முளைகட்டிய பச்சைபயறு சுண்டல்

sundal

படத்திலுள்ள முளைகட்டிய பயறில் பாதியைத்தான் வேக வைத்தேன். எங்க வீட்டில் என்னைத் தவிர பச்சைபயறு சுண்டல் சாப்பிட ஆளில்லை. இரண்டு குட்டிக் கிண்ணங்களில் நிரப்பி வச்சிருக்கேன். முதலில் வரும் அதிர்ஷ்டசாலிக்கு ஒரு கிண்ணம் சுண்டல் வழ‌ங்கப்படும்.

நான் எப்போதும் முளைகட்டிய பச்சைபயறை அப்படியே சாப்பிட்டுவிடுவேன்.  இது எனக்கு ரொம்பவே பிடிக்கும். முதல் முறையாக காமாக்ஷிமாவின் முளைகட்டிய பச்சைபயறு சுண்டலை முயற்சித்திருக்கிறேன். நன்றாக இருந்தது. அதிலும் இட்லி தட்டில் வேக வைத்ததால் எந்த சத்துகளும் வீணாகாமல் இருப்பது பிடித்தது. முடிந்தால் நீங்களும் முயற்சிக்கலாமே!

அவர்கள் செய்த மாதிரியேதான் செய்தேன், ஆனால் தாளிப்பு மட்டும் செய்யவில்லை.

sundal

முழு பச்சைபயறை முதல் நாள் இரவு நன்றாகக் கழுவிவிட்டு,மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, நன்றாக ஊறியதும் அடுத்த நாள் இரவு ஒரு பௌளில், ஈரத்துணி அல்லது ஈர பேப்பர் டவலில் மூடி வைத்து, காலையில் பார்த்தால் எல்லா பயறும் முளைகட்டியிருக்கும். இதையே சுண்டலுக்கு பயன்படுத்திக்கொள்வோம்.

தேவையானவை:

முளைகட்டிய பச்சைபயறு _ ஒரு நபருக்கு ஒரு பிடி

உப்பு (நான் சேர்க்கவில்லை.விருப்பமானால் வேகவைக்கும்போது லேஸாக தூவிவிடவும்)

அலங்கரிக்க:

தேங்காய்ப் பூ
கேரட்
இஞ்சி துருவல்
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
கொத்துமல்லி
வறுத்த முந்திரி, வேக வைத்த கருப்பரிசி போன்று இன்னும் உங்களுக்கு விருப்பமானவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
காய்ந்தமிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

இட்லி அவிப்பதுபோலவே வேகவைக்க வேண்டும். இட்லி பாத்திரத்தை அடுப்பிலேற்றி, காய்ந்ததும் இட்லி தட்டை வைத்து, அதில் ஈரத்துணியைப் போட்டு, குழிகளில் பயறை நிரப்பி, மூடி வேக வைக்கவும். பயறு அதிகமாக இருந்தால் தட்டு முழுவதும் பரப்பி விடலாம்.

ஐந்தாறு நிமிடங்களிலேயே வெந்துவிட்டது.

sundalsundal

வெந்த பயறை எடுத்துகொட்டி, தாளித்து, அலங்கரிக்கக் கொடுத்துள்ளவைகளைச் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

விருப்பமானால் ஒன்றிரண்டு துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

 

சுண்டல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 18 Comments »

18 பதில்கள் to “முளைகட்டிய பச்சைபயறு சுண்டல்”

 1. திண்டுக்கல் தனபாலன் Says:

  1.
  உங்களின் செய்முறை படி செய்து பார்ப்போம்… நன்றி…

 2. Cheena ( சீனா ) Says:

  அன்பின் சித்ரா சுந்தர் – உடலுக்கு நல்லது – செய்முறை விளக்கத்திற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 3. இளமதி Says:

  அருமையான முளைப்பயறுச் சுண்டல் தோழி!…

  செய்து பார்க்கவில்லை ஒருபோதும். உங்கள் படங்கள் ஆவலைத் தூண்டுகிறது!..
  செய்துவிட்டு எப்படின்னு சொல்கிறேன்..:)

  மிக்க நன்றி நல்ல பகிர்வு!
  நவராத்திரி தின நல் வாழ்த்துக்கள் தோழி!

  • chitrasundar5 Says:

   நானும் இதுவரை செய்ததில்லை தோழி,இதுதான் முதல் முறை.எளிதான செய்முறைதானே,வீட்டிலுள்ளவர்களுக்கு செய்துகொடுங்கள்.

   உங்களுக்கும் நவராத்திரி தின வாழ்த்துகள் தோழி.(தோழி என்று சொல்வ‌தில் மிகுந்த மகிழ்ச்சி)

 4. ranjani135 Says:

  நல்ல கலர்புல் சுண்டல்!

 5. rajalakshmi Says:

  அருமையான சுவையான சுண்டல். சாப்பிட்டு விடத் தோன்றுகிறது.

 6. chollukireen Says:

  நான் இப்பொழுதுதான் பார்த்தேன். அழகாக களையாக,ருசியாக இருக்கிறது. காமாட்சிமா பேர்வேறெ இருக்கிரது. பகிர்வுக்கு மிக்க நன்றி. அன்புடன் வாழ்த்துகள்.

 7. Gnanaguru Says:

  miga arumai. En amma seithu kodupathu pola apdiye ulathu padathai parkum pothu..valakam pola ungal nadaiyil padika makilchiyaka ulathu..rendu kinam// 😛

  • chitrasundar5 Says:

   ஞானகுரு,

   நானும் காமாக்ஷிமா செய்ததைதான் அப்படியே செஞ்சிருக்கேன். rendu kinam/”_______தாராளமா எடுத்துக்கோங்க. ஒருத்தரும் கேக்கலையேன்னு நெனச்சிட்டிருந்தேன். நல்லவேளை (சாப்பிட) ஆள் வந்தாச்சு.

   நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததில் மகிழ்ச்சி.

   • Gnanaguru Says:

    Enga vitala sapida aal irunthalum enake perum pangu vanthu serum..yenendral enaku pidikum enbatharkaga 🙂
    vetil ulavargalai miratiyachum sapida vaichurunga 😛 romba healthyanathu la intha pachai pasipayaru 🙂

   • chitrasundar5 Says:

    “enake perum pangu vanthu serum”____பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரிகிறதே வீட்டிலுள்ளவர்களை மிரட்டி சாப்பிட்டிடுவீங்கன்னு.

    நான் இவங்களை மிரட்டி….இவங்கல்லாம் எனக்கு பயந்து……

 8. MahiArun Says:

  ரொம்ப லேட்டா வந்திருக்கேன்..டோன்ட் மைண்ட்! 😉

  ஹெல்த்தி சுண்டல்..கொஞ்சம் ஸாலட் போல இருக்கோ, தாளிக்காம விட்டதால? 🙂 அதுவும் நல்லதுதான்.

  • chitrasundar5 Says:

   சாலட் மாதிரிதான் மகி. எனக்கு மட்டும் செய்யும்போது ஏனோதானோ என செய்துவிடுவேன். தாளிக்க வேண்டாம் என முடிவெடுத்தபோது உங்களைத்தான் நினைத்துக்கொண்டேன்.

   “ரொம்ப லேட்டா வந்திருக்கேன்..டோன்ட் மைண்ட்”__________ நிறைய நாட்கள் நானும் இப்படித்தான்.விண்டர் வந்தால் எனக்கு இது இன்னும் கூடிவிடும்.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: