கருப்பரிசி வாங்கியாச்சு, சமைக்க வேண்டும், எப்படி சமைப்பது, இப்படி எதுவுமே தெரியாததால் நெட்டில் தேடிப்பார்க்கலாம் என்று தேடினால் இந்த அரிசி எளிதில் வேகாது, முதல் நாளிரவே ஊற வைத்தால்தான் அடுத்த நாள் வேக வைக்க முடியும் என்றெல்லாம் இருப்பதைப் பார்த்து கொஞ்சம் பயந்துதான் போனேன்.
ஏன்தான் வாங்கினோமோ என்றாகிவிட்டது. அங்கேயும்,இங்கேயுமாக சென்று படித்த பிறகுதான் தெரிந்தது அதில் அடங்கியுள்ள சத்துகளின் விவரம்.
சரியென ஒரு முடிவுக்கு வந்து முதல் நாள் சமைக்கும்போது காலையில் ஊறவைத்து மதியத்துக்கு சாதாரண அரிசி மாதிரியே வடித்துப் பார்த்தேன்.
அடுத்த நாள் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து வேக வைத்து வடித்தேன்.
சாதாரண அரிசி மாதிரிதான் வேகிறது. வேக எடுத்துக்கொள்ளும் நேரத்தில் சாதாரண அரிசிக்கும் இதற்கும் எந்தவொரு வித்தியாசமும் தெரியவில்லை.
அதனால் இப்போதெல்லாம் ஊற வைப்பதெல்லாம் இல்லாமல் சாதாரண அரிசி மாதிரியேதான் செய்கிறேன்.
பிரஷர் குக்கரில் வைப்பதானால் ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் விட்டு ஆவி வரும்போது வெயிட் போட்டு தீயைக் குறைத்துவைத்து விசில் வராமல் ஒரு 10 லிருந்து 15 நிமிடத்திற்குள் நிறுத்திவிடுவேன்.
நீங்களும், சாதாரண அரிசியை எப்படி குக்கரில் வேக வைப்பீங்களோ அப்படியே வேகவைங்க.
இன்னும் எலக்ட்ரிக் குக்கரில் வேக வைக்கவில்லை.
கொஞ்சம் ஸ்டிக்கி ரைஸ் மாதிரி இருக்கிறது.சாதாரண அரிசி மாதிரியே சமைக்கலாம். சுவையில் ஒன்றும் குறையில்லை. அதனால தைரியமா வாங்குங்கோஓஓ!! யான் பெற்ற இன்பம் பெறுக…………இவ் வலையுலகம்!!
சாம்பார், கிள்ளிப்போட்ட அல்லது முழுமிளகாய் சாம்பார், ரஸம் இவற்றுடன் சூப்பரா இருக்கு.
அடுத்த பதிவில் இந்த சாதத்தை வைத்து வேறு ஏதாவது செய்துகொண்டு வருகிறேன், அதற்குள் கடைகளுக்கு விஜயம் செய்து கருப்பரிசியை வாங்கிவந்து சாதமாக்கி வைங்க!
8:00 பிப இல் ஜூலை 7, 2013
அப்பாடா…! கருப்பரிசி சந்தேகம் தீர்ந்து விட்டது… நன்றி…
8:05 பிப இல் ஜூலை 7, 2013
எனக்கு இப்போதான் சந்தேகமே வருது. வாங்கலாமா அல்லது வேண்டாமா என்பதில் வேண்டாம் என முடிவெடுத்து இருப்பிங்களோன்னு. வருகைக்கு நன்றிங்க.
1:28 முப இல் ஜூலை 8, 2013
//கிள்ளிபோட்ட அல்லது முழுமிளகாய் சாம்பார்// செய்முறை பின்னால் வருகிறாதா? இல்லை ஏற்கனவே எழுதிவிட்டீர்களா?
4:05 பிப இல் ஜூலை 8, 2013
அந்த சாம்பாருடன் சாப்பிட்டுவிட்டு எழுதவும் அதையும் சேர்த்து எழுதிவிட்டேன்.ஏற்கனவே இங்கு இருக்கு.ரசம் மாதிரிதான்,எளிதில் செய்திடலாம்.
ஏன்னே தெரியல,லிங்க் கொடுத்தால் வரமாட்டிங்கிது.சாம்பாரை க்ளிக் பண்ணி பாருங்க.கொஞ்ச நேரம் கழித்து லிங்க் கொடுத்துப் பார்க்கிறேன்.
5:10 முப இல் ஜூலை 8, 2013
Hai mam,
thank you for the black rice information
4:27 பிப இல் ஜூலை 8, 2013
pushpavani,
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிஙக.
1:25 பிப இல் ஜூலை 8, 2013
கருப்பரிசி சாதம் நன்றாக இருக்கிறதா?
எனக்கும் ///கிள்ளிபோட்ட அல்லது முழுமிளகாய் சாம்பார்// ரெசிபி அறிய ஆவல்.
4:20 பிப இல் ஜூலை 8, 2013
ம்ம்..இப்போ பழகியாச்சு,பிடிக்கவும் செய்கிறது.ஒருநாள் விட்டு ஒருநாள் வைப்பேன்.எதுக்கும் கொஞ்சமா வாங்கி சமைச்சுப் பாருங்க. லிங்க் கொடுத்தால் வரமாட்டிங்கிது.சாம்பாரை க்ளிக் பண்ணி பாருங்க.
12:54 பிப இல் ஜூலை 9, 2013
கருப்பரிசி சாதம் பார்க்க கலர்ஃபுல்லா இருக்கு சித்ராக்கா! நான் (இப்போதைக்கு) இந்த அரிசி வாங்குவேன், சமைப்பேன்னு உங்களுக்கு ஃபால்ஸ் ஹோப் குடுக்க விரும்பலை! ஹிஹ்ஹிஹி! 😉 🙂 படம் பார்த்து கருத்து மட்டும் சொல்லிக்கிறேனே, ப்ளீஸ்?! 😉
6:17 பிப இல் ஜூலை 9, 2013
ம்ம் எஸ்கேப் ஆகிட்டீங்க. ஆனா, நாங்கள்லாம் யாருக்கும் (எந்த அரிசிக்கும்) பயப்படறமாதிரி இல்ல!
1:23 முப இல் ஜூலை 12, 2013
கருப்பரிசி கேள்விப் பட்டதுடன் ஸரி. வாங்கிவரச் சொல்ல வேண்டும். கருப்புட்டரிசி ஹல்வாஎன்று சொல்வது கேட்டிருக்கிறேன். அதையும் ட்ரை செய்து பார்த்துவிடு. தேங்காய்ப்பாலை சேர்த்து அரிசியை அரைத்துக் கிளறுவது,. நெய் சேர்த்துதான். நல்ல பக்குவம்கள். அன்புடன்
7:51 பிப இல் ஜூலை 12, 2013
காமாக்ஷிமா,
ஓ,இந்த அரிசியில் அல்வா செய்யலாமா!!முயற்சித்துப் பார்க்கிறேன்.நான் சாதாரண அல்வாகூட இன்னும் செய்ததில்லை.
தேங்காய்ப்பால் & வெல்லம் இரண்டும் கொதி வந்ததும் வடித்து வைத்திருந்த கருப்பரிசி சாதத்தை சேர்த்துக் கிளறி சர்க்கரை பொங்கல் மாதிரி செய்து சாப்பிட்டோம்.நன்றாக இருந்தது.அன்புடன் சித்ராசுந்தர்.
3:34 பிப இல் ஓகஸ்ட் 3, 2013
We bought some “wild black rice” Chitra Akka. Those grains are longer and not 100% black like yours. I have seen the black rice as shown in your pictures in Sprouts, but this time we had only this wild rice variety! Let me try n let you know.
9:18 பிப இல் ஓகஸ்ட் 3, 2013
நீங்க சொல்லும் அரிசியை நான்கூட பார்த்திருக்கிறேன் மகி,பாசுமதி அரிசி மாதிரியே இருக்கும்.அதனாலென்ன,சீக்கிரம் பாயசத்தை செய்யுங்க.
இந்த அரிசி Costco வில் கிடைக்குமே. Trader Joe’s லும் இருக்கிறது.
இந்த முறை சர்க்கரைப் பொங்கல் சூப்பரா இருந்துச்சு.எல்லோருமே சாப்பிட்டோம்.போன தடவ பச்சைபருப்பு சேக்காம செஞ்சிட்டேன்.
7:45 முப இல் ஜனவரி 11, 2014
is this also called as kaarboga arisi?
6:41 பிப இல் ஜனவரி 11, 2014
கார்த்திகா,
கார் அரிசி தெரியும், நல்ல சிவப்பாக இருக்கும், சுவையாகவும் இருக்கும். ஆனால் நீங்கள் சொல்லும் கார்போக அரிசி இதுதானான்னு தெரியாதுங்க.
உங்கள் வருகைக்கு நன்றிங்க.