எங்க வீட்டுத் தோட்டத்தில் முருங்கைக்கீரை மரம் எப்போதும் தளதளன்னு சூப்பரா இருக்கும். என்றாவது ஒருநாள் எங்கம்மா முருங்கைக்கீரையில் இந்த தண்ணி சாறு வைப்பாங்க. சுவை சொல்லிமாளாது.
சாதத்துடன் ரசம் மாதிரி சேர்த்து சாப்பிட சூப்பரா இருக்கும். இதிலுள்ள கீரை முதலானவற்றை வடித்துவிட்டு சூப் மாதிரி குடிக்கவும் நன்றாக இருக்கும்.
தேவையானவை:
முருங்கைக்கீரை _ ஒரு கிண்ணம்
சின்னவெங்காயம் _ 1 (ரொம்ப சின்னதா இருந்துச்சுன்னா மூன்றுநான்கு போட்டுக்கொள்ளலாம்)
பூண்டுப்பல் _ ஐந்தாறு . நன்றாகத் தட்டிக்கொள்ளவும்.
நன்கு பழுத்த தக்காளி _ 1
மஞ்சள் தூள் _ துளி
சாம்பார்தூள் _ துளி. மஞ்சள்தூளும், சாம்பார்தூளும் நிறத்திற்காகத்தான்
தேங்காய்ப்பூ(விருப்பமானால்) _ சிறிது
கொத்துமல்லி தழை _ கொஞ்சம்
உப்பு _ தேவைக்கு
தாளிப்புக்கு :
நல்லெண்ணெய்
மிளகு
சீரகம்
காய்ந்தமிளகாய்
பெருங்காயம்
செய்முறை :
கீரையைக் கழுவி நீரை வடிய விடவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
இங்குள்ள ஒரு சமையல் ஷோவில், “தோலுடன் பூண்டுப்பல்லைத் தட்டிப் போட்டால்தான் முழு ஃப்ளேவர் கிடைக்கும்” என்றதால், அன்றிலிருந்து இன்றுவரை ‘ரொம்ம்ம்ப நல்லதாப் போச்சுன்னு எல்லா சமையலுக்குமே தோலுடனே அப்படியே தட்டிப் போட்டுவிடுவது.
ஒரு சட்டியை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகத்தைப் பொரியவிடவும். அப்போதுதான் மிளகின் காரம் சூப்பில் இறங்கும்.
அடுத்து காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு பூண்டு சேர்த்து பூண்டின் வாசம் வரும்வரை நன்றாக வதக்கவும்.
அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இவை வதங்கியதும் கீரை சேர்த்து துவள வதக்கிவிட்டு இரண்டுமூன்று கிண்ணம் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். இப்போது மஞ்சள்தூள, சாம்பார்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
இரண்டு கொதி வந்த பிறகு தேங்காய்ப்பூ, கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.
இனி சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதோ அல்லது சூப் மாதிரி குடிப்பதோ, உங்கள் விருப்பம்.
8:59 பிப இல் பிப்ரவரி 16, 2015
முருங்கைக்கீரை பார்க்க நன்றாக இருக்கு,ஆசையாகவும் இருக்கு. கிடைப்பது கஷ்டம். கிடைத்தால் கண்டிப்பா செய்துபார்க்கிறேன் சித்ரா. கிடைக்குதா உங்களுக்கு.?
-thanks-
9:11 பிப இல் பிப்ரவரி 16, 2015
ப்ரியசகி,
ஓ, உங்களுக்குக் கிடைக்காதா ! ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கும். இங்கும் முன்பெல்லாம் எப்போதாவது ஒருமுறைதான் ஃப்ரெஷ்ஷா கிடைக்கும். இப்போல்லாம் வாரம்தோறும் புது கீரையா வாங்கி வருகிறேன்.
கோடையில் உழவர் சந்தையில் அதுவும் 8:30 மணிக்கே போனால்தான் கிடைக்கும். உழவர் சந்தை திறப்பதென்னவோ 9:00 மணிதான். மேலே உழவர் சந்தையில் வாங்கிய கீரைப்படம் போட்டிருக்கேன், பாருங்க ப்ரியசகி.
11:31 பிப இல் பிப்ரவரி 16, 2015
கொடுத்துவைத்தங்க நீங்க. எஞ்ஜாய் சித்ரா!
தாங்க்ஸ்
11:28 முப இல் பிப்ரவரி 17, 2015
ஆமாம் ப்ரியசகி,
இங்கு ஏஷியன் அதிகம், அதனால்தான். எல்லாப் பொருள்களும் கிடைக்கலைன்னாலும் ஓரளவுக்குப் பரவாயில்லை. தென்அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளில் moringa என்ற பெயரில் எக்கச்சக்க விளைச்சல். அது ஏனோ இங்கு இல்லை. நன்றி ப்ரியசகி.
9:10 பிப இல் பிப்ரவரி 16, 2015
super
9:15 பிப இல் பிப்ரவரி 16, 2015
நன்றி சேகர்.
11:32 பிப இல் பிப்ரவரி 16, 2015
மிகவும் நன்றாக இருக்கும் சித்ரா. சென்னையானால் வீட்டுத் தோட்டத்திலேயே இருக்கு. புதுசா ஒருநாள் செய்கிறேன். அரிநெல்லிக்காய் சாதம் பகிர்ந்திருக்கிறேன்.
பார். முருங்கை ஸூப் இரும்புச்சத்து மிகுந்தது. பதிவும்,படமும் மிகவும் பிடித்தது. அன்புடன்
11:38 முப இல் பிப்ரவரி 17, 2015
காமாக்ஷிமா,
முன்பு ஒரு பதிவில் சென்னையில் உங்க வீட்டு முருங்கை மரத்தைப் பார்த்தேனே. இளந்தளிருடன் சூப்பரா இருந்துச்சும்மா. ‘செய்து பார்க்கிறேன்’ என்றதில் மகிழ்ச்சிம்மா.
உங்க பதிவைப் போய் பார்த்துட்டு வந்திட்டேன். சூப்பரா இருக்கு. அன்புடன் சித்ரா.
12:12 முப இல் பிப்ரவரி 17, 2015
முருங்கை சூப் பார்க்கவே நல்லா இருக்கே. செய்து பார்க்கிறேன். முருங்கைக்கீரையில் கூட்டும், வதக்கலும் தான் எப்போதும் செய்வோம். இஞ்சியும், பூண்டும் தோலெடுத்து விட்டு சமைத்தால் தான் நல்லது என்று தொலைக்காட்சியில் ஒருமுறை சொன்னார்களே!!
12:12 பிப இல் பிப்ரவரி 17, 2015
ஆதி,
நன்றி ஆதி, இனி தோலெடுத்துவிட்டே சேர்க்கிறேன். இஞ்சியை எப்போதும் தோலெடுத்துவிட்டுத்தான் சேர்ப்பேன்.
எங்க வீட்ல சாம்பார், பொரியல் என செய்ததுபோக மீதி இருந்தால் சூப்’தான். நீங்களும் செஞ்சு பாருங்க.
11:30 பிப இல் பிப்ரவரி 17, 2015
soup super 🙂
12:01 பிப இல் பிப்ரவரி 19, 2015
நன்றி மஹா .