கருப்பரிசி சுண்டல் / Black rice sundal

 

sundalsundal

கருப்பரிசி சாதத்தை அதன் நிறத்தினால் கொஞ்சம் (கொஞ்சம்தானா!!) சாப்பிடப் பிடிக்காதுதான்.அதனால் அதனை படத்திலுள்ளவாறு சுண்டல் / சாலட் மாதிரி செய்து சாப்பிட்டு பார்ப்போமே!

தேவையானவையை மட்டும் எழுதுகிறேன்.அதன் அளவுகளை உங்கள் விருப்பம்போல் கூட்டியோ,குறைத்தோ கலந்துகொள்ளலாம்.

கருப்பரிசி சாதம்
ஊறவைத்து வேக வைத்த ஏதாவதொரு கடலை
வேக வைத்த சோள முத்துகள்
முளைகட்டிய பாசிப்பயறு (இல்லை என்பதால் சேர்க்கவில்லை)

அலங்கரிக்க:

மெல்லிய அளவில் நறுக்கிய கேரட்
பொடியாக நறுக்கிய மாங்காய் (சேர்க்க மறந்தாச்சு)
பொடியாக நறுக்கிய வெங்காயம்
தேங்காய்ப் பூ
பச்சை மிளகாய்
கொத்துமல்லி இலை
உப்பு(தேவையானால்)

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
காய்ந்த மிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

ஒரு பௌளில் சாதம்,கடலை,சோளம்  இவற்றை ஒன்றாகக் கலந்து உப்பு தேவையானால் சிறிது தூவிவிட்டு, தாளிக்க வேண்டியதைத் தாளித்து சாதக்கலவையில் கொட்டிக்கிளறி, கடைசியில் அலங்கரிக்கக் கொடுத்துள்ளவற்றை எல்லாம் போட்டுக் கலந்து சாப்பிட வேண்டியதுதான்.

விருப்பமானால் சிறிது எலுமிச்சை சாறு கலந்துகொள்ள‌லாம்.

என்னால் முடிந்தவரை கலந்து கொடுத்திருக்கிறேன்.மேற்கொண்டு சுண்டலை கலர்ஃபுல் ஆக்கி வீட்டில் உள்ள‌வர்களை சாப்பிட வைப்பது உங்கள் பொறுப்பு……..

சுண்டல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . 10 Comments »

10 பதில்கள் to “கருப்பரிசி சுண்டல் / Black rice sundal”

 1. rajalakshmiparamasivam Says:

  உங்கள் கருப்பரிசி சுண்டல் பார்க்க கலர்புல் ஆகத் தான் உள்ளது.
  சுவையாகவும் இருக்கும் தானே !!

  • chitrasundar5 Says:

   எனக்குப் பிடிக்கிறது,இவரும் சாப்பிடுகிறார்.ஆனால் மகள் தொடுவதில்லை.Whole foods market மாதிரியான கடைகளில் நமக்கு வேண்டும் அளவு எடுத்துக்கொள்ள வசதியிருக்கும்.அங்குபோய் 1/2 lb அளவுக்கு வாங்கி வந்து சமைத்துப் பாருங்க.இரண்டு நாட்களில் பிடித்துப்போய்விடும்னு நினைக்கிறேன்.

   இல்லையென்றால் இந்த சுண்டல் மாதிரி செய்து சாப்பிட்டுப் பாருங்க.

 2. pushpavani Says:

  hai mam,
  thank you for the black rice sundal receipe

 3. மகிஅருண் Says:

  வித்யாசமா மாத்தி யோசிக்கிறீங்க! ஜூப்பர்! கீப் இட் அப்! 🙂

 4. chollukireen Says:

  கருப்பரிசி ஃப்ரைட் ரைஸ் பேர் அழகாயிருக்கும். இஷ்டத்திற்கு எது வேண்டுமோ அதை வதக்கிச் சேர்த்தால் ரெடி. சாப்பாடு தயார். அன்புடன்

  • chitrasundar5 Says:

   காமாக்ஷிமா,

   பெயர் சூப்பரா இருக்கு. இன்னும் அரிசி ஸ்டாக் இருக்கிறது. அடுத்த வாரம் ஃப்ரைட் ரைஸ் செய்திடலாம். ஏகப்பட்ட ஐடியாக்கள் வச்சிருக்கீங்க. நன்றிமா,அன்புடன் சித்ரா.

 5. மகிஅருண் Says:

  சித்ராக்கா, ஞாயிறன்று ஒரு நண்பர் வீட்டுக்கு போயிருந்தோம். அவங்க வீட்டில் டிஸர்ட் என்ன தெரியுமா? 🙂 கறுப்பரிசி பாயசம்!! 🙂

  செட்டிநாட்டு சமையலில் இந்த “கவுனி அரிசி பாயசம்” ரொம்ப ஃபேமஸாம்! செய்முறையும் சிம்பிள்…அரிசியை ஊறவைத்து, ஊறவைத்த நீருடனே குழைவான சாதமாக சமைச்சு, சுவைக்கு சர்க்கரை, தேங்காய்ப்பூ சேர்த்து கலந்தா சரி! எங்க வீட்டில இவருக்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு பாயசம். சீக்கிரமா ஸ்ப்ரவுட்ஸ் போய் நாங்களும் ப்ளா(க்)கரிசி:) வாங்கப்போறோமே! நீங்களும் பாயசம் செய்து பாருங்க.

  • chitrasundar5 Says:

   வாங்குங்க x 2. வாங்கி கறுப்பரிசி பாயசம் செய்துட்டு ரெஸிபிய போடுங்க.

   சர்க்கரை பொங்கல் கொஞ்சமா செஞ்சேன்.நானும் இவரும் மட்டுமே சாப்பிட்டோம்.பொண்ணு தொடல.புலாவ்,கிச்சடி இதுமாதிரி செய்யலாம்னு நெனப்பேன்.இவ சாப்பிடலனா என்ன செய்வதுன்னு சாதம் மட்டுமே வைக்கிறேன். இன்னும் ஒரு ரைஸ்கப் அளவுக்கு அரிசி இருக்கு. காலியானதும் மீண்டும் வாங்குவேன்.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: