புளி சேர்த்த பருப்புகீரை மசியல்

20150509_170306

பருப்புடன் கீரையின் சுவையைப் போலவே புளியுடன் சேர்த்து செய்யும்போதும் சுவையாகவே இருக்கும்.

20150508_150555

வீட்டில் பறித்த பருப்புகீரை

கொல்லியில் இருந்து எடுத்து வரும் கலவைக் கீரையில் இதுவும் ஒரு பங்கு இருக்கும். கலவை கீரையை புளி சேர்த்துதான் கடைவார்கள். முன்னெல்லாம் கிராமத்தில் பருப்பு வாங்க முடியாததாலோ என்னவோ, முருங்கை போன்ற ஒரு சிலவற்றைத் தவிர‌ எந்தக் கீரையாக இருந்தாலும் இப்படித்தான் செய்வார்கள்.

அதைப் போலவேதான் இதையும் செய்தேன், சூப்பராகவே இருந்தது.

20150508_145147

வீட்ல பறிச்சேன்னு இப்போ நம்பித்தானே ஆகணும் !

சேர்க்க வேண்டிய பொருட்களைக் கொடுத்துள்ளேன். அளவுகளை எல்லாம் உங்கள் சுவைக்கேற்ப‌ கூட்டிக் குறைத்து சேர்த்துக்கொள்ளவும்.

தேவையானவை:

பருப்பு கீரை _ சிறு கட்டு
சின்ன வெங்காயம் _ 5
தக்காளி _ 1
முழு பூண்டு _1
புளி _ சிறு கோலி அளவு
பச்சை மிளகாய் _ 1

தாளிக்க :

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
மிளகு _ நான்கைந்து
சீரகம்
காய்ந்தமிளகாய் _ 1
பெருங்காயம்

செய்முறை :

கீரையை ஆய்ந்து நீரில் அலசி எடுத்து வைக்கவும்.

ஒரு கனமான சட்டியில் 1/2 கப் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி கொதி வந்ததும் வெங்காயம், தக்காளி, இரண்டு பூண்டுப்பல், பச்சை மிளகாய், புளி இவற்றையெல்லாம் போட்டு மீண்டும் கொதி வந்ததும் கீரையைப் போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

கீரை சீக்கிரமே வெந்துவிடும். குழைய வேண்டாம்.

ஒரு வாணலில் எண்ணெய் விட்டு தாளித்து, எண்ணெய் நீங்கலாக மீதியைக் கீரையில் கொட்டவும்.

அந்த மீதமான எண்ணெயில் மீதமுள்ள பூண்டு பொடியாகவோ அல்லது தட்டிப்போட்டோ நன்றாக வதக்கிக் கீரையில் கொட்டி ஆறியதும் மிக்ஸியில் போட்டு மைய மசிக்காமல் ஓரளவுக்கு மசித்துக்கொள்ளவும்.

20150509_151123

சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். துவையல் மாதிரி தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.

Advertisements
கிராமத்து உணவு, கீரை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 6 Comments »

6 பதில்கள் to “புளி சேர்த்த பருப்புகீரை மசியல்”

  1. chollukireen Says:

    புளி சேர்த்து மசியல் செய்யும்போது பெருங்காயத்துடன் வாஸனைக்கு துளி வெந்தயம் தாளித்துக் கொட்டுவேன் நான். அதே மாதிரி புளி சேர்த்து துவையல் செய்யும் போதும் துளி சேர்க்கலாம்.. சென்னை சென்ற போது பருப்புக்கீரை நிறைய கிடைத்தது. வீட்டுக்கீரை மசியல் சூப்பர். அன்புடன்

    • chitrasundar5 Says:

      காமாக்ஷிமா,

      இதுவரைக்கும் புளிச்ச கீரைக்குத்தான் வெந்தயம் சேர்த்து செய்திருக்கிறேன். அடுத்த தடவ சமைக்கும்போது இதற்கும் சேர்த்து செய்கிறேன். பருப்பு கீரையைப் பார்த்ததும் சென்னையின் நினைவுகளா 🙂

      வீட்ல பறிச்சு செய்யும்போது கொஞ்சம் விசேஷமாகத்தான் தெரிகிறது. அன்புடன் சித்ரா.

  2. priyasaki Says:

    இந்த கீரை கேள்விப்படவில்லை சித்ரா. ஒருவேளை எங்க ஊரில் வேறு பெயரோ.பார்த்த ஞாபகமும் இல்லை.சரி பரவாயில்லை.இந்த குறிப்பை வேறு கீரைக்கு செய்துபார்க்கலாமோ. எங்க ஊர்ல பயிரி என ஒரு கீரை இருக்கு.இதேமாதிரி இலை.ஆனா ரெம்ப குட்டியா இருக்கும்.பருப்பு சேர்த்து அம்மா வைப்பா. அதில் செய்யலாமோ என யோசிக்கிறேன். ஊருக்கு போனால் தான் உண்டு. நன்றி சித்ரா.

    • chitrasundar5 Says:

      ப்ரியா,

      நீங்க சொல்ற ‘பயிரி’ கீரையாதான் இருக்கணும். எங்க ஊரிலும் இது குட்டிகுட்டியாதான் இருக்கும். நாங்களும் இதை ‘பயிறு கீரை’ன்னுதான் சொல்லுவோம்.

      வேறு கீரையிலும் செஞ்சு பாருங்கோ, சூப்பராவே இருக்கும்.

  3. MahiArun Says:

    கீரையுடன் புளி சேர்த்து எங்க வீட்டில் இதுவரை சமைத்தது கிடையாது, வெளியே எங்கும் ருசித்ததும் கிடையாது! கீரை தனியா பொரியல், அல்லது பருப்பு சேர்த்து, முட்டை சேர்த்து செய்வதுண்டு. இது ரொம்ப புதுசா இருக்கு.

    செய்து பார்க்க தகிரியம் லேது…ஹிஹி..ஹி! அந்த குட்டி பவுல்-ஐ இங்க அனுப்பினா டேஸ்ட் பார்த்துட்டு அப்புறமா நான் செய்து பார்க்கிறேன். ஹஹஹ்!! ஹா!

    • chitrasundar5 Says:

      எங்க வீட்ல கீரையுடன் புளி சேர்த்து செய்தால் கடகடனு காலியாயிடும். நல்ல டேஸ்டா இருக்கும். கீரையோட முட்டை சேர்க்கிறது எனக்கு புதுசா இருக்கு.

      இந்நேரம் குட்டி பௌல், கைக்கு வந்திருக்குமே


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: