கரணைக்கிழங்கு புளிக்குழம்பு

pulikuzhambu

கீழே படத்தில் இருக்கும் கிழங்கைத்தான் நான் கரணைக்கிழங்கு மாதிரி என்று முன்பு ஒரு பதிவில் சொன்னேன். இது அந்தக்கிழங்கு இல்லைதான். இருந்தாலும் கரணைக்கிழங்கு வைத்து செய்யும் சமையலை இதை வைத்தே செய்துவிடுவேன். சாம்பார், பொரியல்கூட சூப்பராக வரும். நான் வாங்கியுள்ளது இருப்பதிலேயே சின்னக் கிழங்கு. மற்றதெல்லாம் பெரிசு பெரிசா இருக்கும்.

இதை வேகவைக்கும் முறையை ஏற்கனவே இங்கே சொல்லியுள்ளேன்.

IMG_1799IMG_0353

தேவையானவை:

கரணைக் கிழங்கு_ படத்தில் இருப்பதில் 1/3 பங்கு
புளி_பெரிய கோலியளவு
சின்ன வெங்காயம்_7
தக்காளி_1
முழு பூண்டு_1
மஞ்சள்தூள்
மிளகாய்த்தூள்_2 டேபிள்ஸ்பூன்
உப்பு_தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
வடகம்
காய்ந்தமிளகாய்
கடலைப்பருப்பு
சீரகம்
வெந்தயம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

புளியை அது மூழ்கும் அளவு தண்ணீரில் ஊறவைக்கவும்.

வேகவைத்துள்ள கரணைக்கிழங்கு ஆறியதும் விருப்பமான அளவில் நறுக்கிக்கொள்ள‌வும்.

பூண்டு உரித்துக்கொண்டு,வெங்காயம்,தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்.

குழம்பு வைக்கப்போகும் சட்டியை அடுப்பிலேற்றி நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துக்கொள்ளவும்.

தாளிப்பு முடிந்ததும் வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

இவை வதங்கியதும் புளியை இரண்டுமூன்று தரம் கரைத்து ஊற்றி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு உப்பு,காரம் சரிபார்த்து மூடி கொதிக்க விடவும்.

குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் கரணைக்கிழங்கு துண்டுகளை குழம்பில் சேர்த்துவிட்டு கரண்டியால் ஒரு கிண்டுகிண்டி விடவும்.

குழம்பு நன்றாகக் கொதித்து வாசனை வந்ததும் இறக்கிவிடலாம். இக்குழம்பு மற்ற புளிக்குழம்பு மாதிரி இல்லாமல் கொஞ்சம் கெட்டியாக இருக்கும். எனவே தண்ணீர் கொஞ்சம் கூடுதலாகக்கூட விடலாம்.

சாதத்துடன் இக்குழம்பு + அப்பளம், ம்ஹூம்….இக்குழம்பிலுள்ள காயையேத் தொட்டு சாப்பிட‌லாம்.

தயிர் சாதம், பழைய சாதத்துடன் சூப்பராக இருக்கும்.

குழம்பு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 16 Comments »

16 பதில்கள் to “கரணைக்கிழங்கு புளிக்குழம்பு”

 1. திண்டுக்கல் தனபாலன் Says:

  அட…! சூப்பர்… செய்து பார்த்து விடுவோம்… நன்றி அம்மா…

 2. rajisivam51 Says:

  இந்தப் பிடிகருனைக் புளிக் குழம்பில் இறக்கும்போது கொங்கே கொஞ்சம் வெல்லம் போட்டு இறக்குவேன். மிக சுவையாக இருக்கும். இந்தக் கிழங்கு உடம்பிற்கும் நல்லது என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

  • chitrasundar5 Says:

   இது பிடி கரணையா? நம்ம ஊர்ல குட்டிகுட்டியா இருக்கும். புளிகுழம்பு வைப்பாங்க. குழம்புல வெல்லம் சேர்த்தது கிடையாது. அடுத்த முறை செய்து பார்க்கிறேன். நல்லதுனு வேற சொல்லியிருக்கீங்க. இனி தொடர்ந்து வாங்க வேண்டியதுதான்.

 3. cheenakay Says:

  அன்பின் சித்ரா சுந்தர் – கருணைக் கிழங்கு புளிக்குழம்பு – செய்முறை விளக்கம் அருமை – வீட்டில் வழக்கமாய் வைப்பது தான் ( நான் வைப்பதல்ல ) – நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா

 4. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் Says:

  வணக்கம்
  அம்மா

  சிறப்பான செய்முறை என்னைப் போல சமைக்க தெரியாத சிலருக்கு.. நல்லவகையில் உதவும் அருமை வாழ்த்துக்கள்…அம்மா..

 5. இளமதி Says:

  வணக்கம் சகோதரி.. நலமா?

  நீண்ட இடைவெளி இங்கு எனக்கு ஆகிவிட்டது… மன்னியுங்கள்..:(
  நேரம் போதுவதில்லை. கடமையோடு காலம் பறக்கிறது. எங்கு போனேன் போகவில்லை என்றே தடுமாறிகிறேன் சமயத்தில்… எனக்காக ஒதுக்க இறைவன் இன்னும் 2 மணித்தியாலங்களை மேலாக தந்தால் மகிழ்வேன்…:) லேட்டா வந்ததுமில்லாம லெக்சர்ன்னு கோவிக்காதீங்க…:)))

  சரி.. விஷயத்துக்கு வாறேன். சூப்பர் குழம்பு. வாயூறுகிறது.
  கையரித்தாலும் கரணை கிழங்கென்றால் ஒரு கை பார்த்துவிடுவேன் நான்.

  படத்தில் காட்டினது என்ன கிழங்கு???. அங்கு பாருங்கள் என்றீர்கள் எனக்கு இன்னும் கொஞ்சம் புளி சேர்த்துத் தேய்த்தால்தான் பளிச்சென பல்ப் எரியும்..;)

  வாழ்த்துக்கள் சோதரியே!

  • chitrasundar5 Says:

   வாங்க இளமதி,

   மன்னிப்பெல்லாம் எதற்கு ! முதலில் கடமைதானே முக்கியம். நம் தேவை தேவைப்படும்போது அதை முடிப்பதுதானே மனதிற்கு நிம்மதி. இங்கே எப்போது வேண்டுமானாலும் வந்துகொள்ளலாம். மனதில் எதையும் நினைத்துக் குழம்ப வேண்டாம். நீங்க எவ்வளவு லெக்சர் வேண்டுமானாலும் அடிங்கோ, நான் கேட்கிறேன்.

   பதிவிலுள்ள ‘இங்கே’யை க்ளிக்குங்க. அங்கே பொரியல் செய்திருப்பேன். இல்லாட்டி இந்த சுட்டிக்குப் போய் பாருங்க. இந்தக்கிழங்கு கிடைத்தால் பயப்படாம வாங்குங்க. கை அரிப்பு எதுவும் இல்லை. ரொம்ப நல்லாருக்கு.

   செஞ்சி பாத்துட்டு சொல்லுங்க எப்படி இருந்ததுன்னு !1

 6. Dr.M.K.Muruganandan Says:

  நீங்கள் படைக்கிறீர்கள்
  நாங்கள் சாப்பிட என்றுமே தயாராகவே இருக்கிறோம்
  என்ன செய்வது இணையத்தில்தான் முடிகிறது.

  • chitrasundar5 Says:

   எங்கள் ஊரில் பொங்கலுக்கு இந்தக் குழம்புதான் வைப்பாங்க. பொங்கல் சாதத்திற்கும் இதற்கும் நல்ல பொருத்தமாக இருக்கும்.

   நம்ம ஊரில் கரணைக்கிழங்கு எளிதாகக் கிடைக்கும் பொருள்தானே ! வாங்கி சமைக்கச் சொல்லி சாப்பிட்டு விடுங்கள். வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றி ஐயா.

 7. Dr.M.K.Muruganandan Says:

  கரணைக் கிழங்கு மிகவும் பிடிக்கும்
  நல்ல செய்முறை
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • chitrasundar5 Says:

   வாருங்கள் ஐயா,

   நீண்ட நாட்களாகிவிட்டது இந்தப் பக்கம் வந்து. ஏற்கனவே உங்களுடைய ஒரு பின்னூட்டம் உள்ளதைப் பார்த்து பதிலளிக்க முனைந்தபோது புது பின்னூட்டமும் வந்து சேர்ந்துகொண்டது.

   உங்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள்.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: