இனிப்பு,காரம்,புளிப்புடன் பச்சைப் பயறும் சேர்ந்திருப்பதால் இந்தப் பச்சடியின் சுவை சூப்பராக இருக்கும்.ஒரு தடவை செய்துதான் பார்ப்போமே!
இங்கு எப்போதும் பழ மாங்காய் மாதிரியேதான் கிடைக்கும். ஒருசில சமயங்களில் மட்டும் நம்ம ஊரில் உள்ளது மாதிரி நல்ல காய் மாங்காவாகக் கிடைக்கும். இவை சாம்பார், fish & dry fish குழம்பு, பச்சடி போன்றவை செய்ய நன்றாக இருக்கும். இப்போது இந்த மாங்காய்கள் வந்துகொண்டிருப்பதால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோமே !!
தேவையானவை:
மாங்காய்_ 1
பச்சைப் பயறு_ 1/4 கப்
பெருங்காயம்_துளிக்கும் குறைவாக
வெல்லம்_ ஒரு கப்
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_துளியளவு
உப்பு_துளியளவு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
செய்முறை:
மாங்காயைக் கழுவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பச்சைபயறுடன் மஞ்சள்தூள்,பெருங்காயம் சேர்த்து பயறு வேகுமளவு தண்ணீர் ஊற்றி குழையாமல், மலர வேக வைக்கவும்.
பயறு வெந்ததும் அதில் மாங்காய் துண்டுகள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து கிண்டிவிட்டு மாங்காய் வேகும்வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது கரையும் அளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.
வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் தூசு,மண் இல்லாமல் வடிகட்டி வெந்த மாங்காய் பருப்புடன் சேர்த்துக் கிண்டிவிட்டு எல்லாம் சேர்ந்து இரண்டு கொதி கொதித்ததும் இறக்கி, கடுகு,உளுந்து தாளித்துக்கொட்டி கிளறி விடவும்.
இப்போது இனிப்பு,புளிப்பு, காரம் கலந்த மாங்காய் பச்சடி சாப்பிடத் தயார்.
9:06 முப இல் ஜூன் 22, 2013
நன்றி…நன்றி,,,,,
2:51 பிப இல் ஜூன் 23, 2013
முதல் ஆளாக வந்து பின்னூட்டமிட்டதற்கு உங்களுக்கும் நன்றிங்க.
7:44 பிப இல் ஜூன் 22, 2013
சித்ரா,
நான் எப்பவும் பாசிபருப்பு சேர்க்க மாட்டேன் மாங்காய் பச்சடிக்கு. இன்று இங்கே உங்கள் பதிவு பார்த்ததும் உங்கள் ரெசிபி முயன்று பார்த்ததில் வெற்றி வெற்றி.
நன்றி சித்ரா , நானும் புதிதாக எதாவது சமைப்பேன் என்று நிருபிக்க உதவியதற்கு.
2:58 பிப இல் ஜூன் 23, 2013
உங்கள் வெற்றியில் எனக்கும் சந்தோஷங்க.இந்த ரெஸிபியை பயமில்லாமல் முயற்சி செய்து பார்த்ததற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும், நன்றிங்க.
11:48 பிப இல் ஜூன் 22, 2013
நீங்கள் இங்கு சொல்லியிருப்பது போல நான் துவரம்பருப்பு சேர்த்து செய்வேன் மைனஸ் இனிப்பு. அதற்கு மாங்காய் பருப்பு என்று பெயர்.
நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் மாங்காய் இனிப்பு பச்சடிக்கு பருப்பு எதுவும் சேர்க்க மாட்டேன். மாங்காயுடன் உப்பு, கொஞ்சமாக மிளகாய்த்தூள் சேர்த்து வெந்தவுடன் வெல்லம் சேர்த்து எல்லாம் சேர்ந்து கெட்டியானவுடன் கடுகு தாளித்து இறக்கிவிடவேண்டும்.
நீங்கள் சொல்லியிருப்பது புது மாதிரி இருக்கிறது. படத்தைப் பார்த்தால் கெட்டியாக இருக்கும் போல இருக்கிறது. செய்து பார்க்கிறேன்.
3:06 பிப இல் ஜூன் 23, 2013
வெல்லமும்,பச்சைப்பயறும் சேர்ந்தாலே சுவைதான்,அதனுடன் மாங்காயும் சேரும்போது இன்னும் சுவையாக இருக்கும்.ஒரு தடவ செஞ்சு பாருங்க. கொஞ்சம் நீர்க்க வேண்டுமானால் பச்சைப் பயறை வேக வைக்கும்போது கொஞ்சம் கூடுதலாக நீர் சேர்த்துக் கொள்ளலாம்.
உங்க முறைப்படியும் ஒருநாள் செய்து பார்க்கிறேன்.மைனஸ் இனிப்பையும் கொஞ்சமாக செய்து பார்க்கிறேன்.பகிர்விற்கு நன்றிங்க.
11:14 முப இல் ஜூன் 24, 2013
இதுவரை இந்தப் பச்சடி செய்ததோ, சுவைத்ததோ இல்லை! அடுத்த முறை மாங்காய் வாங்கினால் செய்து பார்க்கிறேன் சித்ராக்கா! இணையத்தில பச்சடி ரெசிப்பிகள் பார்த்திருக்கேன், ஆனால் உடைத்த பாசிப் பருப்பு சேர்ப்பது உங்க ப்ளாகில்தான் முதலில் பார்க்கிறேன்! 🙂
பிறகு, பருப்புக் கீரை படமிருந்தால் கொடுங்க என கேட்டிருந்தீங்களே, நினைவிருக்கா? இங்கே போய்ப் பாருங்க..கீரையின் படமிருக்கு.
http://thooddam.blogspot.com/2013_02_01_archive.html
எங்கூர்ல பருப்புக்கீரை இதுதானுங்க! 🙂
6:13 பிப இல் ஜூன் 24, 2013
நல்லாருக்கும் மகி, பாதி மாங்கா போட்டு செஞ்சு பாருங்க.இங்கு வந்த பிறகு கற்றுக் கொண்டதுதான்.
நீங்க சொல்லியுள்ள ப்ளாக்கில் சென்று பார்த்தேன்.உங்க ஊர் பருப்புக்கீரை வேறு மாதிரி இருக்கு.நான் அந்தக் கீரையை பார்த்ததே இல்லை.
‘தோட்டம்’ ப்ளாக் ரொம்ப நல்லாருக்கு. நேரமிருக்கும்போது போய் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். நல்லதொரு ப்ளாக் தகவலுக்கு நன்றி மகி.