விருது பெற்ற மகிழ்ச்சியில் ….

ரஞ்சனியின் விருதிற்கு நன்றி

நாம் எத்தனைப் பெரியவர்களானாலும் நமக்கும் விருது, பரிசு கிடைக்கிறது எனும்போது வரும் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அப்படித்தான் சமீபத்தில் இரண்டு ஜாம்பவான்களிடமிருந்து எனது இரண்டு வலைப்பூவுக்கும் விருதுகள் பெற்றது சந்தோஷமாக உள்ளது. இரண்டு பேருமே பின்னூட்டங்கள் வாயிலாக உற்சாகத்தைக் கொடுப்பவர்கள். இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !!

விருது பெற்றதை முதலில் நம்ப முடியாமல்தான் திகைத்தேன். பிறகு “நமது வலைப்பூவிலும் ஏதோ ஒன்று இருக்கப்போய்தானே கொடுத்தார்கள்” என எனக்கு நானே சமாதானமானேன்.

1) ஒருவர் சொல்லுகிறேன் காமாக்ஷி அம்மா அவர்கள் ____ என்னுடைய சமையல் வலைப்பூவுக்காகக் கொடுத்தார்.

2) மற்றொருவர் அரட்டை இராஜலஷ்மி அவர்கள் _____ என்னுடைய பொழுதுபோக்கிற்காகக் கொடுத்தார்.

விருதுதான் கிடைத்துவிட்டதே, யாரையும் தொட விடாமல் அப்படியே அள்ளிக்கொண்டுபோய் வீட்ல பத்திரப்படுத்திக்கலாம் என விரைந்தால், விருதினை 5 நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளச் சொல்லி நிபந்தனை விதித்துவிட்டனர்.

பல நட்புகள் இருக்கும்போது ஐவரை மட்டும் எப்படித் தெரிவு செய்வது என குழம்பி, எல்லா வலைப்பூவுக்கும் ஓடினேன். ஆனால் எல்லோரும் ஏற்கனவே, எனக்கு முன்னமே பெற்றுக்கொண்டுவிட்டனர் என்பதால், இவ்வலைபூவுக்கு வருகை தரும் வலையுலக நட்புகள் அனைவருக்கும் இவ்விருதினை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தளிக்கிறேன்.

மீண்டும் இருவருக்கும் நன்றி பல !!

Uncategorized இல் பதிவிடப்பட்டது . 5 Comments »

5 பதில்கள் to “விருது பெற்ற மகிழ்ச்சியில் ….”

 1. ranjani135 Says:

  இரண்டு வலைபூக்களுக்கும் இரட்டை விருது பெற்றதற்கு இரட்டை வாழ்த்துக்கள். இதேபோல பல இரட்டை விருதுகள் வர வாழ்த்துகள்!

 2. rajisivam Says:

  விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் சித்ரா. மேலும் பல விருதுகள் உங்களை வந்து சேரவும் வாழ்த்துகிறேன்.

 3. chollukireen Says:

  அவார்டுகள் வந்து குவியட்டும். ஆசிகளும்,வாழ்த்துகளும்.. அன்புடன்

 4. நூருல் ஹைன் Says:

  Very nice recipes

 5. chitrasundar5 Says:

  வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட ரஞ்சனி, ராஜலக்ஷ்மி, காமாக்ஷிமா, நூருல் ஹைன் உங்கள் அனைவருக்கும் சித்ராவின் நன்றிகள் பல.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: