காளான் பொரியல் / Mushroom poriyal

kaalaan

இங்கு நிறைய வகைகளில், வடிவங்களில் காளான்கள் கிடைக்கின்றன. எப்போதும் வெள்ளை நிற காளான்கள்தான் வாங்குவேன்.இந்தமுறை படத்திலுள்ள இந்தக் காளானை ( Crimini mushrooms) வாங்கினேன்.

இதுவும் நல்ல சுவையில் இருந்தது.அதனால் அடுத்த முறை துணிந்து வேறொரு காளான் வாங்கும் ஐடியா உள்ளது,பார்க்கலாம்!!

kaalaankaalaan

தேவையானவை:

சிறிய காளான் _ சுமார் 15 எண்ணிக்கையில்
சின்ன வெங்காயம் _ 5
தக்காளி _ 1
இஞ்சி _ சிறு துண்டு
பூண்டிதழ் _ 1
மிளகாய்த்தூள் _ ஒன்றரை டீஸ்பூன் அல்லது காரத்திற்கேற்ப‌
மஞ்சள்தூள் _ சிறிது
உப்பு _ தேவைக்கு

தாளிக்க‌

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம் (விருப்பமானால்)
கறிவேப்பிலை

செய்முறை:

காளானை கழுவிவிட்டு நன்றாகத் துடைத்துவிட்டு விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி இவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.இஞ்சி பூண்டு தட்டிக்கொள்ளவும்.

ஒரு வாணலை அடுப்பிலேற்றி என்ணெய் விட்டு தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு வெங்காயம், இஞ்சிபூண்டு, தக்காளி,காளான் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கிவிட்டு சிறிது தண்ணீர் விட்டு மிளகாய்தூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கிண்டி மூடி வேக வைக்கவும்.

மசாலா எல்லாம் நன்றாகக் கலந்து,காளான் வெந்து வரும்வரை இடையிடையே விட்டு இறக்கவும்.

இப்போது சுவையான காளான் பொரியல் தயார்.இது எல்லா வகையான சாதத்துக்கும்,சப்பாத்திக்கும்கூட‌ சூப்பராக இருக்கும்.

வறுவல்/பொரியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , . 10 Comments »

10 பதில்கள் to “காளான் பொரியல் / Mushroom poriyal”

  1. திண்டுக்கல் தனபாலன் Says:

    காளான் பிரியாணி செய்வதுண்டு..

    சுவையான காளான் பொரியல் செய்து விடுவோம்… நன்றி…

    • chitrasundar5 Says:

      வீட்டில் காளான் சமைப்பார்கள் என்றால் அதை குருமாவில் தனியாகவோ அல்லது மற்ற காய்களுடன் சேர்த்தோகூட சமைக்கலாம்.கருத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிங்க.

  2. rajalakshmi Says:

    எனக்கு ஒரு சின்ன சந்தேகம் சித்ரா.
    காளானில் நல்லது எது கெட்டுப் போனது எது என்று கண்டுபிடிப்பது எப்படி?
    இந்த பயத்தினாலேயே நான் காளான் சமிப்பதில்லை.
    உங்கள் செய்முறை பார்க்கும் பொது சாதரன கறி மாதிரி தான் செய்ய வேண்டும் என்று தெரிகிறது.
    நன்றி சித்ரா.

    • chitrasundar5 Says:

      நிறம் ‘பளிச்’சுன்னு இருந்தாலும் ஃப்ரெஷ்ஷா இருக்கும்.மேலும் காளானைத் தொட்டுப் பார்த்தாலே தெரியுங்க‌. ஃப்ரெஷ்ஷா இருந்துச்சுன்னா சாதாரணமாக இருக்கும்,கெட்டுப் போச்சுன்னா கொஞ்சம் வழவழப்பு தெரியும்.

      காளான் வாங்கி ஒன்றிரண்டு நாட்களிலேயே சமைத்துவிடுவது நல்லது. குருமா (ட்ராஃப்டில் இருக்கு), காளான் பிரியாணி இப்படி ஏதாவது செய்து காலி பண்ணிடுவேன். சீக்கிரமே வாங்கி சமைத்து சாப்பிடுங்கோ. வருகைக்கு நன்றிங்க.

  3. மகிஅருண் Says:

    பொரியல் நல்லா இருக்கு சித்ராக்கா! சிம்பிள் அண்ட் சீக்கிரமா செய்துடலாம், ருசியும் நல்லா இருக்கும் என பார்க்கும்போதே தெரியுது!

  4. ranjani135 Says:

    வீட்டுல இதுவரை காளான் போட்டு எதுவும் சமைத்ததில்லை. ஹோட்டல்ல போயி சாப்பிடும்போது புதிதாக சாப்பிட வேண்டும் இல்லையா? அதனாலதான்…..ஹி….ஹி…..!

    இங்கு இதைபோல பட்டன் வகைக் காளான்கள் விலை அதிகம். இதுவும் ஒரு காரணம்!

    சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ஒரு புதிய சமையல் குறிப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு நன்றி!

    • chitrasundar5 Says:

      பயப்படாம செஞ்சு / ஹோட்டலில் சாப்பிட்டுப் பாருங்க.நல்லாவே இருக்கும்.

      பல வருடங்களுக்கு முன்பு அம்மா வாங்கும்போதே விலை அதிகமாகத்தான் இருந்தது.இப்போது இன்னும் அதிகமாகவே இருக்கும்.கொஞ்சமா வாங்கி செய்துதான் பார்ப்போமே!வருகைக்கு நன்றிங்க.

  5. Dr.M.K.Muruganandan Says:

    இது இங்கு காணாத காளான்
    வாய் ஊற வைக்கிறது
    அருமை


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: