ஸ்ட்ராபெர்ரி/Strawberry_வருடம் முழுவதும் மார்க்கெட்டுக்கு வரும் பழம் இது.இரண்டாவது படத்தைப் பாருங்க, எவ்வளவு ஜூஸியா இருக்குன்னு!
இது blood orange.சீஸன் சமயத்தில் ஒன்றிரண்டு மட்டும் வாங்குவேன். சாதாரண ஆரஞ்சிலிருந்து சிறிது வித்தியாசமாக இருக்கும்.
எத்தனையோ வெரைட்டியில்,நிறங்களில் ஆப்பிள் வந்தாலும் நாங்கள் வாங்குவது Fuji ஆப்பிள்.அதிக புளிப்பில்லாமல் ஜூஸியா இருக்கும்.அது இல்லையென்றால் gala வகை.Pink lady கூட உண்டு.
சீஸன் ஆரம்பிக்கும்போது நல்ல சிவப்பு நிறத்தில் வரும்.இப்போது கலர் மாறி விட்டது.நாங்கள் ரெகுலராக வாங்கும் கடையில் இந்த வாரத்துடன் விற்பனை முடிந்துவிட்டது.அங்கேயே உள்ள வேறு கடைகளில்தான் இனி வாங்க வேண்டும்..ஆப்பிளுக்கு அடுத்து இந்தக் கடையில் ப்ளாக்பெர்ரி,ப்ளூ பெர்ரி வரும்.ம் ம் யம்மி!
சீஸன் சமயத்தில் தற்சமயம்
இது அவகாடோ.இதுவும் வருடம் முழுவதும் மார்க்கெட்டுக்கு வரக்கூடியது.உள்ளே உள்ள சதைப்பகுதியை எடுத்து சர்க்கரை சேர்த்து பிசைந்து அல்லது துண்டுகளாக்கி சர்க்கரையில் புரட்டி எடுத்து சாப்பிட சூப்பரா இருக்கும்.இல்லை அப்படியேகூட சாப்பிடலாம். எங்க வீட்டில் நான் மட்டுமே சாப்பிடும் பழம் இது.
மாங்காய்,புளியங்காய் போன்றவை சீஸன் முடிந்தபிறகு காய்க்கும்போது அதன் காய்கள் புளிப்பே இல்லாமல், சாப்பிட சூப்பரா இருக்கும், ‘கரட்டுக்காய்’னு சொல்லுவோம்.அந்த மாதிரிதான் இந்தப்பழமும்.இந்த ப்ளம்ஸ் பழங்கள் சீஸன் முடியும்போது வருபவை.இரண்டு நாட்களில் பழுத்துவிடும்.
இது நம்ம ஊர் பேயம்பழம் மாதிரியான சுவையில் சூப்பரா இருக்கும்.கோடையில் மட்டுமே வரும் கடையில் இது கிடைக்கும்.விலையோ எக்கச்சக்கம்.
இது ஸ்வீட் லெமன்.ஊறுகாய் போட்டால் நன்றாகவே இல்லை, குப்பைக்குத்தான் போனது.மீதமானதை நறுக்கி நறுமணத்துக்காக ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டேன்.
கரும்பும் ஏறக்குறைய வருடம் முழுவதும் வந்துகொண்டுதான் இருக்கிறது.ஒரு துண்டு $3.இரண்டு துண்டுகள் $5.
வீட்டுக்குப் போய் கடித்து / நறுக்கி சாப்பிடுவதில் சிரமமா? அல்லது இதையெல்லாம் செய்யும்போது கார்பெட் அழுக்காகிவிடும் என நினைத்தாலும் ப்ளாஸ்டிக் கவரில் உள்ளதை வாங்கிக்க வேண்டியதுதான்!ஆனாலும் கடித்து சாப்பிடுவதில் ஒரு சுவை உண்டு.