சாத்தணூர் அணையில் சில பறவைகள்,விலங்குகள் உள்ளன.அவற்றின் படங்கள்தான் கீழே உள்ளன.இப்பதிவுடன் சாத்தணூர் அணையின் தொடர்ச்சி முற்றும்.
Sathanur Dam க்கு போறவங்க முதல் வேலையாக இந்த நிலவின் முன்னால் உள்ள stone bench ல் உட்கார்ந்து ஃபோட்டோ எடுத்துப்பாங்க.நாங்களும் எடுத்துக்கொண்டோம்.
சகோதர,சகோதரிகள் அங்கே சந்தித்துக்கொண்டதால்,நாங்க எல்லோரும் உட்கார்ந்து கதை பேச ஆரம்பித்துவிட்டோம். வீட்டுக் குட்டீஸ்களின் பாரவையில் கீழேயுள்ள படங்கள்.
தூரத்தில் தெரியும் காந்திசிலை! ஒரு பகுதியில் சிறு கோட்டை மாதிரி இருந்தது.
மாலை வரும்வரை சுற்றிவர,ஓய்வெடுக்க இடங்கள் உள்ளன.
ஒருசில பழைய படங்களின் பாடல் காட்சிகளில் இந்த அணையைப் பார்த்திருப்பீர்கள்.
2009 ல் இந்தியாவுக்கு சென்றபோது ஒருசில இடங்களுக்கு சென்று வந்தோம். அதில் ஒன்றுதான் திருவண்ணாமலைக்குப் பக்கத்திலுள்ள சாத்தணூர் அணை.நல்ல கோடை காலத்தில் அங்கு சென்றபோது இதமாக இருந்தது. அவ்விடம் முழுவதுமே சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருந்தது.
நிறைய படங்கள் எடுத்தேன்.எடுத்தாலும் வீட்டு குட்டீஸ்கள் அவற்றில் இருந்ததால் அவர்கள் இருப்பதைத் தவிர்த்து,ஒருசிலவற்றை மட்டுமே பதிவிடுகிறேன்.
போகும்போதே வழியில்,ஒரு ஊரில் நின்றிருந்த சில ஆடுகள்.
தொலைவில் வயலில் மேலும் சில ஆடுகள்.
நுழைவுச்சீட்டு வாங்கிக்கொண்டு உள்ளே சென்றபோது நாய் ஒன்று படுத்துக்கொண்டு அழகாக போஸ் கொடுத்தது.
ஆங்காங்கே படத்திலுள்ளதுபோல் அழகிய வேலைப்பாடுகளுடன்கூடிய காட்சிகள் இருந்தன.
குழந்தைகள் விளையாட நிறைய இடங்கள் இருந்தன.அவற்றில் ஒன்றுதான் கீழே படத்திலிருப்பது..
கொஞ்ச தூரம் உள்ளே போனதுமே நல்ல மழை.எல்லா இடங்களும் நனைந்துவிட்டது.இவ்வளவு தூரம் வந்தும் சுற்றிப்பார்க்க முடியாமல் போகுமோ என நினைத்தால்,சிறிது நேரத்திலேயே மழை நின்றுவிட்டது.பிறகு மாலைவரை இருந்து சுற்றிப்பார்த்தோம்.
அடுத்த பதிவில் மேலும் சில படங்களுடன்.