மாங்காய் இனிப்பு பச்சடி / Mango sweet pachadi

mango pachadi

இனிப்பு,காரம்,புளிப்புடன் பச்சைப் பயறும் சேர்ந்திருப்பதால் இந்தப் பச்சடியின் சுவை சூப்பராக இருக்கும்.ஒரு தடவை செய்துதான் பார்ப்போமே!

mango

இங்கு எப்போதும் பழ மாங்காய் மாதிரியேதான் கிடைக்கும். ஒருசில சமய‌ங்களில் மட்டும் நம்ம ஊரில் உள்ளது மாதிரி நல்ல காய் மாங்காவாகக் கிடைக்கும். இவை சாம்பார், fish & dry fish குழம்பு, பச்சடி போன்றவை செய்ய நன்றாக இருக்கும். இப்போது இந்த மாங்காய்கள் வந்துகொண்டிருப்பதால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வோமே !!

தேவையானவை:

மாங்காய்_ 1
பச்சைப் பயறு_ 1/4 கப்
பெருங்காயம்_துளிக்கும் குறைவாக‌
வெல்லம்_ ஒரு கப்
மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள்_துளியளவு
உப்பு_துளியளவு

தாளிக்க:

எண்ணெய்
கடுகு
உளுந்து

செய்முறை:

மாங்காயைக் கழுவிவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ள‌வும்.

ஒரு பாத்திரத்தில் பச்சைபயறுடன் மஞ்சள்தூள்,பெருங்காயம் சேர்த்து பயறு வேகுமளவு தண்ணீர் ஊற்றி குழையாமல், மலர வேக வைக்கவும்.

பயறு வெந்ததும் அதில் மாங்காய் துண்டுகள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து கிண்டிவிட்டு மாங்காய் வேகும்வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது கரையும் அளவு தண்ணீர் விட்டு சூடுபடுத்தவும்.

வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும் தூசு,மண் இல்லாமல் வடிகட்டி வெந்த மாங்காய் பருப்புடன் சேர்த்துக் கிண்டிவிட்டு எல்லாம் சேர்ந்து இரண்டு கொதி கொதித்ததும் இறக்கி, கடுகு,உளுந்து தாளித்துக்கொட்டி கிளறி விடவும்.

 

mango pachadi

 
இப்போது இனிப்பு,புளிப்பு, காரம் கல‌ந்த மாங்காய் பச்சடி சாப்பிடத் தயார்.

 

தயிர் பச்சடி / Thayir Pachadi

pachadipachadi

தேவையானவை:

தயிர்_ஒரு கப்
சின்ன வெங்காயம்_5 அல்லது பெரிய வெங்காயம்_பாதி
வெள்ளாரி பிஞ்சு_பாதி
கேரட்_பாதி
பச்சை மிளகாய்_1
இஞ்சி_சிறுதுண்டு
பெருங்காயம்_பெயருக்கு சிறிது
கறிவேப்பிலை_ஒன்றிரண்டு இலைகள்
கொத்துமல்லி தழை_கொஞ்சம்

தாளிக்க:

எண்ணெய்
கடுகு

செய்முறை:

தயிரில் சிறிது உப்பு சேர்த்து கட்டிகளில்லாமல் கடைந்துகொள்ளவும்.

அதனுடன் கொடுத்துள்ள எல்லாப் பொருள்களையும் விருப்பமான அளவில் நறுக்கி சேர்த்து கலந்துகொள்ளவும்.

துளியளவு எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கலக்கி பறிமாறவும்.

பிரியாணி,புலாவ்,கலவை சாதம் இவை எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.

இந்த வெயில் நாளுக்கு அப்படியேகூட சாப்பிடலாம்.

பச்சடி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , , , , . 10 Comments »

என்னவாக இருக்கும்?

யோசித்து வையுங்கள்,நாளை பார்க்கலாம்.

   

 

purple,pink,red எல்லாமும் கலந்த வித்தியாசமான ஒரு நிறத்தில் வெண்டைக்காயைப் பார்த்ததும் ப்ளாக்கில் போட்டால் எல்லோரும் ‘வாவ்’ சொல்லுவீங்கன்னு நெனச்சித்தான் படத்தைப் போட்டேன்.இந்தக் காயை  ஏற்கனவே எல்லோரும் பார்த்துவிட்டீர்கள் என்றதும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

இதை வைத்து ஒருசில சமையல்கள் செய்தாச்சு.பதிவுகளும் இங்கேயுள்ளன.இப்போது எளிதில் செய்யக்கூடிய பச்சடியைப் பார்க்கலாம்.

வெண்டைக்காய் தயிர் பச்சடி

தேவையானவை:

வெண்டைக்காய்_சுமார் 10
பச்சைமிளகாய்_1
தயிர்_1/2 கப்
உப்பு_சிறிது

தாளிக்க:

எண்ணெய்,கடுகு

செய்முறை:

வெண்டைக்காயை மெல்லிய வில்லைகளாக்கவும்.பச்சைமிளகாயை விருப்பத்திற்கேற்ப அரிந்து வைக்கவும்.ஒரு வாணலில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பச்சைமிளகாய்,வெண்டைக்காய் இரண்டையும் சிறிது உப்பு தூவி,வதக்கி, தயிரில் சேர்க்கவும்.

வெண்டைக்காய் பச்சடி என்றாலே சாப்பிடும்போது புதிதாக செய்தால்தான் நன்றாக இருக்கும்.முன்னமே செய்து வைத்தால் சாப்பிடும்போது கொஞ்சம் கொழகொழப்பு தெரியும்.

முதலில் தயிரை தாளித்து வைத்துக்கொண்டு சாப்பிடப்போகும்போது வெண்டைக்காயை வதக்கியும் சேர்க்கலாம்.

வெண்டைக்காயை அதன் கொழகொழப்பினால் குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு படத்திலுள்ளதுபோல் நறுக்கிக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்..வழவழப்பும் தெரியாது.

பச்சடி இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . 9 Comments »