக்கொண்டு ஒரே அடிதான். பொலபொலவென உடைந்துவிடும்.இது எப்படி இருக்கு!!

   • ranjani135 Says:

    ஆக மொத்தத்தில் ‘உடைப்பதில்’ சூரப்புலியாக்கும் நீங்கள்!

    ‘உடைவது எது? – கதவா? மாங்காயா?’ என்று ஒரு பதிவு எழுதுங்கள், ப்ளீஸ்!

   • chitrasundar5 Says:

    “ஆக மொத்தத்தில் ‘உடைப்பதில்’ சூரப்புலியாக்கும் நீங்கள்”____உங்க வீட்டு லாக்கர் திறக்காட்டிபோனா சொல்லுங்க,வந்து நிரூபிச்சிடறேன்.

    என்னை நம்பி எழுத சொல்றீஙக, இதற்காகவாவது முயற்சிக்கிறேன்.

 3. இளமதி Says:

  வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்கா என்னை பார்க்காம போறாளே…

  ஹையோ பதிவை பார்த்ததும் வந்த பாதிப்பு..:)

  அருமை. நல்ல பகிர்வு… மிக்க நன்றி சகோதரி!

  ஆமாஆஆ…. மாங்காயை உடைப்பீங்களா… ஙே..ஙே…:0.
  நாங்க தேங்காயைதானே உடைப்போம்…

  • chitrasundar5 Says:

   உங்க பின்னூட்டத்தைப் பார்த்ததும் நானும் பாடிக்கிட்டேதான் (கத்துவதைத்தான் அப்படி சொல்றேன்) பதில் எழுதுகிறேன். எப்படி உடைப்போம்னு மேலே ரஞ்ஜனி அவர்களுக்குண்டான பதிலில் பாருங்க. இங்கு வந்த பிறகு தேங்காயை மட்டும் உடைப்பதோடு சரி.

   பாடலுடன் கூடிய உற்சாகமான பின்னூட்டத்திற்கு,முக்கியமா என்னையும் பாட வச்சதுக்கு நன்றிங்க.

 4. திண்டுக்கல் தனபாலன் Says:

  ஸ்ஸ்… ஃபீவர் வந்துடும் போல… ஹிஹி…

  • chitrasundar5 Says:

   என்னதிது கடைசியில் வந்திருக்கீங்களேன்னு நெனச்சேன்.அது ஃபீவருக்கு பயந்து என்பது இப்போதுதானே தெரிகிறது.வருகைக்கு நன்றிங்க.

 5. மகிஅருண் Says:

  நானும் இந்த மாங்கா இங்க சூப்பர் மார்க்கெட்ல வாங்கினேன் சித்ராக்கா! ஆனா இனிப்பா இருந்துச்சு! உப்பு மொளகாப் பொடியெல்லாம் போடாம அப்படியே சாப்பிட்டேனே! 😛
  நீங்க சொல்லிருக்க மாதிரி //வீட்டில் உள்ளவர்களுக்கு தோல் நீக்கி மிளகாய்த்தூள் தடவிக் கொடுத்தால்தான் இறங்கும்.// யாராவது செய்து குடுத்தா நானும் குஷியாச் சாப்புடுவேன், நானே சாப்பிடணும்னா, வெள்ளரிக்காயைக் கழுவி அப்படியே சாப்பிடும் அளவுக்கு சோம்பேறி நானு! ஹிஹி… 😉 🙂
  உங்க ஊர் வெள்ளரி குட்டிக் குட்டியா க்யூட்டா இருக்கு! என்ஜாய் சம்மர்!

  • chitrasundar5 Says:

   எப்போதும் பழமாங்காய் மாதிரிதானே வரும்! இந்த தடவ புளிப்பு மாங்காயாக இருந்தது.நல்லாவே இருந்துச்சு.மகி,எனக்கு காய்,பழம் எல்லாமே அப்படியே சாப்பிடத்தான் பிடிக்கும்.அதிலும் இந்த மாங்காய், என்ன புளிப்பாக இருந்தாலும் அப்படியேதான் சாப்பிடுவேன். இவங்களுக்குத்தான் இந்த உப்பு, மிளகாய்த் தூள் எல்லாம்.

   இந்த வெள்ளரிப் பிஞ்சு நம்ம ஊர் வெள்ளரிக்காய் மாதிரியே இருப்பதால் கொஞ்சம் கூடுதலாகப் பிடிக்கும்.சம்மர் ஜாலியாத்தான் போகுது.நன்றி மகி.

 6. chollukireen Says:

  கம்யூட்டர் தகராரு பண்ணிண்டிருக்கு. லேட்டா வரேன் மாங்கா ஒடச்சு சாப்பிடரது எங்க ஊர்லெகூட வழக்கம். மிளகுப்பொடி,உப்பு தூவிசாப்பிட்டா வெள்ளரிப் பிஞ்சு ரொம்ப ருசியாக இருக்கும். படமெல்லாம் ரொம்பவே அழகாயிருக்கு. சிகப்பும்,பச்சையுமா யிருக்கே அந்த மாங்காய் நறுக்கினால் முக்கால் வாசி மஞ்சள் கலரா இருக்கும். இங்கே இல்லை. பதிவு நன்றாக இருக்கு. அன்புடன்

  • chitrasundar5 Says:

   காமாஷிமா,

   சமயங்களில் இப்படித்தான் ஆகிவிடும்,என்ன செய்வது. மிளகுப்பொடி தூவி வெள்ளரிப்பிஞ்சு சாப்பிட்டதில்லை.செய்துட்டு அதையும் இணைத்து விடுகிறேன்.பிடித்தவர்கள் சாப்பிடலாமே.தகவலுக்கு நன்றிமா.

   நான்கூட வந்த புதிதில் இந்தக் காயை பார்த்துவிட்டு மாம்பழம் என்றே நினைத்துக்கொள்வேன்.சமயங்களில் தோல் பச்சையாக இருக்கும்,ஆனால் உள்ளே பழமாக இருக்கும்.ஏதோ கிடைக்கிறதே என சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.அன்புடன் சித்ரா.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: