ப்ரோக்கலி , உருளை & வேர்க்கடலை பொரியல்

20150120_124052

ப்ரோக்கலி என்றாலே சிலருக்கு சாப்பிடப் பிடிக்காது. அதனால் அதனுடன் இதுமாதிரி உருளை, கடலை போன்றவற்றை சேர்த்து சமைத்தால் சாப்பிடாதவர்களும் சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்

தேவையானவை:

ப்ரோக்கலி _ 1
சிறிய உருளைக்கிழங்கு _ 1
அவித்த வேர்க்கடலை _ ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள்
மிளகாய்த்தூள்
பூண்டுப்பல் _ மூன்றுநான்கு
தேங்காய்ப் பூ
கொத்துமல்லி தழை
உப்பு _ தேவைக்கு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து
சீரகம்
பெருஞ்சீரகம்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல்நீக்கியோ அல்லது அப்படியேவோ சிறு துண்டுகளாக்கிக்கொள்ளவும்.

அவித்த வேர்க்கடலையைத் தயாராக வைத்துக்கொள்ளவும்.

ப்ரோக்கலியை நன்றாகக் கழுவிவிட்டு சிறுசிறு பூக்களாகப் பிரித்துக்கொள்ளவும்.

பூண்டுப்பல்லை தட்டிக்கொள்ளவும்.

இவை எல்லாம் தயாரானவுடன், அடுப்பில் வாணலை ஏற்றித் தாளித்துவிட்டு, தட்டி வைத்துள்ள பூண்டு போட்டு வதக்கிகொண்டு ப்ரோக்கலி, உருளை, வேர்க்கடலை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து சிறிது வதக்கிவிட்டு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீரை தெளித்தாற்போல் விட்டு மூடி வேகவிட‌வும்.

உருளையும், வேர்க்கடலையும் ஏற்கனவே வெந்திருப்பதாலும், ப்ரோக்கலி சூடு பட்டாலே வெந்துவிடும் என்பதாலும் தண்ணீர் அதிகம் தேவையிராது.

தண்ணீர் சுண்டி மிளகாய்த்தூள் வாசனை போனதும் தேங்காய்ப்பூ & கொத்துமல்லி தழை சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.

6 பதில்கள் to “ப்ரோக்கலி , உருளை & வேர்க்கடலை பொரியல்”

  1. priya Says:

    எனக்கும் ப்ரோக்கலி வாங்கினால் ஓவனுக்குள் வைத்து செய்யும் (ஜேர்மன் ரெசிபி) முறைதான் தெரியும். இல்லையேல் பொரியலாக செய்வேன். வித்தியாசமான குறிப்பு. இதை செய்து பார்த்து விட்டுச்சொல்கிறேன் சித்ரா. நன்றி.

    • chitrasundar5 Says:

      ப்ரியசகி,

      இப்படி ஏதாச்சும் பண்ணினாதான் வீட்டில் சாப்பிடுறாங்க. எனக்கு ப்ரோக்கலியை எப்படி செய்தாலும் பிடிக்கும். சமயங்களில் பஜ்ஜிகூட செய்வேன்.

      நேரமிருந்துச்சுன்னா உங்க ஜெர்மன் ரெசிபிய போடுங்க. அவனில் செய்யும்போது சூப்பரா இருக்குமே.

  2. MahiArun Says:

    அவிச்ச கடலைக்கு எங்ஙன போக? அவ்வ்வ்வ்!!! வித்யாசமா இருக்கு சித்ராக்கா! ப்ரோக்கலி வெங்காயம் சேர்க்காம நான் சமைச்சதே இல்லை.

    • chitrasundar5 Says:

      “அவிச்ச கடலைக்கு எங்ஙன போக?” _____ அம்மாவும், பொண்ணுமா சேர்ந்து ஜாலியா அரட்டை அடிச்சிகிட்டு, எலன் ஷோவ அதிலும் கிட்ட போய் ரசிச்சுகிட்டு, கடலையைக்கூட அவிச்சு குடுக்காம ….. ?

      எங்க பாப்புகூட இப்போ சாப்பிட ஆரம்பிச்சிட்டாளாம் மகி. இது இவருக்காக‌த்தான். ப்ரோக்கலி, காலிஃப்ளவர் எல்லாமே இப்படித்தான்.

      இருக்கும் இன்னொரு பூவில் வெங்காயம் சேர்த்துட்டாப் போச்சு.

  3. chollukireen Says:

    நன்றாக இருக்கிறது. உருளைக்கிழங்கு,வேர்க்கடலை. எல்லாமாக ப்ரோக்கலியை இன்னும் உயரத்தில் தூக்கிக் கொண்டு போய்விடுகிறது. அன்புடன்

    • chitrasundar5 Says:

      ஆமாம்மா, இவருக்கு ப்ரோக்கலி என்றாலே பிடிப்பதில்லை. இதுமாதிரி செய்துவிட்டால் அவற்றுடன் சேர்ந்து இதுவும் உள்ளே போய்விடும். அன்புடன் சித்ரா.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: