இதனை பிரட்டிய சாதம், வாணல் சாதம் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.
எங்கம்மா ஒரு பெரிய இரும்பு வாணல் நிறைய பொரியல் செய்வாங்க. எல்லோரும் சாப்பிட்டு முடித்தபிறகு, வாணலில் ஒன்றிரண்டு டீஸ்பூன் அளவிற்கு பொரியல் கொஞ்சம் மீதமிருக்கும். தாளிப்புப் பொருள்களும் கொஞ்சம்போல ஒட்டியிருக்கும். அதில் ஒரு கை சாதம் போட்டு பிரட்டி எடுத்து சாப்பிட்டால் அது சூப்பர் சுவையில் இருக்கும். இதை சாப்பிட்டுப் பழகியவர்கள் விடமாட்டார்கள். வெஜ், நான்வெஜ் எதுவாக இருந்தாலும் நன்றாக இருக்கும்.
சில சமயங்களில் பிடித்தமான பொரியலாக இருந்தால், வாணலில் உள்ளதை அப்படியே ஒரு பெரிய கிண்ணத்திற்கு மாற்றிவிட்டு, கொஞ்சம் அதிகமாகவே சாதத்தைப் போட்டு ஆளுக்கொரு கையாகக் கொடுப்பான் என் தம்பி. அதை அடித்துப்பிடித்து சாப்பிடுவோம்.
எண்ணெய் வேண்டாம் என்பதால் இப்போது இந்தப் பழக்கத்தில் இருந்து வெளியில் வந்துவிட்டாலும், என்றைக்காவது இது மாதிரி செய்து சாப்பிடுவேன். அப்படி எடுத்த படங்கள்தான் கீழேயுள்ளவை. பழக்கம் இல்லையென்றாலும், ஒருதடவை செய்து பாருங்க, அப்புறம் நீங்களும் விடமாட்டீங்க!
நான்வெஜ் வகைகளில் நண்டு வறுவல், நெத்திலிக் கருவாடு வறுவல், சிக்கன் வறுவல்இவற்றில் பிசைந்த சாதம் சூப்பராக இருக்கும்.
உருளைக்கிழங்கு பொரியல் சாதம்
பீன்ஸ் பொரியல் சாதம்
வெண்டைக்காய் பொரியல் சாதம்
ரொமானோ பீன்ஸ் பொரியல் சாதம்
ப்ரோக்கலி ரே(ய்)ப் பொரியல் சாதம்
பாவக்காய் பொரியல் சாதம்
கொத்தவரங்காய்ப் பொரியல் சாதம்
கத்தரிக்காய் பொரியல் சாதம்
முருங்கைக்கீரை பொரியல் சாதம்
முருங்கைக்கீரை பொரியலின் செய்முறை இன்னும் பதிவாகவில்லை, விரைவில் போடுகிறேன்.
8:41 முப இல் ஓகஸ்ட் 11, 2013
எங்க மாமியார் வீட்டில் முதலில் பொரியல் சாதம் தான் எல்லோருமே சாப்பிடுவார்கள். பிறகுதான் குழம்பு சாதம். ஆனால் நீங்கள் சொல்வதுபோல கொஞ்சம் கொஞ்சம் இருக்கும்போது சாதத்தை அதில் கலந்து சாப்பிடும்போது அது ஓர் தனி சுவைதான்!
10:05 பிப இல் ஓகஸ்ட் 13, 2013
பொரியல் சாதம் என்றதும் உங்களுக்கு மாமியார் வீடுதான் நினைவுக்கு வருதா! கடைசியில வாணல்ல இருக்கற எண்ணெயுடன் அதுவும் நல்லெண்ணெயா இருந்தா ஒரு கைப்பிடி சாதத்துடன் கத்தரிக்காய், உருளை இதெல்லாம் சூப்பரா இருக்கும்.
12:08 பிப இல் ஓகஸ்ட் 11, 2013
எனக்கும் இந்த மாதிரி சாப்பிடுவது மிகவும் பிடித்தமானது.உருளைகிழங்கு போரியல் செய்து முடித்த பிறகு இந்த மாதிரி பிரட்டி சாப்பிடும் ருசிக்கு இணையே கிடையாது.
10:10 பிப இல் ஓகஸ்ட் 13, 2013
ஓ, உங்களுக்கும் பிடிக்குமா! அப்படின்னா நம்மில் பெரும்பாலானோர் இதைத்தான் செய்கிறோமோ !!
“உருளைகிழங்கு போரியல் செய்து முடித்த பிறகு இந்த மாதிரி பிரட்டி சாப்பிடும் ருசிக்கு இணையே கிடையாது”_________ஆமாங்க, அதனாலதான் உருளைக்கிழங்கு சாதத்திற்கு முதலிடம் வந்துவிட்டது.
10:21 பிப இல் ஓகஸ்ட் 11, 2013
Nice to know that me n my m-in-law got some company for this poriyal rice! 😀
Catch you tomorrow Chitra Akka! 🙂
2:24 பிப இல் ஓகஸ்ட் 13, 2013
பொரியல்வகைகளை ஒவ்வொன்றா பார்த்தேன். குக்கரில பருப்பு வேகவைச்சே பழகியாச்சா..தனியாக பருப்பை வேகவைச்சு சேர்ப்பதுதான் கொஞ்சம் சிரமமா இருக்கும் என தோணுது! 😉
நல்ல பதிவு சித்ராக்கா!
10:22 பிப இல் ஓகஸ்ட் 13, 2013
துவரம்பருப்புக்கு பதிலா பச்சப்பருப்பு சேர்த்துக்கலாம். அதுதான் வச்சதுமே பொஸபொஸனு வெந்திடுமே. இப்போல்லாம் குக்கர யூஸ் பண்றதேயில்ல.
பொரியல் சாதம் என்றதும் எங்கம்மாவும், தம்பியும்தான் நினைவுக்கு வருவாங்க.