என்னதான் தயிர், மோர் என கடையில் வாங்கினாலும் நாமே வீட்டில் தயாரிக்கும் தயிர்போல வராது. கூழ், பழைய சாதம் இவற்றில் சேர்த்து சாப்பிடும்போது ……… ஆஹா …… இன்னும் சுவை கூடுதலாக இருக்கும் ! குடிக்க நீர் மோர், தாளித்த மோர் , மோர்க் குழம்பு என கலக்கிடலாம். அடிக்கிற வெயிலுக்கும் இதமாக இருக்கும்.
தேவையானவை:
பால்
உறை
செய்முறை:
பாலை (ஹோல் மில்க் அல்லது 2% மில்க் எதுவாக இருந்தாலும்) நன்றாகக் கொதிக்கவிட்டு காய்ச்சி மிதமான சூடு வரும்வரை ஆறவைத்து உறையை ஊற்றி அல்லது உறை உள்ள கிண்ணத்தில் காய்ச்சிய பாலை ஊற்றி நன்றாகக் கலக்கி மூடி கதகதப்பான இடத்தில் வைக்கவும்.
இரவு வைத்து காலையில் பார்க்கும்போது பால், தயிராகி கெட்டியாக இருக்க வேண்டும்.
நம் ஊராக இருந்தால் காலையில் உறை ஊற்றி வைத்தால் மதியமே பால், தயிராகி சாப்பாட்டுக்குத் தயாராக இருக்கும்.
கீழே எங்க வீட்டுப் பால் தயிரானதைப் பார்ப்போமே !!
அடுப்பில் பால் காய்ந்து ஆறிக்கொண்டிருக்கிறது. தேவையான உறையை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துள்ளேன்.
மிதமான சூட்டில் உள்ள பாலை எடுத்து உறையுள்ள கிண்ணத்தில் ஊற்றி நன்றாகக் கலக்கி விட்டு நன்கு இறுக மூடி கதகதப்பான இடத்தில் வைக்கப் போகிறேன். நம் ஊராக இருந்தால் உறையை விட்டுவிட்டாலே போதும், கலக்கிவிட வேண்டிய அவசியமிருக்காது.
காலையில் கிண்ணத்தை எடுத்துத் ……….
திறந்து பார்த்தால் ……. வாவ் …… தயிர் தயாராயிடுச்சு.
பிறகென்ன ….. மதியம் சாதத்தில் போட்டு சாப்பிட வேண்டியதுதான் !
6:33 பிப இல் ஏப்ரல் 13, 2014
நன்றி அம்மா…
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…
10:07 பிப இல் ஏப்ரல் 13, 2014
தனபாலன்,
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
6:33 பிப இல் ஏப்ரல் 13, 2014
அன்பின் சித்ரா சுந்தர் – தயிர் – செய்முறை நன்று – அப்படியே தயிரை எடுத்து சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது – நன்று நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
10:08 பிப இல் ஏப்ரல் 13, 2014
சீனா ஐயா,
தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
5:25 முப இல் ஏப்ரல் 14, 2014
தயிர் அழகாக உறைந்திருக்கு. வீட்டுத் தயிருக்கு நிகரே வேறெதுவும் இல்லை. சென்னை வெயிலுக்கு
ஆஹா நல்ல தயிர். அன்புடன்
4:29 பிப இல் ஏப்ரல் 15, 2014
காமாக்ஷிமா,
சென்னைக்கு விஜயமா ! ஆமாம் அம்மா, வெயிலுக்கும், மோர் குழம்பிற்குமாக தயிர் தயாராகிவிட்டது.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! அன்புடன் சித்ரா.
7:16 முப இல் ஏப்ரல் 14, 2014
இந்தப் புத்தாண்டை தயிருடன் கொண்டாடினீர்களா? 🙂
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
4:31 பிப இல் ஏப்ரல் 15, 2014
வெயிலுக்கு தயிருடன் கொண்டாடியிருக்கலாமோ !!
உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! அன்புடன் சித்ரா.
10:53 முப இல் ஏப்ரல் 14, 2014
உங்கள் தயிர் புராணமும் நன்றாகவே இருக்கிறது.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்ரா.
4:33 பிப இல் ஏப்ரல் 15, 2014
தயிருடன் சேர்த்து தயிர் புராணத்தையும் சுவைத்திருக்கிறீர்கள் !
உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! அன்புடன் சித்ரா.
9:50 பிப இல் மே 9, 2014
🙂 நானும் ஒரு காலத்தில் தயிரை உறை ஊற்றி அதப்பத்தி ப்ளாகில பதிவும் போட்டு கமெண்ட் கதகளி நடத்தினோம்..ஹ்ம்ம்ம்!! அது ஒரு காலம்! அன்று இருந்த ஆட்கள் பலரும் இன்று வலை உலகிலிருந்து மறைந்து போயிட்டாங்க!
இப்பலாம் இண்டியன் ஸ்டோர்ல கிடைக்கும் தயிரும் மோருமே போதும் என்று செட்டில் ஆகிட்டோம். பை த வே, நீங்க இண்டியன் ஸ்டோர் பட்டர்மில்க் வாங்கிருக்கீங்கதானே? சும்மா சூஊஊஊஊப்ப்ப்பர் மோர்! நம்ம வீட்டில போடும் மோரை விடவுமே அருமையா இருக்கும். எங்க மாமா-அத்தைக்கு இந்த மோர் ரொம்பப் பிடிச்சுப்போச்சுன்னா பாத்துக்குங்க! :)))
9:30 பிப இல் மே 10, 2014
நீங்க சொல்வது ‘யோகர்ட் ட்ரிங்க்’தானே. நாங்களும் அதுதான் வாங்குறோம். உப்புடன் வெயிலுக்கு சூப்பர். சில சமயங்களில் பால் எக்ஸ்பயரி டேட் வரும்போது தயிராக்கிடுவேன்.
அந்தப் பதிவுல இப்போ உள்ளவங்க யாராவது இருக்காங்களானு உங்க ப்ளாக்ல தயிரைத் தேடி டயர்டாகிட்டேன். ‘லேபிள்ஸ்’ல எதைக் ‘க்ளிக்’ பண்ணாலும் முதல் பக்கத்தில் வரும் பதிவுகளை மட்டுமே பார்க்க முடிகிறது. பதிவின் கீழ் இந்த ‘ஓல்டர் போஸ்ட்’னு ஒன்னு இருக்குமே அதைக் காணோமே. இது எனக்கு மட்டும்தானா !
2:00 முப இல் பிப்ரவரி 14, 2015
தயிர் அழகாக உறைந்திருக்கு. வீட்டுத் தயிருக்கு நிகரே வேறெதுவும் இல்லை. சென்னை வெயிலுக்கு
ஆஹா நல்ல தயிர். அன்புடன் – I LOVE தயிர் —–Arunkumar
4:29 பிப இல் பிப்ரவரி 16, 2015
அருண்,
வீட்டுத் தயிருக்கு நிகரேது ! அதன் சுவையே தனிதான்.
உங்களின் முதல் வருகையில் மகிழ்ச்சி.
12:35 முப இல் பிப்ரவரி 23, 2015
அன்பின் சித்ரா சுந்தர் – தயிர் – செய்முறை நன்று – அப்படியே தயிரை எடுத்து சாப்பிட வேண்டும் போல் இருக்கிறது – Arunkumar