பாவக்காய் புளிக்குழம்பு / Paavakkaai puli kuzhambu

paavakkaai

ஒருசில மாதங்கள் தவிர மற்ற எல்லா காலங்களிலும் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் விதவிதமான பாவக்காய்கள் வரும். நான் வாங்குவது படத்திலுள்ள இந்த பிஞ்சு பாவக்காய்தான்.

paavakkaai

விதைகளை நீக்க வேண்டிய அவசியம்கூட இருக்காது. பிஞ்சு பாவக்காய் நல்லதா அல்லது முற்றல் நல்லதான்னு தெரியவில்லை.

இதில் புளிக்குழம்பு,பொரியல் என எது செய்தாலும் பிடிக்கும்.

தேவையானவை:

பாவக்காய்_3
புளி_பெரிய கோலியளவு
சின்ன வெங்காயம்_7
தக்காளி_1
முழு பூண்டு_1
மஞ்சள்தூள்
மிளகாய்த்தூள்_2 டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
வடகம்
காய்ந்தமிளகாய்
கடலைப்பருப்பு
சீரகம்
வெந்தயம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீரில் ஊறவைக்கவும்.

பாவக்காயை விருப்பமான வடிவத்தில் நறுக்கிக்கொண்டு விதை இருந்தால் நீக்கி விடவும்.

பூண்டு உரித்துக்கொண்டு,வெங்காயம்,தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்.

குழம்பு வைக்கப்போகும் சட்டியை அடுப்பிலேற்றி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துக்கொள்ளவும்.

தாளிப்பு முடிந்ததும் வெங்காயம்,பூண்டு,தக்காளி,பாவக்காய் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

காய்கள் வதங்கியதும் புளியை இரண்டுதரம் கரைத்து ஊற்றி,மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு உப்பு,காரம் சரிபார்த்து மூடி கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து பாவக்காய் வெந்து,பொதுவாக‌ எண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும்சமயம் இறக்கிவிடலாம். எங்க வீட்டு குழம்பில் எண்ணெய் மிதக்க சான்ஸே இல்லை.

paavakkaai pulikuzhambu

சாதம் & அப்பளம் அல்லது வ‌த்தலுடன் இந்த புளிக்குழம்பு சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
 
குழம்பு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 12 Comments »

12 பதில்கள் to “பாவக்காய் புளிக்குழம்பு / Paavakkaai puli kuzhambu”

 1. மகிஅருண் Says:

  //எங்க வீட்டு குழம்பில் எண்ணெய் மிதக்க சான்ஸே இல்லை.// உங்க தட்டில் இருக்கும் சாப்பாட்டின் அளவைப் பார்த்தாலே அது தெரிகிறது! 😉 🙂 இவ்ளோ சாதம்தான் தினமும் சாப்பிடறீங்களா சித்ராக்கா? க்ரேட்! 🙂

  குழம்பு, பாகற்காய் எல்லாமே நல்லா இருக்கு. எங்க மார்க்கட்டில் இப்ப வெண்டைக்காய் ரெகுலரா வருது. ஆனா பாவற்காய் எல்லாம் வருவதில்லை.

  • chitrasundar5 Says:

   “இவ்ளோ சாதம்தான் தினமும் சாப்பிடறீங்களா சித்ராக்கா?”____ சாப்பாட்டுக்கு முன்னால‌ உப்பு,காரம் எல்லாம் சரியா இருக்கான்னு சுவை பாக்குற‌ தட்டுதான் மகி இது.

   ஸ்வீட் & காரம்னு டெய்லி நல்லா போவுது.அக்டோபரிலிருந்துதான் படத்தில் உள்ள அளவுப்படி சாப்பிட‌லாம் என முடிவெடுத்திருக்கேன்.நேற்று நான் போளி செய்தேன்.என்னையே என்னால நம்ப முடியல.அவ்ளோ அழகா, மெல்லியதா வந்துச்சு.யாரிடமாவது சொல்லாட்டி மனசு கேக்காதுல்ல. அதான் ஒரு தபா https://chitrasundar5.wordpress.com/2010/11/01/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF/ இங்க எட்டிப்பாத்துட்டு வந்திருங்க.

   சுண்டுவிரல்,கட்டைவிரல் சைஸில் கத்தரிக்காய்கள்,நம்ப முடியாத அளவுக்கு குட்டிகுட்டியா பீர்க்கை,சுரைக்காய் என எல்லா காய்களுமே பிஞ்சுபிஞ்சா சூப்பரா வருது.

   • மகிஅருண் Says:

    //சாப்பாட்டுக்கு முன்னால‌ உப்பு,காரம் எல்லாம் சரியா இருக்கான்னு சுவை பாக்குற‌ தட்டுதான் மகி இது.// aahaa!! அப்பச் சரி! 🙂 😀 நிறைய முறை போட்டோல இந்த அளவு சாதத்தையே பார்த்து கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன்! 🙂

    போளி பார்த்தேன், சூப்பரா இருக்கு. நான் போளி செய்து வருஷக்கணக்காச்சு. நீங்க ஆசையைத் தூண்டிவிடறீங்க. ஆல்ரெடி பனானா வால்நட் கேக், ஸ்கோன் இப்படி இங்க்லீஷ் ஸ்னாக் எல்லாம் லிஸ்ட்ல வைச்சிருக்கேன்…அவ்வ்வ்வ்வ்!

    உங்க ஊர் மார்க்கட் ரேஞ்சுக்கு எல்லாக் காயுமே கிடைக்கும். எங்க வீட்டுப் பக்கத்து மார்க்கட்ல மொத்தமே ரெண்டே ரெண்டு காய்க்கடைதான்! அதிலும் 2 வது கடை போனவாரம்தான் வந்தது! வி ஆர் ஸ்டில் டெவலப்பிங் பார்ட் ஆஃப் கலிஃபோர்னியா, யு ஸீ! 😉

   • chitrasundar5 Says:

    இவருக்கு சாப்பாடு,ஸ்நாக்ஸ் எல்லாமே நம்ம ஊரு ஐட்டம்தான் பிடிக்கும்.அதிலும் வெல்லம் சேர்த்து செய்தால் சொல்லவே வேண்டாம். வெளியில் வாங்குவதை சாப்பிடுவது நானும் மகளும் மட்டுமே.

    ரெண்டு கடையாவது இருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான். ஐஸ்ல வச்சதையே வாங்குறதுக்கு இது பரவாயில்லையே.

 2. திண்டுக்கல் தனபாலன் Says:

  ஆகா… சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது… நன்றி…

 3. rajalakshmiparamasivam Says:

  பாகற்காயில் நான் புளிக் குழம்பு செய்ததில்லை. இது புதுசா இருக்கே! செய்து பார்த்து விட வேண்டியது தான்.

  • chitrasundar5 Says:

   பாவக்காய் என்றாலே புளிக்குழம்புதான் செய்வோம்.புதுசா இருக்குனு நீங்க சொல்வது எனக்கு புதுசா இருக்கு.செஞ்சு பாருங்க,அதிலும் புளி கொஞ்சம் இனிப்பு புளியாக இருந்துவிட்டால் இன்னும் சூப்பரா இருக்கும்.

 4. chitrasundar5 Says:

  From cheena ( சீனா ) on பாவக்காய் புளிக்குழம்பு / Paavakkaai puli kuzhambu #

  அன்பின் சித்ரா சுந்தர் – பாவக்காய் புளிக் கொளம்பு – செய்முறை விளக்கங்கள் – படங்கள் அருமை – நன்று நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் …

 5. mahalakshmivijayan Says:

  பாகற்கயில் புளிகுழம்பா!! அடடே, புதுசாக இருக்கிரதே! நன்றாக இருக்கும் போல தோன்றுகிரதே!குழம்பை வைத்து பார்க்கிரேன்! கசக்குமா, இல்லை வதங்கும் போது கசப்பு நீங்கி விடும?? படம் பார்க்க அழகாகவே இருக்கிரது 🙂

  • chitrasundar5 Says:

   பாவக்காயை வச்சு நீங்க என்ன செய்வீங்க? ராஜலக்ஷ்மியும் இதேதான் சொல்றாங்க!

   “கசக்குமா, இல்லை வதங்கும் போது கசப்பு நீங்கி விடும?”____ பாவக்காயை நீங்க இதுவரை சமைத்ததே இல்லையா!! புளி + காரம் + பாவக்காய் கசப்பு = சூப்பர் சுவை.புளி,காரம் எல்லாம் சேரும்போது பாவக்காயின் கசப்பு கொஞ்சம் குறைந்துதான் இருக்கும்.எதுக்கும் கொஞ்சமா செஞ்சு பாருங்க.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: