எங்க வீட்டில் ( அம்மா வீடு & இங்கும்) சாதாரண இட்லித்தூளைவிட இந்தத் தூளுக்குத்தான் ஏகக் கிராக்கி. செய்வதும் எளிது. அவசரத்துக்கும் கை கொடுக்கும்.
தேவையானவை:
சாம்பார் மிளகாய்த்தூள் _ கொஞ்சம்
முழு பூண்டு _ 1
உப்பு _ சுவைக்கு
செய்முறை:
தோலை உரிக்காமல் பூண்டிதழ்களை பிரித்தெடுத்து வைக்கவும்.
பிறகு மிளகாய்த்தூள் & பூண்டு & உப்பு மூன்றையும் அம்மியில் வைத்து நுணுக்கி அல்லது தட்டிக் கொள்ளவும்.
கண்டிப்பாக அரைக்கக்கூடாது. மிக்ஸியிலும் போடக் கூடாது. இட்லி, தோசை, ஊத்தப்பம் என எல்லாவற்றிற்கும் சூப்பரா இருக்கும்.
ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டால் ஒரு வாரத்திற்கும் மேல் இருக்கும். அதற்குமேலும் வைத்தாலும் dry யாக இருக்குமே தவிர கெட்டுப்போகாது. நான் ஒரு நாளைக்குத் தேவையானதை மட்டுமே செய்வேன்.
காருமோ என பயம் வேண்டாம். தேன் மாதிரி (!) இருக்கும். சாப்பிடப்போகும் ஒவ்வொரு இட்லி துண்டிலும் மிளகாய்த்தூளுடன் சிறிது பூண்டும் இருக்கிற மாதிரி சாப்பிட சுவை அலாதியாக இருக்கும்.
நல்லெண்ணெய் போட்டுக்கலந்தும் சாப்பிடுவார்கள். எனக்கு அப்படியே சாப்பிடத்தான் பிடிக்கும். செய்து பார்த்து உங்களுக்கும் பிடித்ததா என வந்து சொல்லுங்கள்.
5:24 பிப இல் ஜனவரி 22, 2014
அன்பின் சித்ரா சுந்தர் – செஞ்சு பாக்கச் சொல்றேன் – சாப்பிட்டுப் பாக்கலாம் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
5:37 பிப இல் ஜனவரி 22, 2014
சீனா ஐயா,
செய்து கொடுக்கச்சொல்லி சாப்பிட்டுப் பாருங்கள். நன்றாக இருக்கும். உடனடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
8:50 பிப இல் ஜனவரி 22, 2014
வீட்டில் குறித்துக் கொண்டார்கள்… நன்றி அம்மா…
4:33 பிப இல் ஜனவரி 23, 2014
செய்முறையைக் குறித்துக்கொண்டதற்கு நன்றிங்க தனபாலன்.
8:57 பிப இல் ஜனவரி 22, 2014
வணக்கம் சித்ரா அக்கா,
முதலில் சாம்பார் மிளகாய் தூள் என்றால் என்ன தெளிவு படுத்துங்கள்! சாம்பார் பொடி கிடையாது தானே?
4:39 பிப இல் ஜனவரி 23, 2014
மஹா,
சாம்பாருக்குப் போடும் சாம்பார் பொடியேதான். நாங்க சாம்பார் பொடியைத்தான் மிளகாய்த்தூள் என்போம். இந்தக்காரம் எல்லாம் ஆந்திராவுல இருக்கும் உங்களுக்கு தூசு மாதிரி, இல்ல !!
8:41 பிப இல் ஜனவரி 23, 2014
ஐயோ இல்லவே இல்லை சித்ரா அக்கா.. இந்த ஊர் காரம் எல்லாம் இன்னும் வாய்க்கு செட் ஆகவில்லை! ஹோட்டலுக்கு போன ஒவ்வொரு தடவையும் கண்ணீரும், கம்பலையுமாகத்தான் வெளியே வருகிறேன் 🙂
8:10 முப இல் ஜனவரி 25, 2014
எனக்கும் ஒரு அனுபவம் உண்டு மஹா. ஒருதடவ ஆந்திரா தோழி, நல்லா இருக்கற அவல எண்ணெயில போட்டு பொரிச்சு, அதுக்கு சமமா பச்சை மிளகாயையும் பொடியா நறுக்கி பொரித்து அவலுடன் கலந்து ஒரு பச்சை நிற மிக்ஸர் செஞ்சு குடுத்தாங்க பாருங்க. இப்போ நெனச்சாலும் நிக்காம இருமல் வந்திடும். மறக்கவே முடியாது.
9:45 பிப இல் ஜனவரி 25, 2014
ஹா ஹா ஹா..
12:04 முப இல் ஜனவரி 23, 2014
பூண்டு சத்தும்,உப்பும், ஸாம்பார் பொடியுடன் ஸங்கமித்து விடுகிறது. அதுவே,உலர்பொடியாகவும்,ருசியானதாகவும் ஆகி விடுகிரது.. ஸரியா? பாஸ் மார்க் கிடைத்தாலும் ஸரி. ஸத்து உறிஞ்சப் படுகிரது. அன்புடன்
4:42 பிப இல் ஜனவரி 23, 2014
காமாக்ஷிமா,
சரியாச் சொன்னீங்கமா. பூண்டுடன் சாம்பார் பொடி சேர்ந்து சுவையோ சுவைதான். நீங்களும் சாப்பிட்டிருப்பீங்கன்னு நெனச்சேன். அன்புடன் சித்ரா.
5:51 முப இல் ஜனவரி 23, 2014
எனக்கு சூடான இட்லியுடன் பூண்டு சட்னி வைத்து சாப்பிட மிகவும் பிடிக்கும்… ஆனா என்னோட கம்பெனிக்கு தான் யாரும் இல்லை…. அதனால் செய்வதில்லை….:)) இந்த சாம்பார்பொடி, பூண்டுடன் வித்தியாசமாக இருக்கே… அவ்வப்போது எனக்கு மட்டும் செய்து கொண்டு சாப்பிடுகிறேன்…:) நன்றிங்க..
4:50 பிப இல் ஜனவரி 23, 2014
பூண்டு சட்னியோட ரெஸிபி எங்க இருக்குன்னு சொல்லுங்க. அப்படியே சாப்பிடும் நேரத்தையும் சொல்லிடுங்க. ஒன்…டூ…த்ரீ என்றதும் அங்கங்கே மனதளவில் எல்லாருமா சேர்ந்து காரசாரமா சாப்டலாம்.
பூண்டும் மிளகாய்த்தூளும் சேர்ந்து சூப்பரா இருக்கும். காரம் விரும்பிகளுக்கு ரொம்பவே பிடிக்கும். கொஞ்சமா செய்து சாப்பிட்டுப் பாருங்க.
8:55 பிப இல் ஜனவரி 23, 2014
ஆஹா! அலாதியான சுவை… இன்று தோசைக்கு இதை தான் செய்து சாப்பிட்டேன்… நல்லெண்ணெயோடு…எளிமையானது…..
ரோஷ்ணி தோசை மிளகாய்ப் பொடியோடு மட்டும் தான் சாப்பிடுவாள்… சட்னி, சாம்பாரெல்லாம் மூச்… அதனால நானும் அவளோடு தினமும் பொடி தான்…ரொம்ப நாட்களுக்கு பிறகு நாவுக்கு ஒரு புது சுவை கிடைத்தது…. நன்றிங்க…
இனி பூண்டு சட்னி இரண்டாம் பட்சம் தான்….:))) நீங்களும் மனதளவில் என்னோட சாபிட்டதற்கு நன்றி…:))
8:18 முப இல் ஜனவரி 25, 2014
ஆஹா ! இது உங்களுக்கு பிடித்ததில் மஹா சந்தோஷம். சாப்பிட்டுப் பார்த்து வந்து சொன்னதில் மகிழ்ச்சிங்க.
பாப்பாவுக்கு முன்னால நீங்க சட்னி, சாம்பார் எல்லாம் வைத்து சாப்பிட்டு ‘ஆஹா’ சொல்லுங்க. அட்லீஸ்ட் பல நாட்களுக்குப் பிறகாவது ‘ஒருவாய்’னு கேப்பாங்க. அப்புறம் கொஞ்சம்கொஞ்சமா வழிக்கு வந்திடுவாங்க.
7:10 முப இல் ஏப்ரல் 18, 2014
வித்தியாசமா இருக்கும் போல செய்து பார்த்திடறேன்
4:18 பிப இல் ஏப்ரல் 28, 2014
நினைத்தவுடன் செய்து விடலாம், செய்து பாருங்க எழில்.