பருப்புகீரை அடை

20140921_145637

கோடையில் ஊருக்குப் போகுமுன் தொட்டிகளில் அறுவடையான பருப்பு கீரைக் குச்சிகள்தான் இருந்தன. திரும்பி வந்து பார்த்தால் …. வாவ் ! எங்கும் படர்ந்திருந்தது.

20140921_164511

அடுத்தடுத்து சில தடவைகள் பறித்தேன். விதை விழுந்து குட்டிகுட்டிச் செடிகள் முளைத்துக் கொண்டே இருந்தன. சந்தோஷமாக இருந்தது. பின்னே இருக்காதா ? ஒரு சிறு கட்டு $ 2:00 க்கு வாங்குவேனாக்கும்.

IMG_5224

அதன்பிறகு குருவிகள் வந்து குத்தாட்டம் போட்டு, முளைத்து வரும் துளிர்களைக் கொத்தி விடுவதால் இவை வளர்வதேயில்லை. இன்னமும் விதைகள் இருந்து, முளைத்துக் கொண்டேதான் இருக்கின்றன, குருவியும் விடாமல் கொத்திக் கொண்டேதான் உள்ளது.

வீட்டுக்கு வெளியே பெரியபெரிய புல்தரைகள், ரோஜாக்கூட்டங்கள், ஆஃப்ரிக்கன் லில்லி என எவ்வளவோ இருந்தும் எங்க வீட்டுக்குத்தான் அவர்களின் விஜயம் எனும்போது நானும் நல்ல மனசோடு ‘செடிகள் போய்ட்டு போவுது’ன்னு விட்டுட்டேன்.

இப்போ அடைக்கு வருவோமா !!

தேவையானவை:

20141016_144140

கேழ்வரகு மாவு _ ஒரு பங்கு
பருப்பு கீரை _ இரண்டு பங்கு
சின்ன வெங்காயம் _ இரண்டு
பச்சை மிளகாய் _ காரத்திற்கேற்ப‌
இஞ்சி _ சிறிது
கறிவேப்பிலை _ கொஞ்சம்
உப்பு _ சுவைக்கு
நல்லெண்ணெய் _ தேவைக்கு

செய்முறை :

வழக்கம்போல கீரையை அரியாமல் நன்றாக அலசி நீரை வடியவிட்டு, சின்னசின்னதா இருக்குமாறு தண்டுப் பகுதியில் ஆங்காங்கே ஒடித்துக்கொள்ள‌வும்.

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை பொடியாக அரிந்து கொள்ளவும்.

மாவை ஒரு பெரிய கிண்ணத்தில் கொட்டி, அதில் உப்பு போட்டு, அதனுடன் அரிந்து வைத்துள்ளவற்றைக் கொட்டி நன்றாகப் பிசையவும்.

20141016_151147

பிசைந்த மாவை உருண்டையாக்கி சிறிது நேரம்(ஒரு 10 நிமி?) ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும்.

பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பிலேற்றி காயவிடவும்.

20141016_155410

க‌ல் காய்வதற்குள் மாவிலிருந்து சிறு உருண்டை அளவிற்கு எடுத்து ஒரு ஈரத்துணியில் வைத்து மெல்லியதாகத் தட்டவும்.

இப்போது கல் காய்ந்ததும் அடையை எடுத்து தோசைக்கல்லில் போட்டு அடையைச் சுற்றிலும் & மேலேயும் எண்ணெய் விட்டு மூடி வேகவிடவும்.

எண்ணெய் கொஞ்சம் தாராளமாக விட்டால்தான் அடை வேகும். இல்லையென்றால் மாவு வேகாமல் வெள்ளையாகவே இருக்கும்.

எண்ணெய் அதிகம் சேர்க்க முடியாதென்றால் ஒரு பேப்பர் டவலில் எண்ணெயைத் தொட்டுக்கொண்டு அடையின் மேல் எல்லா இடத்திலும் படுமாறு தடவிவிடலாம்.

20141016_160054

ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிப்போட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுத்து சூடாக தேங்காய் சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

இட்லித்தூளுடன் சாப்பிட்டுப் பாருங்க. அடையிலுள்ள பச்சைமிளகாயின் காரமும், தூளிலுள்ள மிளகு & காய்ந்தமிளகாயின் காரமும் சேர்ந்து, நீங்களே ‘ஆஹா’ன்னு சொல்லுவிங்க பாருங்க‌.

கிராமத்து உணவு, கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 10 Comments »

10 பதில்கள் to “பருப்புகீரை அடை”

 1. திண்டுக்கல் தனபாலன் Says:

  சத்துள்ள அடை… செய்து பார்க்கிறோம்… நன்றி…

 2. priyasaki Says:

  பருப்புகீரை இதனைப்பார்த்தால் எங்கவூர்ல நாங்க பசலி னு ஒரு கீரையை சொல்வோம் அதுமாதிரி இருக்கு. பார்க்க செய்யனும் போல இருக்கு. சத்தான அடை. ஆனா கிடைக்காதே. கிடைத்தால் கண்டிப்பா செய்றேன் சித்ரா. இட்லிதூளு என்றா இட்லிமிளகாப்பொடியா.

  • chitrasundar5 Says:

   ப்ரியசகி,

   நாங்களும் பசலைக்கீரை’ன்னு ஒன்றை சொல்லுவோம், அது பார்க்க இதே மாதிரிதான், ஆனால் ரொம்ம்ம்பவும் பொடியா, குட்டிகுட்டி பொடி கொடியா, சாஃப்டா இருக்கும். கலர்கூட ப்ரௌன் & பர்ப்பிள் கலந்தாற்போல் இருக்கும். அதை மற்ற கீரைகளுடன் சேர்த்து கலவை கீரையாக செய்வோம்.

   பெரியபெரிய இலைகளுடன் பச்சைபசேல் என கொடிபோன்று படரும் வேறொரு பசலையும் இருக்கு. எல்லாம் அவங்கங்க ஊர் பழக்கத்தில் சொல்லுவதுதான். கோவை பருப்பு கீரை வேறு மாதிரியா இருக்கு.

 3. priyasaki Says:

  எப்படி குருவிகளை படம் பிடிக்கிறீங்க சித்ரா.நான் வீட்டுக்குள் இருந்து கமராவை எடுத்தாலே அவங்க ஓடிறாங்க. அழகாக இருக்கு கீரை & குருவி.

  • chitrasundar5 Says:

   ஹா ஹா ! அதுவா, எல்லாம் தரையில் உருண்டு, புரண்டு எடுப்பதுதான். ஸெல்’லில் எடுத்தால் சரியா வராது. அதனால இதுக்கு காமிராதான் பயன்படுத்துவேன்.

   எப்பவும் கண்ணாடி கதவ கொஞ்சமா திறந்து வச்சிருப்பேன், காமிரா அங்கேயே கிடக்கும். நெட் டோர் மட்டும் சத்தமில்லாம கீழ் பக்கமா லேஸா திறந்து வச்சு எடுப்பேன். blindsஐ எல்லாம் oppositeல திருப்பி வைக்கணும்.நாம லேஸா அசைஞ்சாலோ அல்லது நின்று எடுத்தாலோ ஓடிப் போயிடுவாங்க. மொத்தத்துல அவங்களுக்கு நம்மேல சந்தேகம் வரக்கூடாது. நன்றி ப்ரியசகி.

 4. chollukireen Says:

  பருப்புக்கீரை,அதுவும் நம்தொட்டியில் பறித்த பசுமையானது.. அடைக்கு ஒரு மிருதுத் தன்மையையே கொடுத்துவிடும். மெத்தென்ற கீரை வேறெ இல்லையா?
  ; செய்யும் விதமும் நேர்த்தியாக இருக்கு. இம்மாதிரி அடைகளெல்லாம் மூடிவைத்துச் செய்தால்தான் ஸரியாக வெந்து ருசியை அளிக்கும். பண்றதைப் படிக்கும் போதே கண் முன்னாடி ஓடி வந்து விட்டது.. படமெல்லாம் அழகு.. மனதாலேயே ருசிபார்த்து சாப்பிட்டு விட்டேன். நல்ல உபயோகமானது. நன்றி. அன்புடன்

 5. chitrasundar Says:

  காமாக்ஷிமா,

  கரும்பு இளம் பயிர், வேர்க்கடலை, மரவல்லி வயலில் இருந்து மற்ற கீரைகளுடன் இதையும் சேர்த்து ‘கலவை கீரை’ன்னு பறிச்சு வருவாங்க. இங்கு தனியாவே கிடைக்குது. இந்தக் கீரை மெத்துன்னுதான் இருக்கும், அதனாலேயே ‘தட்டுவதற்கு வருமா ?’ என சந்தேகமாகவே இருந்துச்சு. கடைசியில ரொம்ப சாஃப்டா வந்துடுச்சும்மா. கண்ணாலேயே சாப்பிட்டுப் பார்த்து கருத்திட்டமைக்கு நன்றிம்மா. அன்புடன் சித்ரா.

 6. adhi venkat Says:

  பார்க்கவே சூப்பரா இருக்கே… கிடைச்சா செய்து பார்க்கிறேன்.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: