நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த வழியாக ‘வாக்’ போனபோது இவர்கள் (Quail Sculptures) எல்லோரும் டிசம்பர் & ஜனவரி குளிருக்கு ஸ்கார்ஃப் கட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் க்ளிக்கிட்டேன்.
எப்படி இருந்த நான்…
இப்படி ஆயிட்டேன்!!!
இங்குள்ள அழகான தெருக்களில் இதுவும் ஒன்று.சரியாக ஒரு மாதத்திற்குமுன் எவ்வளவு அழகாக இருந்த இந்தத் தெரு இப்போது இலைகளெல்லாம் உதிர்ந்து வெறும் கிளைகளுடன் இப்படி இருக்கிறது! இதுவுமே ஒரு அழகுதான்.
சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்,’கவலை வேண்டாம்,இன்னும் இரண்டு மாதங்களில் பூத்துக்குலுங்கி, இளந்தளிர்களுடன் அழகாகும்போது மீண்டும் படமெடுத்து அதையே ஒரு பதிவாக்கிவிடுகிறேன்’,என்று.
படத்தைப் பார்த்ததும் ஒன்றும் புரியவில்லைதானே.படங்களை Zoom in செய்து பார்க்கவும்.நான் பிடித்ததை உங்களாலும் (கண்களால்தான்) பிடிக்க முடியுதான்னு பார்க்கலாம்.
இந்தப் படங்கள் Thanksgiving day (11/22/2012)அன்று வாக்கிங் போகும்போது வழியிலுள்ள பார்க்கின் உள்ளே சென்றபோது சிக்கியவை.
ஷ்ஷ்ஷ்,நல்லா தூங்கறாங்க.சத்தம் போடாமல்(பின்னூட்டம் மட்டும் கொடுத்துவிட்டு)சென்றுவிடுவோமே.
இலையுதிர் காலம் வரும்போதே மரங்களிலுள்ள இலைகள் எல்லாம் பழுத்து,நிறம் மாறி,உதிரத் தொடங்கிவிடும். நிறம் மாறிய சமயம்,எல்லா மரங்களும் பச்சை,மஞ்சள்,ஆரஞ்சு,சிவப்பு என கலந்து,பார்க்க அழகாக இருக்கும்.ஒரு காற்று,லேசான தூறல் வந்தால் போதும், இலைகள் உதிர்ந்துவிடும்.அதன்பிறகு வெறும் கிளைகள், குச்சிகளாகத்தான் காட்சியளிக்கும்,வசந்தகாலம் வரும்வரை.
இப்போது ஒரு வாரமாக லேசான காற்று,சிறுசிறு தூரல்கள்.இவற்றினால் இலைகள் முழுவதுமாக உதிர்வதற்குள் படமெடுத்துவிட வேண்டுமென்று இன்று வாக்கிங் போனபோது எடுத்த படங்கள் இவை.பிடிச்சிருக்கான்னு வந்து சொல்லுங்க.வழக்கம்போல் படத்தைப் பெரியதாக்கிப் பார்த்தால்தான் அதன் அழகு தெரியும்.
வழியில் ஒரு பூங்காவில் உள்ள மரங்களூடே சூரிய ஒளி நுழையும் அழகான காட்சி.
தெருவின் நடுவில் நின்று எடுத்திருந்தால் அழகாக வந்திருக்கும்.கார்கள் போய்க்கொண்டு இருந்ததால் ஒரு ஓரமாக நின்று எடுத்த படம்.நம்ம ஊரு வேப்பிலை மரம் மாதிரியே இருக்கில்ல!
இந்தத் தெரு எவ்வளவு அழகா இருக்கு!
தெருவின் ஓரத்தில் உள்ள மரங்கள்.மீதமுள்ள இலைகள் இன்று உதிரலாமா இல்லை நாளையா? என்பதுபோல் உள்ளது.
இவை எங்க அப்பார்ட்மெண்டில் உள்ள மரங்கள். சில மரங்களின்,இலைகளின் நிறம் மாறிக்கொண்டும்,நிறம் மாறியவை உதிர்ந்துகொண்டும் உள்ளன.
சிறிது நேரம் கழித்து
மகள் Oneday Field trip க்காக இன்று காலையிலேயே (6:45) பள்ளிக்குக் கிளம்பியாச்சு.Bye சொல்ல வெளியில் வந்தால் வானில், இருட்டில் பௌர்ணமி நிலவு தகதகவென!இரண்டு பேரும் சேர்ந்து ரசித்துவிட்டு,அவள் போனதும் காமிராவில் Flash off செய்துவிட்டு படம் பிடித்துக்கொண்டேன்.நீங்களும் பாருங்க எங்க ஊர் நிலா எப்படி இருக்குன்னு!
பொதுவாக செடியில் முதலில் துளிரும் தொடர்ந்து பூ,காய்,கனி எனவும்தான் பார்த்திருப்போம்.ஆனால் இங்கு வந்தபிறகு எல்லாமே தலைகீழாக இருந்தது. முதலில் பூ,அடுத்து துளிரும்,இலையுதிர் காலத்தில் இலைகளின் நிறம் மாறி அதுவே ஒரு அழகாகவும் இருந்தது.
எங்கள் வீட்டின் எதிரிலுள்ள மரம்.ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு மாறுவதைப் படம்பிடித்து வைத்திருந்தேன். ப்ளாக் இருப்பதால் இதில் போட்டுவிட்டேன்.
வசந்தம். (கொஞ்ச நாட்களுக்கு முன் பூக்கள் பூக்க ஆரம்பித்தது.படத்தைக் கிளிக் செய்து பார்த்தால் பூக்கள் பூக்க ஆரம்பிப்பது தெரியும்.)
பூக்கள் பூத்துவிட்டன. ( தற்சமயம் )
கோடை (இன்னும் கொஞ்ச நாளில்)
இலையுதிர் காலம். ( கோடை முடிந்த பிறகு,ஒரு காற்று அடித்தால் போதும்.இலைகள் உதிரத் தயாராகவுள்ளன.)
குளிர் காலம் ( இலைகள் உதிர்ந்து,மரம் காய்ந்துவிட்டதுபோல், பார்க்கவே பரிதாபமாக)