கத்தரிக்காய் சாதம் / Brinjal Rice

20150226_145919

சுவையான கத்தரிக்காய் சாதம் !

கீழே உள்ளவை எல்லாம் எங்க ஊர் சந்தையில் சென்றமுறை வாங்கிய கத்தரிக்காய், நல்லாருக்கா பாருங்க !! இன்னும் கொஞ்ச நாளில் இதுபோன்ற விதவிதமான கத்தரிக்காய்கள் சந்தைக்கு வர ஆரம்பித்துவிடும். பிறகு எஞ்ஜாய்தான் !

20141108_130729

IMG_1307

IMG_8542

தேவையானவை :

அரிசி _ ஒன்றரை கப்

கத்தரிக்காய் _ நான்கைந்து

உப்பு _ தேவைக்கு
கொத்துமல்லி தழை _ கொஞ்சம்
எலுமிச்சை _ சிறு துண்டு

வறுத்து பொடிக்க‌ : காய்ந்த மிளகய், மிளகு, கொத்துமல்லி விதை, எள்,  கசகசா,  தேங்காய்

20150226_144730

எல்லாமும் தோராயமாகக் கொடுத்துள்ளேன். உங்கள் விருப்பம்போல் கூட்டவோ குறைக்கவோ செய்துகொள்ளவும்.

கொத்துமல்லி தூள் கைவசம் இருந்ததால் தூளாகவே எடுத்துக் கொண்டேன். ஆனாலும் ஃப்ரெஷ் கொத்துமல்லியை வறுத்துப் பொடித்து செய்தால் வாசனை இன்னும் சூப்பரா இருக்கும்.

தாளிக்க :

நல்லெண்ணெய்
முந்திரி
உளுந்து
சீரகம்
காய்ந்தமிளகாய்
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

சாதம் குழையாமல், நன்றாக வெந்து, உதிரிஉதிரியாக இருக்குமாறு வடித்து ஆறவிடவும். நான் புழுங்கல் அரிசியில் செய்தேன்.

தற்போதைக்கு சின்ன கத்தரிக்காய் கைவசம் இல்லாததால் பெரிய கத்தரிக்காயின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டேன்.

வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றில் தேங்காய் தவிர மற்றதை வெறும் வாணலில் சூடு வர வறுத்துத் தனியாக வைத்துக் கொண்டு, கடைசியாக தேங்காயைத் துருவி ஈரம்போக வறுத்து, இவை எல்லாம் ஆறியதும் ஒன்றாக சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு, நறுக்கிய கத்தரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.

வதங்கும்போதே உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொண்டு, இதில் பொடித்து வைத்துள்ள பொடியைப்போட்டு கிண்டி, எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு, கொத்துமல்லியைத் தூவிவிட்டு, இறுதியில் சாதத்தைக் கொட்டி கிண்டி, உப்பு & காரம் சரிபார்த்து, இளந்தீயில் சிறிது நேரம் மூடிவைத்து, சாதம் சூடு ஏறி மசாலாவுடன் நன்றாகக் கலந்ததும் இறக்கி சாப்பிட்டுப் பார்த்து ……

20150226_120647

……….. எப்படி வந்தச்சுன்னு வந்து சொல்லுங்களேன் !!

சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 10 Comments »

10 பதில்கள் to “கத்தரிக்காய் சாதம் / Brinjal Rice”

 1. chollukireen Says:

  இதற்கு வாங்கிபாத் என்ற பெயரும் உண்டு. எப்படி வந்துச்சா? நன்றாகவே வந்துள்ளது.. துளி மஞ்சள் போட்டிருக்கலாம். கத்திிரிக்காயை வதக்க ஆரம்பிக்கும் போதே ஒரு சொட்டு எலுமிச்சையைச் சேர்த்தால் காய் கருக்காது. வாஸனை இவ்விடம் வரை வருகிறது கத்தரிக்காய் சாதம். அந்த நடு ப்ளேட் கத்தரிக்காய் பிஞ்சாகவும் அழுத்தமாகவும் இருக்கும். அதில் செய்தது தானே? அன்புடன்

  • chitrasundar5 Says:

   காமாக்ஷிமா,

   ஒரு தடவ பெங்களூர்(முதல் முறையா வெளியூர்) போயிருந்தபோது மெனுவில் ‘வாங்கிபாத்’ என்ற பெயரைப் பார்த்ததும் ஆஹா, ஏதோ புது பெயரா இருக்கேன்னு வாங்கிய பிறகுதான் தெரிந்தது அது கத்தரிக்காய் சாதம்னு. மறக்க முடியாத நிகழ்ச்சி அது.

   ஆமாம்மா, துளி மஞ்சள்தூள் போட்டிருந்தால் பளிச் என இருந்திருக்கும். நான்தான் போடவில்லை. கடைசியில் துளி சர்க்கரை மட்டும் சேர்த்தேன்.

   “அந்த நடு ப்ளேட் கத்தரிக்காய் பிஞ்சாகவும் அழுத்தமாகவும் இருக்கும். அதில் செய்தது தானே?” _______ அனுபவத்தை என்ன சொல்ல !! இந்தக்காய் பிஞ்சாக இருந்தாலும் கொஞ்சம் அழுத்தமாத்தான் இருந்தது. இது பெரிய கத்தரிக்காயில் செய்தது. அன்புடன் சித்ரா.

 2. priyasaki Says:

  ஆ.வ்வ் சித்ரா எனக்கு பொ..ஆமையா இருக்கு. எங்களுக்கு பெரீய்ய்ய்ய சைஸ் கத்திக்காதான்.ஏசியன் கடைக்குப்போனாத்தான் எங்க ஊர் கத்திக்கா கிடைக்கும். சூப்ப்ப்பரா இருக்கு கத்தரிக்கா. கடைசி கத்தரிக்கா படம் வித்தியாசமா இருக்கு.
  கத்தரிக்காய் சாதம் ம்.ம்ம் யம்மி. பார்க்க நல்லாயிருக்கு. அப்பளம்,பக்கத்தில் iஇன்னொன்னு என்ன?.

  • chitrasundar5 Says:

   ப்ரியசகி,

   அவ்வ்வ், இப்படி பொறாமைப்பட்டால் போன சனிக்கிழமை வாங்கிய கரும்பை எப்படி போடுவது ? ஹா ஹ் ஹா !

   கடைசி கத்தரிக்கா நீள கத்தரிக்காயின் பிஞ்சு கத்தரிக்கா. நாங்க இருக்குமிடம் ஒரு குட்டி சௌத்ஏஷியா மாதிரிதான். அதனால் பிரச்சினையில்லாமல் எல்லாமும் கிடைக்கிறது.

   இந்த சாதம் பெரிய கத்தரிக்காயில் செய்ததுதான். அது சேப்பங்கிழங்கு பொரியல். நன்றி ப்ரியசகி.

 3. MahiArun Says:

  கத்தரிக்காய்கள் சூப்பரா இருக்கு சித்ராக்கா..எனக்கு இப்படி சாதவகைகள் அவ்வளவா புடிக்காது..அதனால் செய்வதும் குறைவு. 😉
  2-3 சின்னக்கத்தரிக்காய் இருக்கு..நாளைக்கு செய்து பார்க்கிறேன்.

  • chitrasundar5 Says:

   ஆமால்ல‌, குட்டிகுட்டி காய்களைப் பார்க்கும்போது மனசு கேக்காம நிறைய வாங்கிவந்திடுவேன். புளிசாதம் தவிர மற்றவை எனக்கும் அவ்வளவா பிடிக்காதுதான். ஆனால் கத்தரிக்காயில் எது செய்தாலும் பிடிக்கும்.

 4. adhi venkat Says:

  roshnikku lunch box katta ithai suttukiren….:))

 5. Punitha Says:

  !!!HAPPY BIRTHDAY MOM!!!!:D You’re getting old haha Have a HAPPY rest of the Day! ❤

 6. Leo Says:

  Hi ChitraSundar,
  Can you the name the varieties of native brinjal showed in the image please?


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: