மீதமான பேகேட்(Baguette) ப்ரெட் ரஸ்க்

20150121_132512

ரிஸ்க் இல்லாமல் ரஸ்க் சாப்பிடுவது எப்படி?

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியும், செய்வது எப்படி ? ” என்றுதானே கேட்கிறீர்கள்.

பூண்டின் மணத்துடனும், ஆலிவ் ஆயிலின் சுவையுடனும் ரஸ்க் செய்வது எப்படின்னு பார்க்கலாம்.

உழவர் சந்தைக்குப் போனால் இந்த Sweet Baguette ப்ரெட் இல்லாமல் வரமாட்டேன். நீளநீளமாக இருக்கும். சென்ற வாரம்வரை $ 1.95 ஆக இருந்த இதன் விலை சற்றே விலையேற்றம் அடைந்து இப்போது $ 2.00 ஆகிவிட்டது.  ஸ்ஸ் …. அப்பா, இனி சில்லறையைத் தேடி எடுக்க வேண்டாம்.

IMG_1327

முன்பொரு சமயம் வாங்கியது. Sandwich ற்காக நறுக்கி வச்சிருக்கிறேன்.

இதனை முதல்நாள் சாப்பிட மேலே மொறுமொறுப்பாகவும், உள்ளே சாஃப்டாகவும் அவ்வளவு சுவையாக இருக்கும். மீதமானால் அடுத்த நாள் கொஞ்சம் கடினமாக இருக்கும். கடினமாக இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கும்.

ஒருநாள் ‘டிவி’யில் பப்ளிக் சானலில் இதுமாதிரி மீதமானதை எல்லாம் வில்லைகளாக்கி பூண்டு & ஆலிவ் ஆயில் தடவி ப்ரீ ஹீட் செய்த ஓவனில் 5 நிமி வைத்து எடுத்து சுவைத்தனர். அதிலிருந்து நானும் மீதமானால், சிலசமயம் ஓவனிலும், பல சமயம் இப்படியும் செய்வேன். விருப்பமானால் நீங்களும் செய்து பாருங்க.

தேவையானவை:

மீதமான Sweet/sour Baguette
ஆலிவ் எண்ணெய் _ சிறிது
பூண்டுப்பல் _ 1

செய்முறை:

ப்ரெட்டை படத்திலுள்ளவாறு வில்லைகளாக்கவும். வில்லைகள் இன்னும்கூட மெல்லியதாக இருக்கலாம்.

20150121_130333

பூண்டுப்பல்லை இரண்டாக நறுக்கிக்க்கொண்டு ஒவ்வொரு வில்லையின் மேலும் தேய்க்கவும்.

இவ்வாறே எல்லா வில்லைகளிலும் தேய்த்த பிறகு, ஆலிவ் ஆயிலை விரலால் தொட்டு வில்லைகளின்மேல் இரண்டு பக்கமும் தட‌வி விடவும்.

பிறகு ஒரு pan ஐ அடுப்பிலேற்றி சூடானதும் வில்லைகளை அது கொண்டமட்டும் தனித்தனியாக வைத்து ஒரு பக்கம் சிவந்ததும் மறுபக்கம் திருப்பிவிட்டு சிவ‌ந்ததும் எடுத்துவிடவும்.

இப்போது சுவையான கார்லிக் வாசனையுடனான‌ ரஸ்க் தயார். டீ நேரத்திற்கு கைகொடுக்கும்.

சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . 8 Comments »

8 பதில்கள் to “மீதமான பேகேட்(Baguette) ப்ரெட் ரஸ்க்”

 1. priyasaki Says:

  இது நாங்களும் வாங்குவது. இதில் ப்ரீஸரில் வைத்திருந்து, பின்னர் ஓவனில் வைத்து சாப்பிடுவதும் இங்கு இருக்கு. அது விதவிதமான சுவையுடன்(கார்லிக்,ஸ்பினாச்) இருக்கும். நீங்க குறிப்பிட்டது சுப்பர் மார்கெட்டில் கிடைக்கும். வீகெண்ட் வாங்குவோம். இட்லி மிளகாய்பொடி போட்டும் சாப்பிடுவோம். இனி மிகுதியா இருந்தா இப்படிசெய்யலாம். நல்ல பகிர்வு சித்ரா.

  • chitrasundar5 Says:

   ஆமாம் ப்ரியசகி, இங்கும் எல்ல சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும். வாங்கினால் நான் மட்டுமே சாப்பிட வேண்டும். அதனால் நிறைய வாங்குவதில்லை. இட்லி மிளகாய்ப் பொடியுடன் ….. இது நல்லாருக்கே. இதுமாதிரி டிப்ஸ் இருந்தா உங்க ப்ளாக்ல நிறைய போடுங்க.

 2. RajalakshmiParamasivam. Says:

  இது புது விதமான சமையலாக இருக்கிறதே. இசக்கி அப்படியே சாப்பிட்டுத் தான் எனக்குப் பழக்கம். இல்லை கட்லேட்டிற்குத் தூவுவோம். பார்க்கும் போது சாப்பிடத் தோன்றுகிறது சித்ரா.

  • chitrasundar5 Says:

   பொண்ணு வீட்ல இருந்தா ரெண்டு பேருமா சேர்ந்து காலி பண்ணுவோம். இப்போ நான் மட்டுமே என்பதால் மீதமாகிவிடுகிறது. இந்த ஆட்டத்திலே எல்லாம் இவர் கலந்துக்கமாட்டார்.

   ஈஸியாதானே இருக்கு செஞ்சு, சாப்ட்டு பாருங்க.

 3. Gnanaguru Says:

  நல்லாருக்கே…எனக்கும் சேத்து சாப்பிடுங்க..:P

 4. chollukireen Says:

  உன் குறிப்பு பார்த்து ஜெனிவா ஞாபகம் வந்தது. அங்கு பூண்டை நன்றாகத் தட்டி ஆலிவ் ஆயில் சேர்த்துத் தடவி ப்ரி ஹீட் செய்த அவனில் வைத்து, ஸூப்புடன் கூட டின்னரே ஆகிவிடும். ருசியை ஞாபகப்படுத்தி விட்டாய். நல்லது. சாப்பிட்ட த்ருப்தி ஏற்பட்டு விட்டது. அன்புடன்

  • chitrasundar5 Says:

   காமாக்ஷிமா,

   ரொம்பவேஏஏ லேட். ஆயில் தடவி, பிறகு பூண்டு தேய்த்து, அதற்கு பதிலாக நீங்கள் சொல்லும் ஐடியாவும் நல்லாருக்கே. நானுமே ஜெனிவாவில் காமாக்ஷிமாவுடன் சூப் சாப்பிட்ட திருப்தியுடன், அன்புடன் சித்ரா.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: