பூண்டு ஊறுகாய் / Garlic pickle

 

20150724_164154

உங்கள் விருப்பம்போல், அவரவர் சுவைக்கு ஏற்ப அளவுகளைக்  கூட்டியும் குறைத்தும் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.

தேவையானவை:

பூண்டு _ ஒரு கிண்ணம் (இதை மூன்று பங்காகப் பிரித்துக்கொள்ளவும், மூன்றில் இரண்டு பங்கு அரைக்க & ஒரு பங்கு ஊறுகாயில் முழுதாக சேர்க்க)
புளி _ பெரிய கோலி அளவு
கடுகு _ ஒரு டீஸ்பூன்
வெந்தயம் _ ஒரு டீஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் _ தேவைக்கு
பெருங்காயத்தூள்
உப்பு
நல்லெண்ணெய் _ தேவைக்கு ஏற்ப. கொஞ்சம் அதிகமாக சேர்த்தாலும் சுவை அதற்கு ஏற்றார்போல் கூடுதலாகவே இருக்கும்.

செய்முறை:

20150722_164106

பூண்டிதழ்களைத் தோலிரித்து நுனியை நறுக்கிவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

பூண்டு அதிகமாக இருந்து உரிக்கவும் கஷ்டமாக இருந்தால் பூண்டிதழ்களை ஒரு எவர்சில்வர் தட்டில் பரப்பிவிட்டு சிறிது நேரம் வெயிலில் வைத்தால் எளிதாக உரித்துவிடலாம்.

20150722_171410

வெறும் வாணலியை அடுப்பிலேற்றி கடுகு, வெந்தயம் இரண்டையும் தனித்தனியாக கொஞ்சம் கவனமாகத் தீய்ந்து விடாமல் வறுத்துக்கொள்ளவும். தீய்ந்தால் ? …… ஊறுகாய் கசக்கும், அவ்வளவே !! தீய விட்டுடுவோமா என்ன🙂

20150722_172040

இவை ஆறியதும் கரகரப்பாகப் பொடித்துக்கொள்ளவும்.

20150722_172624

புளி & இரண்டு பங்கு பூண்டு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.

20150722_173308

வாணலை அடுப்பிலேற்றி, எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மீதமுள்ள ஒரு பங்கு பூண்டு போட்டு வதக்கவும். சிறிது நேரம் வதக்கவும். வதக்கினால்தான் பூண்டு வேகும். பூண்டு நீளவாக்கில் நறுக்கியும் போடலாம்.

கறிவேப்பிலை புதிதாக இருந்ததால் சேர்த்திருக்கிறேன். விருப்பமிருந்தால் சேர்க்கலாம்.

20150722_173632

இப்போது அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்துக் கிண்டவும். பூண்டின் பச்சை வாசம் போகும்வரை வதக்கவும். அவ்வளவு சீக்கிரம் போய்டுமா என்ன ! கொஞ்சம் விடாமல் கிண்டினால்தான் அடியில் பிடிக்காமல் இருக்கும்.

20150722_17390020150722_174057

எண்ணெயும் பிரிந்து வரும். இப்போது மிளகாய்த்தூள் & உப்பு சேர்த்து உப்பு & காரம் சரிபார்த்து , வதக்கி,

20150722_174535

பெருங்காயம் & பொடித்து வைத்துள்ள கடுகு & வெந்தயப் பொடியைச் சேர்த்துக் கிண்டி அடுப்பிலிருந்து இறக்கவும்.

20150722_175412

நன்றாக ஆறிய பிறகு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

20150722_175446

தயிர் சாதம், இட்லி & தோசை என எல்லாவற்றுக்கும் சூப்பரா இருக்கும்.

ஊறுகாய் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 2 Comments »

2 பதில்கள் to “பூண்டு ஊறுகாய் / Garlic pickle”

  1. chollukireen Says:

    பூண்டு வதங்கறவாஸனை தூக்கியடிக்கிரது. கொஞ்சமா மஞ்சப்பொடியும் போடு. எண்ணெய்காரம் , இதுவும் எல்லாவற்றுடன் நல்ல ஆரோக்யத்தைக் கொடுக்கும் வஸ்து. சாதம் சிறிது கூட சேர்த்து செய். ஊறுகாய் ருசியில் காலியாகிவிடும். இங்கேயும் கொஞ்சம் பார்ஸல் அனுப்பு. டேஸ்ட் பண்ண .. சின்ன வெங்காயத்திலும் செய்யலாம். அதையும் செய்து போடு. நல்ல ருசி. அன்புடன்

    • chitrasundar5 Says:

      காமாஷிமா,

      வாசனை வந்ததா, சந்தோஷம் !! மஞ்சள் பொடி சேர்த்திருக்கலாம். அடுத்த தடவை செய்யும்போது சேர்த்துவிடுகிறேன். சாதம் கொஞ்சம் கூடத்தான் செலவாகிறது🙂 ஓ, சின்ன வெங்காயத்திலும் இதை செய்யலாமா!

      ஊறுகாயுடன் சுடச்சுட புது இட்லியும் அனுப்பியிருக்கேன், டேஸ்ட் பண்ணிப் பாருங்கோ ! அன்புடன் சித்ரா.


மறுமொழி இடுக‌

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: