கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல் / Black rice sweet pongal

pongal

நாளை ஆடி 18 ம் பெருக்குக்கு சூப்பர் சுவையில், கொஞ்சம் வித்தியாசமான சர்க்கரைப் பொங்கல் செய்து கொண்டாடுவோமே!!

தேவையானவை:

கருப்பரிசி _ ஒரு கப்
பச்சைப் பருப்பு _ 1/4 கப்
உப்பு _ துளிக்கும் குறைவாக‌ (சுவைக்காக‌)
வெல்லம் _ ஒரு கப்
பால்_1/4 கப்
தேங்காய்ப் பூ_2 டீஸ்பூன்
நெய்_2 டேபிள்ஸ்பூன்
முந்திரி _ 10
ஏலக்காய்_1

செய்முறை:

பச்சைப் பருப்பை வெறும் வாணலில் சூடுவர வறுத்துக்கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.

பருப்புடன் கருப்ப‌ரிசியை சேர்த்துக் கழுவிவிட்டு, ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, பெயருக்கு துளிக்கும் குறைவாக உப்பு போட்டு, நன்றாக வேக வைக்கவும்.

நன்றாக வெந்த பிறகு பாலை விட்டு தீயை சிம்மில் வைத்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி,வெல்லம் கரைந்ததும், மண் & தூசு போக வடிகட்டிவிட்டு, மீண்டும் அடுப்பில் ஏற்றி வெல்லத் தண்ணீர் நன்றாக நுரைத்துக்கொண்டு வரும்போது எடுத்து சர்க்கரைப் பொங்கலில் கொட்டி நன்றாகக் கிளறிவிடவும்.

பிறகு தேங்காய்ப் பூ, பொடித்து வைத்துள்ள ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.

அடுத்து நெய்யில் முந்திரியை வறுத்து பொங்கலில் சேர்த்துக் கிளறிக்கொடுத்து இற‌க்கவும். இப்போது சுவையான கருப்பரிசி பொங்கல் தயார்.

pongal

கடைசியில் ஒரு சிறு குறிப்பு:

நெய்யில் முந்திரியை வறுத்துக்கொண்டு அதிலேயே பொங்கலைக் கொட்டிக் கிளறி எடுத்தால் இன்னும் சுவையாக இருக்கும். அது வேறொன்றுமில்லை, நெய் முழுவதும் சேர்வதால் சூப்பர் சுவையுடன் இருக்கும்.

12 பதில்கள் to “கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல் / Black rice sweet pongal”

  1. DD Says:

    இதுவரை செய்ததில்லை… செய்முறை விளக்கத்திற்கு நன்றி…

  2. cheena ( சீனா ) Says:

    அன்பின் சித்ரா சுந்தர் – கருப்பரிசி சர்க்கரைப் ப்பொங்கல் அருமை – நாவினில் உம்ழ் நீர் ஊருகிறது = விபரமான குறிப்பு- நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  3. ranjani135 Says:

    உங்கள் கருப்பரிசி பொங்கல் ‘கருகருவென்று’ பார்க்கவே புது கலரில் இருக்கிறது, சித்ரா!
    வாசனையும் தூக்குகிறது என்று நினைக்கிறேன். அதான் அன்பின் சீனா ஐயாவையே பின்னூட்டம் போட வைத்துவிட்டது!

    • chitrasundar5 Says:

      நீங்களும் கருப்பரிசி வாங்கினால் முதலில் இதை வைத்து ஸ்வீட் செய்து பாருங்க. காமாக்ஷிமாகூட அல்வா செய்யச் சொன்னாங்க. இதைவைத்து எப்படி? என குழம்பினேன். ஆனால் கருப்பரிசியுடன் வெல்லம் அல்லது சர்க்கரை நல்ல காம்பினேஷன் போல் தெரிகிறது.

      அதுதான் அன்பின் சீனா ஐயாவையே பின்னூட்டம் போட வைத்திருக்கிறது. (இப்போ நீங்களே கருப்பரிசி வாங்க கிளம்பிட்டீங்க பாருங்க!)

      நேற்று எங்க பொண்ணுகூட நல்லா இருக்குன்னு சாப்பிட்டாள். அவள் தோழி (japanese) எங்க வீட்டுக்கு வரும் அன்று இதை செய்யச்சொல்லி கேட்டிருக்கிறாள்.

  4. rajalakshmi Says:

    ஆடிப்பெருக்குக்கு நானும் சர்க்கரைப் பொங்கல்செய்து விட்டேன்.உங்கள் கருப்பரிசி பொங்கல்பார்க்கவே சுவையாக இருக்கிறது.
    நல்ல விலாவாரியாய் இருக்கிறது செய்முறை.
    நன்றி பகிர்விற்கு.

    • chitrasundar5 Says:

      இன்று உங்க வீட்ல சர்க்கரைப் பொங்கலா!நான் நேற்று ஆடி வெள்ளிக்கு செய்தேன்.சாப்பிடக்கூட நல்லாவே இருந்துச்சு.

      நீங்க இங்கு இருக்கும்போதே கருப்பரிசி வாங்கி செய்து,சாப்பிட்டு பார்த்திடுங்க.நிறைய வெரைட்டியில் கிடைக்கும்.பிடித்தால் கொஞ்சம் வாங்கிக்கொண்டும் செல்லலாம். வருகைக்கு நன்றிங்க.

  5. MahiArun Says:

    I did kavuni arisi Payasam yesterday! Will try this pongal next time! 🙂

  6. மகிஅருண் Says:

    சித்ராக்கா, அந்த ரெசிப்பிக்கு பேரே “கவுனி அரிசி”தானாம்! நாந்தான் பாயசம்னு நினைச்சிருக்கேன்! 😉 கருப்பரிசி சாதம் வடிச்சு, சர்க்கரை, தேங்காய்ப்பூ சேர்த்து கலந்தா அம்புட்டுதான், பெரிய ப்ராசஸ் எல்லாம் இல்லை. இந்த வாரம் கொஞ்சம் பிஸியாப் போனதால ப்ளாக் அப்டேட் பண்ண முடிலை.

    ஆடி கடைசி வெள்ளி என்பதும் நீங்க சொல்லித்தான் தெரியும், அவல் பாயசம் செய்ய நினைச்சேன், ஆனா பாருங்க, மொளகா பஜ்ஜி-தான் பண்ணினேன்! ஹிஹி!! 😉

    • chitrasundar5 Says:

      நானும் நீங்க முன்பு சொன்னதை வைத்து கருப்பரிசியின் பெயர்தான் கவுனி அரிசின்னு நெனச்சிட்டேன்.எனக்கும் இந்தப் பெயர் புதிதுதான். இந்த தடவ பனைவெல்லம் சேர்த்து பொங்கல் செய்தேன், நல்லாருந்துச்சு.

      ஆடி கடைசி வெள்ளின்னு ஊருக்கு ஃபோன் செய்தபோது கேள்விப்பட்டதுதான்.

      அதென்னமோ தெரியவில்லை இந்த பஜ்ஜியும், கடலைப் பருப்பு வடையும் அடிக்கடி செய்ய வேண்டியதாகிவிடுகிறது. எங்க வீட்ல நேத்து பஜ்ஜி, இன்னைக்கு…….அ தி ர ச ம்…வாவ்!


chitrasundar5 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி